முறிவுகளை முறியடி!

""ஹலோ' மாதவன் சார்! சகுந்தலாங்கிறவங்க பேசறேன்... அதாவது மாப்பிள்ளை மாதவனோட சொந்த அத்தை'' என்ற குரலானது படபடப்பாக வரவும் அது அறிமுகமில்லாத எண்ணாகவும் இருக்கவும், ""சரி... சொல்லுங்க...
முறிவுகளை முறியடி!

""ஹலோ' மாதவன் சார்! சகுந்தலாங்கிறவங்க பேசறேன்... அதாவது மாப்பிள்ளை மாதவனோட சொந்த அத்தை'' என்ற குரலானது படபடப்பாக வரவும் அது அறிமுகமில்லாத எண்ணாகவும் இருக்கவும், ""சரி... சொல்லுங்க... என்ன வேணும்?'' என்றார் தர்மர் ஒருவித ஆவலோடு.

தொடர்ந்து திருமண மண்டபத்திலிருந்தும் வெளியே வந்துவிட்டார். மேளம் நாதஸ்வரம் ஒலி உச்சத்தில் இருந்தது; அதனால் பேச்சு சரியாகக் கேட்காத சூழ்நிலை மண்டபத்தினுள் நிலவிக் கொண்டிருந்தது.
""சொல்லுங்கம்மா” என்ன வேணும்?''” என்றார் தர்மர் மீண்டும்.
""நீங்க லலிதா லாட்ஜ்ல ரூம் நம்பர் பத்துலதானே தங்கியிருக்கீங்க''” என்றாள் படபடப்பான குரலில்.
""ஆமா...அதுக்கு என்ன? உங்களுக்கு என்ன வேணும்?''”
""அந்த ரூம்லதான் நாங்களும் தங்கியிருந்தோம்... மூனு செல் போனை மறந்து வச்சிட்டு வந்துட்டோம். பார்த்தீங்களா?''” என்றாள் சகுந்தலா ஒருவித ஆவலான எதிர்பார்ப்புடன்.
""செல்போன் எல்லாம் பத்திரமா இருக்கும்மா... சரி நீங்க எங்கே இருக்கீங்க? மண்டபத்துலதானே?''”
""இல்லங்க சார்... ரயில்வே ஸ்டேசன்ல குடும்பத்தோட ரயிலுக்கு வெயிட் பண்றோம். இன்னும் 20 நிமிசம்தான் இருக்கு. நீங்க ஒரு உதவி செய்ய முடியுமாங்க சார்... நீங்க உரத்தநாடு உமாவோட வீட்டுக்காரர்தானே?''”
""ஆமாமா ரெண்டு பேரும்தான் கல்யாணத்துக்கு வந்திருக்கோம். நீங்க விஷயத்தைச் சொல்லுங்கம்மா... ஏதோ உதவின்னு சொன்னீங்களே... என்ன அது முடிஞ்சா செய்யிறேன்''” என்றார் தர்மர் ஒரு வித குழப்பத்துடன்.
மாப்பிள்ளைக்கு மிகவும் நெருங்கிய சொந்தமான சகுந்தலா குடும்பம் இங்கே திருமண மண்டப மேடையில் முக்கியமாக இருக்க வேண்டியவர்கள்; திருமண வேலைகளில் முன்னின்று பங்கேற்க வேண்டியவர்கள் திருமணத்திற்கு இன்னும் ஒரு மணி நேரமே
யிருக்க ரயிலில் ஊருக்கு ஏன் போக வேண்டும்? என்ற சிந்தனை தர்மரிடம் மேலோங்கியது.
""சார்! அந்த மூனு போனையும் உடனே ஒரு ஆட்டோ புடிச்சி இங்கே ஸ்டேசனுக்குக் கொண்டு வந்து தரலாமா? ட்ரெயின் புறப்பட இன்னும் கால்மணி நேரம்தான் இருக்கு. நாங்க அங்கே வந்திட்டு திரும்ப முடியாதுங்க சார்... நீங்க நெனச்சா ஹெல்ப்  பண்ணலாம் சார்''” என்றாள் சகுந்தலா மிகவும் தாழ்மையான குரலில்.
""நீங்க என்னம்மா பேசறீங்க... கல்யாணத்துக்கு இன்னும் ஐம்பது நிமிசம் தான் இருக்கு... நான் லாட்ஜ்ல இருப்பனா? கல்யாணத்துக்கு ஏழு மணிக்கே வந்துட்டம்மா. எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டுட்டோம். ஒன்பது மணிக்குக் கல்யாணம்... சரிம்மா. நீங்களும் கல்யாணத்துக்குத்தானே வந்திருக்கீங்க? ஏன் ஸ்டேசன் போனீங்க... ஊருக்குக் கிளம்பிட்டீங்களா? ஏம்மா இந்த முடிவு? ஊர்ல எதுவும் முக்கியமான துக்கமா?''” என்றார் தர்மர் சகுந்தலாவின் பதிலை ஆர்வத்துடன் எதிர்பார்த்தவராய்.
