துப்பறிவாளன் 2

விஷால் - மிஷ்கின் கூட்டணியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "துப்பறிவாளன்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
துப்பறிவாளன் 2

விஷால் - மிஷ்கின் கூட்டணியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "துப்பறிவாளன்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு உறுதியாகியுள்ளது. ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ள லவ்லி சிங்,   தற்போது "துப்பறிவாளன் 2' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். முதல் பாகத்தில் விஷால் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். அதில் அவர் கொல்லப்படுவார். இதனால், 2-ஆம் பாகத்தில் அவருக்குப் பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது புது நடிகையாக இருந்தால் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழு யோசித்தது. ஆடிஷனில் நிறையப் பேர் கலந்து கொண்டார்கள். இதில், லவ்லி சிங் ஹீரோயினாக நடிக்கத் தேர்வாகியிருக்கிறார். இந்தப் படத்தில் ரகுமான், கௌதமி நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com