• "நீங்க கடைசியா கொடுத்த மாத்திரை ரொம்ப
இனிப்பா இருந்துச்சு சார்''
"அது மாத்திரை இல்லீங்க. மிச்ச சில்லறை
இல்லேன்னு சாக்லேட் கொடுத்தேன்''
ஆர்.சி.முத்துக்கண்ணு, ராயப்பட்டி.
• "என் மனைவி கிளி மாதிரி''
"சரி... அதுக்குப் போய்
டாக்டர் கிட்ட ஏன் கூட்டினு போறீங்க?''
"அவ சொன்னதையே திரும்பத் திரும்ப
சொல்லினு இருக்கா''
தீபிகா சாரதி, சென்னை-5.
• "பல் டாக்டருக்கும் சலூன்காரருக்கும் உள்ள
ஒற்றுமை என்ன?''
"ரெண்டு பேருமே நாம நாற்காலியில
உட்கார்ந்ததும் நமக்கு மேலே துணியைப்
போர்த்துவாங்க''
சம்பத் குமாரி, திருச்சி-4.