""சார்! நான் என்ன சொல்றது... என் வீட்டுக்
காரர் மாப்பிள்ளைக்கு சொந்த தாய்மாமா... ஆனா அந்த மரியாதையை துளிக் கூட அவங்க தரலே...நேற்று மண்டபத்துக்குப் போன அரை மணி நேரம் முன்னாடியே நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டாங்க... மாப்பிள்ளைக்கு மேடையில மாலை எடுத்துக் கொடுக்க வேண்டிய தாய்மாமா இல்லாமலேயே ஃபங்சனை முடிச்சிட்டாங்க...அப்புறம் என் வீட்டுக்காரருக்கு என்ன சார் மரியாதை! அதுதான் எல்லாரும் காலையிலே ஊருக்குக் கிளம்பிட்டோம். நாங்க செஞ்சது தப்பாங்க சார்? நீங்களே சொல்லுங்க சார்''” என்று சொற்களால் தனது செயலை நியாயமாக்க முயன்றாள். 
""தப்பும்மா...ரொம்பத் தப்பும்மா... ஃபங்சன்னா நேரத்துக்குப் போகணும். அதுவும் நீங்க தாய் மாமா வீடு ரெண்டு மணி நேரம் முன்னாடியே போகணும். அங்கே உள்ள வேலைகள்லே பங்கெடுத்துக்கணும். பத்திரிகையில நானும் பார்த்தேன். ஃபங்சன் அஞ்சு டூ ஆறுன்னு போட்டிருந்தது. நீங்க எத்தனை மணிக்கும்மா போனீங்க?''” என்றார் தர்மர் சற்றே கோபமான குரலில்.
""ரெண்டு ஆட்டோ புடிச்சி மண்டபத்துக்கு ராத்திரி சரியா ஏழு மணிக்குப் போயிட்டோம் சார். தாய் மாமாவுக்காக ஃபங்சனை ஒரு மணி நேரம் தள்ளி வைக்கக் கூடாதா... வேணும்னே எங்களை அவமானப் படுத்திட்டாங்க சார்... அப்புறம் அந்தக் கல்யாணம் மட்டும் எங்களுக்கு எதுக்குங்க சார்? அதுதான் விடிஞ்சதும் எல்லாரும் புறப்பட்டுட்டோம். எங்க இடத்துல நீங்க இருந்தா இதைத்தானே சார் செஞ்சிருப்பீங்க? நியாயமான்னு நீங்க சொல்லுங்க 
சார் ?''”என்றாள் சகுந்தலா.
""சரிங்கம்மா...உங்க அண்ணன் அல்லது தம்பி வீட்டுக்கல்யாணங்கள்லே இந்த மாதிரி நடந்துப்பீங்களா? என்ன குறை இருந்தாலும் பொறுத்துக்கிட்டு அல்லது விசேஷம் முடிஞ்சதும் பேசிக்கலாம்னு சமாதானம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாக் கலந்துக்க மாட்டீங்களா? இந்த சலசலப்பெல்லாம் உங்ககிட்டே இருக்குமா? கணவன் வீட்டுக் கல்யாணம்னுதானே இவ்வளவு அலட்சியமா நடந்துக்கிறீங்க... இதுக்கு நீங்க குடும்பத்தோட வந்திருக்க வேண்டிய அவசியமேஇல்லையே.. மாதவன் மனசு என்ன பாடுபடும்னு நெனச்சுப் பார்த்தீங்களா?''” என்று சகுந்தலாவின் மனசாட்சியை தூசி தட்டி எழுப்ப முயன்றார் தர்மர்.
""சார்! நீங்க மாதவனுக்கு ஆதரவாத்தான் பேசுவீங்க...இந்தப் பிரச்னை உங்களுக்கு வேண்டாம். எங்க போன் வேணும். அதை நீங்க மண்டபத்துக்கு வெளியே வந்து தர முடியுமா?''” என்றாள் சகுந்தலா கறாரான குரலில்.
""ஓ... தாராளமா. மண்டபம் பக்கம்தான். ஆட்டோவுக்கு அம்பது ரூபாதான் கேட்பான். ரெண்டு ஆட்டோவுல எல்லாரும் வந்துடுங்க.. சரியா? நான் வச்சிடறேன்''” என்றார் தர்மர் சமாதானமான குரலில். ஆனால் அது பற்றிய யோசனையில் சிறிது நேரம் மூழ்கலானார்.
