கண் கலங்கிய கண்ணதாசன்!

சிலரது மறைவிற்காக கவிஞர் கண்ணதாசன் உருகி உருவாக்கும் இரங்கல் கவிதைகள் பிறக்கும்போது கவிஞர் அழுது கண்ணீர் பெருக்கிவிடுவார்.
கண் கலங்கிய கண்ணதாசன்!

சிலரது மறைவிற்காக கவிஞர் கண்ணதாசன் உருகி உருவாக்கும் இரங்கல் கவிதைகள் பிறக்கும்போது கவிஞர் அழுது கண்ணீர் பெருக்கிவிடுவார். கண்ணதாசன் சொல்லச் சொல்ல பக்கத்தில் அமர்ந்து எழுதுபவரும் சேர்ந்து அழுத நேரமும் உண்டு.
 அப்படி நாதசுரச் சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை மறைந்த நேரத்தில் கண்ணதாசன் அவரைப் போற்றிப் புகழ்ந்து இரங்கற்பா சொல்லிக் கொண்டிருந்தார்.
 "செவியினில் ஓடி.. எங்கள் சிந்தையில் ஓடி.. இந்தப் புவியெல்லாம் ஓடி.. நின்பால் பொங்கிய தோடி வேரிங்கெவரிடம் போகும்' எனக் கவிஞர் சொல்லும்போதே, அவரது கன்னத்தில் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எழுதுபவரின் கையைப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாராம். எழுதுபவரும் சேர்ந்து அழ இருவரும் சேர்ந்து வெகுநேரம் அழுதனராம்.
 ("அறிஞர்கள் வாழ்க்கையில் அரிய நிகழ்ச்சிகள்' என்ற நூலிலிருந்து)
 க. ரவீந்திரன், ஈரோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com