ஏன் கட்டுப்பாடு தேவைப்படுகிறது?

கட்டுப்பாடு, மனித ஆற்றலை வளர்த்ததா அல்லது குறைத்ததா?  
ஏன் கட்டுப்பாடு தேவைப்படுகிறது?

கட்டுப்பாடு, மனித ஆற்றலை வளர்த்ததா அல்லது குறைத்ததா?  

அனைத்து மதத்தினரும், மதகுருமார்கள் அனைவரும் கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தி வருகின்றனர். 

அடக்கி ஆளுதல், வசப்படுத்துதல், எதிர்த்து நிற்றல், சரிப்படுத்துதல், பொருந்தவைத்தல், நிறுத்திக் கொள்ளல், வெளிவிடாதிருத்தல் என்பனவற்றை உள்ளடக்கியதே மனக்கட்டுப்பாடாகும் என உணர்கின்றனர்.

கட்டுப்பாடுகள் மனித ஆற்றல், வலு, ஊக்கம் ஆகியவற்றின் விளைவை அதிகரிக்குமானால் அவற்றை ஏற்றுக் கொள்ள நியாயமுண்டு ஆனால் கட்டுப்பாடுகள் மனித ஆற்றலை அடக்கி வைப்பதோடு மனித மனத்திற்கும் பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன.  கட்டுப்பாடுகள் அழிவையும் உண்டாக்குகின்றன.

மக்கள் அனைவருக்கும்  ஆற்றலும் ஊக்கமும் உண்டு. கட்டுப்பாடுகளால் ஆற்றல்கள் உயர்நிலையை அடைகின்றனவா?  அல்லது கட்டுப்பாடுகளால் ஆற்றல் அனைத்தும் அழிந்து போகின்றனவா என்பன போன்ற கேள்விகளுக்குரிய விடைகளை ஆராய்ந்து பெற வேண்டும். 

பலர் தமது ஆற்றலைச் சமூகக் கட்டுப்பாட்டாலும் போலியான நடைமுறைகளாலும் அழித்து வருகின்றனர். 

சமூகக் கட்டுப்பாடு என்ற பெயரிலே தனியொருவன் ஆற்றல் எல்லாம் வீணாகக் கழிகின்றன. 

***************

நீண்ட காலக் கட்டுப்பாட்டின் விளைவே சுதந்திரம் என்று மக்கள் நம்புகின்றனர். 
ஒன்றைப் பூரணமாகக் காண்பதே அக்காட்சிக்குரிய கட்டுப்பாடாகும்.  ஒன்றைப் பூரணமாகவும் தெளிவாகவும் காணச் சுதந்திரம் தேவையேயன்றி கட்டுப்படுத்தப்பட்ட நோக்கம் தேவையன்று. 

எனவே கட்டுப்பாட்டின் முடிவல்ல சுதந்திரம். சுதந்திரத்தை அறிந்து கொள்வதே அதற்கான கட்டுப்பாடாகும். 

"ஜே.கே.யின் உண்மையைத் தேடும் பொன்மொழிகள்' என்ற நூலிலிருந்து...

ஆதவன், சென்னை-19

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com