""ஏம்மா! என்ன சொல்றார் அந்த ஆள்?''” என்று சிறிதே கோபத்துடன் கேட்டாள் கவிதா- சகுந்தலாவின் மூத்த மகள்.
""மண்டபத்துக்கு வரச்சொல்றார்... சே! இப்படி ஆகும்னு நெனக்கவேயில்லை...ஆறு டிக்கெட் 1500 ரூபா போச்சு... ஆட்டோ செலவு வேற... இனி பஸ் புடிச்சிதான் போகணும். அது வேற மூவாயிரம் ரூபா ஆகும்... நமக்கு ஏன்தான் இந்த சோதனையோ தெரியலே...''” என்ற சகுந்தலாவின் கண்களில் ஈரம் எட்டிப் பார்த்தது.
""அம்மா நான் சொல்றனேன்னு கோவிச்சுக்காதே... நீ பண்றது ஒன்னும் சரியில்லைம்மா... மனுசங்களை வேணும்னு நெனக்கணும். ஒதுங்கி நிக்கிறது ஈஸிம்மா... ஆனா நமக்கு ஒரு உதவின்னா ஓடி வர சொந்தங்களைத் தயார் பண்றதுதாம்மா ரொம்ப கஷ்டம். நீ தூங்கி தூங்கி எல்லாத்தையும் கோட்டை விடறே?''” என்றாள் அமுதா தாயை நோக்கிக் 
கடிந்தபடி.
""சரி விடுடி... பல தடவைகள்ல இதை நாம பேசியாச்சு...என்னங்க...  நீங்க ரெண்டு ஆட்டோவுக்கு ஏற்பாடு பண்ணுங்க... மண்டபத்துல மூணு போனையும் வாங்கிக்கிட்டு அப்படியே பஸ் ஸ்டான்ட் போயிடலாம்''” என்றாள் கவிதா கணவனிடம்.
மண்டபம் நோக்கி ஆட்டோக்கள் விரைந்து கொண்டிருந்தன. நாம் சற்றே பின்னோக்கி விரைவோம் சகுந்தலா – மாதவன் இடையேயான சலிப்பு குறித்து-
சகுந்தலாவின் கணவருக்கு இரண்டு சகோதரிகள். ஏழ்மையான குடும்பம். இளைய சகோதரி மல்லிகாவிற்குப் பிறந்த மூத்த
மகன்தான் மாதவன்; அடுத்த மகன் ஆதவன். சகுந்தலாவின் மகள்கள் இருவரும் பிறந்தது முதலே சேர்ந்து ஒன்றாக ஒரே குடும்பமாகவே வளர்ந்திருக்கின்றனர். பிள்ளைகளும் வளர வளர காலம் செல்ல செல்ல சண்டை, சச்சரவுகளும் புதிது புதிதாகத் தோன்றத் தோன்ற கூட்டுக் குடும்பம் பிரிந்து மூன்று குடும்பங்களானது.
மாதவன், ஆதவன் இருவரும் இஞ்சினியரிங் முடித்து ஐ.டி துறையில் வேலைக்குச் சேர்ந்ததும் அக்குடும்பம் பெங்களுரூவில் குடியேறியது. கவிதா அமுதா இருவரும் கலை அறிவியல் கல்லூரியில் பயின்று வேலையின்றி வீட்டில் இருந்தனர்.
தனது இரு பெண்களையும் மாதவன், ஆதவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டால் நிம்மதி மற்றும் வரதட்சணைப் பிரச்னை எழாது என்பதாலும் சகுந்தலா மிகுந்த எதிர்பார்ப்போடு ஓர் உறவினர் வீட்டுத் திருமணவிழாவில் மல்லிகாவிடம் மனதைத் திறந்தாள்.
""என்ன சொல்ற மல்லிகா! என் பொண்ணுங்
களும்“டிகிரி முடிச்சிருக்காங்க... நான் சும்மா அனுப்பிட மாட்டேன். ஒவ்வொரு பொண்ணுக்கும் முப்பது பவுன் சேர்த்து வச்சிருக்கேன். அவரோட ரிடையர்மென்ட் பணத்தை அப்படியே பேங்க்ல போட்டு வச்சிருக்கேன். அதுல வண்டி, ப்ரிஜ், பீரோ, கட்டில், மெத்தை லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் கொண்டு வந்து மண்டபத்துல இறக்கிடுவேன். ரெண்டு பையன்களுக்கு முடியலையா? மூத்த பையனுக்காவது கவிதாவை எடு. என்ன சொல்ற மல்லிகா?''” என்றாள் சகுந்தலா குரலில் குழைவுடனும் மனதில் மிகுந்த ஆர்வமுடனும் எதிர்பார்ப்புடனும். 
