மைக்ரோ கதை

"என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள் என்னிடம் உண்மையாக இல்லை. குடும்பத்தினர் அன்பாக இல்லை. நான் என்ன செய்யட்டும் குருவே?''
மைக்ரோ கதை

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்:
 "என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள் என்னிடம் உண்மையாக இல்லை. குடும்பத்தினர் அன்பாக இல்லை. நான் என்ன செய்யட்டும் குருவே?''
 குரு புன்னகை செய்தார். அவருக்குப் பதில் சொல்லாமல், ஒரு கதை சொன்னார்.
 "ஓர் ஊரில் 1000 நிலைக்கண்ணாடிகளைச் சுவரில் பதித்த ஒரு பெரிய மண்டபம் இருந்தது. அதற்குள் சென்ற ஒரு சிறுமி கண்ணாடியைப் பார்த்துச் சிரித்தாள். ஆயிரம் கண்ணாடியிலும் அவள் சிரிப்பது தெரிந்தது. இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.
 சில நாட்களுக்குப் பிறகு சிறிது மனநிலை சரியில்லாத ஒருவர் மண்டபத்துக்குச் சென்றார். தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்து அடிக்க கை ஓங்கினார். ஆயிரம் கண்ணாடியிலும் உள்ள உருவங்கள் அவரை அடிக்க கை ஓங்குவதாக நினைத்து அலறியடித்துக் கொண்டு மண்டபத்தைவிட்டு வெளியே ஓடிவந்து உலகிலேயே மோசமான ஆள்கள் இந்த மண்டபத்தில்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார்''
 கதையைக் கேட்ட செல்வந்தர் குருவிடம் எதுவும் பேசாமல் நடையைக் கட்டினார்.
 ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com