சிரி... சிரி... சிரி... சிரி... 

""என் பையன் மூத்தவன் டாக்டரா இருக்கான். இன்னொருத்தன் இ.பி.யில வேலை  பார்க்குறான்''"" ரெண்டு பேரும் ஃபீஸ் புடுங்குறாங்கன்னு சொல்லுங்க''
சிரி... சிரி... சிரி... சிரி... 

""என் பையன் மூத்தவன் டாக்டரா இருக்கான். 
இன்னொருத்தன் இ.பி.யில வேலை  பார்க்குறான்''
"" ரெண்டு பேரும் ஃபீஸ் புடுங்குறாங்கன்னு சொல்லுங்க''

எஸ்.கார்த்திக், காளனம்பட்டி. 


""விளம்பரமே வராத சேனல்கள் எத்தனைன்னு சொல்லுப்பா...
 அதுக்கு மட்டும் பணம் கட்டிடுறேன்''
""ஏன் சார்?''
""என் பெண்டாட்டி எந்த விளம்பரத்தைப்
பார்த்தாலும் விளம்பரத்தில் பார்த்த அந்தப் பொருளை  வாங்கிட்டு வரச் சொல்றா''

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

""தாயே உங்கள் வீட்டில் பிரிட்ஜ் ரிப்பேரா?''
""ஏன் கேட்கிறே?''
""சாம்பார், ரசமெல்லாம் எனக்கு ஊத்துறீங்களே''

""நீ தான் பல் டாக்டராச்சே... 
அப்புறம் ஏன் உன் கணவர் பல்வலிக்கு வேற ஒரு டாக்டர்கிட்ட  போறார்?''
""அவரு என் கிட்ட வாயைத் திறக்க மாட்டாரே''

வி.பார்த்தசாரதி, சென்னை-5

""அதோ போறாரே அந்த நடிகர்  தமிழில் மட்டும் 50 படங்களில்  நடித்திருக்கிறார்''
""மற்ற மொழிப் படங்களில்?''
""அதான் சொன்னேனே...  தமிழ்லே மட்டும்ன்னு''

டி.கே.சுகுமார், கோவை.

""எந்த தைரியத்திலே நேத்து தலைவர் கூட்டத்திலே விடாது 5 மணி  நேரம் பேசினாரு?''
""எதிர்லே யாரும் இல்லேன்ற தைரியத்திலேதான்''

 தீ.அசோகன், சென்னை-19

""திடீர்னு அவர்  ஹோட்டல் ஆரம்பிச்சிருக்காரே... என்ன முன் அனுபவம் இருக்காம்?''
""பத்து வருஷமா பிச்சை எடுத்திருக்கிறாராம்''

ஆர்.அருண்குமார்,   திருநெல்வேலி

""சமையல் ரூமிலே இருந்து தட்டோட என் டேபிள்லே வந்து விழுறே... என்னப்பா இது?''
""நீங்கதானே பிளேன் தோசை கேட்டீங்க?''

 தீ.அசோகன், சென்னை-19.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com