சிரி... சிரி... சிரி... சிரி...
""காலண்டர் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்ன்னு
போட்டதுக்கு ஏன், எல்லாரும் சண்டை போடுறாங்க?''
""பின்னே என்னங்க, இந்த வருடம் காலண்டர்
ஒன்று வாங்கினால்... போன வருடக் காலண்டர் ஒன்று இலவசமாம்!!!''
- சீனி. செந்தில்குமார், தேனி.
""தலைவரே, பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
""யார் சொன்னா, டி.வி. மெகா சீரியல் தயாரிப்பாளர்கள் எல்லாரும் நல்லாதானே இருக்காங்க!''
- தீபிகா சாரதி, சென்னை.
அலுவலகத்தில் மேல்அதிகாரி: ""ஏன் லேட் ?''
அலுவலர்: ""வீட்டுல, மாமியாரையும் மருமகளையும் சமாதானம் பண்றதுக்குள்ள
கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சார்!''
"" என்னை சமாதானப் படுத்தணும்னு... நீ இதைச் சொல்லலையே?''
- வி. ரேவதி, தஞ்சாவூர்.
"" பட்டிமன்றத்துல "பானையில வெச்ச பொங்கல் சிறப்பா?' - "குக்கர்ல வெச்ச பொங்கல் சிறப்பாங்கற' தலைப்புக்கு
நடுவர் என்ன தீர்ப்பு சொன்னார்?''
""பொங்கலை சாப்பிட்ட பிறகுதான் தீர்ப்பு சொல்ல
முடியும்ன்னு சொல்லிட்டார்!''
- அ. செல்வ குமார், திருவொற்றியூர்.
"" நகை வாங்குங்க, டிரஸ் வாங்குங்க, ஸ்வீட் வாங்குங்கன்னு விளம்பரத்துல சொல்லுறதை எல்லாம் வாங்குறியே...
எப்படி'டி முடியுது?''
""சிம்பிள்! கடனும் வாங்குறேனே!''
- சாய், சென்னை