""சகுந்தலா! நீ ஆசைப்படறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா  மாதவன் என்ன சொல்றான்னா கவிதா, அமுதா என்னோட தங்கச்சிங்க மாதிரிம்மா... மனைவியால்லாம் நினைச்சுப் பார்க்க முடியாதும்மா...அந்தப் பேச்சையே விட்டுடும்மாங்கிறான். சின்ன வயசுலேயிருந்து சேர்ந்து வளர்ந்ததாலே சகோதர சகோதரி பாசம்தான் அவனுங்கிட்டேயிருக்கு.“வேற ஈர்ப்பு இல்லே...வேற வழியில்லே...நீயும் நானும் வெளியிலதான் பார்க்கணும்..
சரியா புரிஞ்சுக்க சகுந்தலா''”என்றாள் மல்லிகா சகுந்தலாவின் கைகளைப் பற்றியபடி.
""நீதான் எல்லாம் எடுத்துச் சொல்லணும் பசங்களுக்கு என்ன தெரியும்? தாய்மாமா பொண்ணுங்கடான்னு அழுத்திச் சொல்லணும் ; இல்லேன்னா விஷம் குடிச்சிடுவேன்டான்னு பயமுறுத்தணும். ஒரு பாட்டிலை சும்மா வாங்கி வீட்ல வைச்சுப் பாரு.. உன் வழிக்கு வராம போயிடுவானுங்களா?'' என்ற சகுந்தலா தனது கோரிக்கையில் எல்லை மீறினாள்.
""இங்கே பாரு சகுந்தலா... நீ சொல்றதெல்லாம் சினிமாலதான்... அது நிஜம் இல்லே... நீ எந்த உலகத்திலே இருக்கே? திடீர்னு ஒரு பொண்ணை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்து "அம்மா! இவளைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்கப் போறேன்னு இன்பார்ம் பண்ணிட்டு "எங்களை வாழ்த்துங்கம்மா'ன்னு கால்ல விழற காலம் இது. நீ இந்தப் பேச்சை விட்டுடலாம்''” என்று மல்லிகா உறுதியான குரலில் கூறவே அங்கிருந்து விருட்டென்று எழுந்து சென்று விட்டாள் 
சகுந்தலா.
பிறகு இரு குடும்பங்களும் இடையில் எவ்வித உறவும் ஒட்டுதலும் இல்லை. எங்கேயாவது உறவுகளின் குடும்ப விழாக்களில் பார்த்துக் கொண்டாலும் சகுந்தலாவை நோக்கி புன்சிரிப்புடன் நெருங்குவாள் மல்லிகா. ஆனால் சகுந்தலாவால் அந்த சந்திப்பே நிகழாது.   விலகல் தான் நீடித்துக் கொண்டே 
ஆண்டுகள் பல ஓடின.
மாதவனுக்குத் திருமணம் ஏற்பாடானவுடன் "பிரிந்த உறவுகளையெல்லாம் எப்படியாவது சேர்த்துவிடவேண்டும் ; தனது திருமணத்தின் மூலம் ஒற்றுமைப்படுத்தி விட வேண்டும் என்றும் முடிவு செய்து அழைப்பிதழோடு பெங்களுருவிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டான் மாதவன்.
பலவிதமான விவாதங்களில் பணிவாகப் பேசி தனது அத்தையிடம் அழைப்பிதழை வழங்கிய மாதவன், கல்யாணத்துக்கு வரபோக செலவுக்கென்று ஐயாயிரம் ரூபாயை ஒரு தட்டில் வைத்து சகுந்தலாவின் காலடி பணிந்து வழங்கி விட்டு வந்திருந்தான். 
கோவையில் பெயர் சொல்லும் ஒரு லாட்ஜில் இரண்டு அறைகளுக்கும் முன் பணம் செலுத்தி ஏற்பாடு செய்திருந்தான் மாதவன். திருமணத்திற்கு முதல் நாள் தனது கணவர், இரு மகள்கள் மருமகன்களோடு கோவை தங்கும் விடுதிக்கு காலை ஒன்பது மணிக்கே வந்துவிட்டிருந்த சகுந்தலா லாட்ஜ் உணவு விடுதியிலேயே டிபன் முடித்தனர். தூக்கம். இரண்டு மணிக்கு சுவையான மதிய உணவு முடித்து மீண்டும் தூக்கம்.
""அம்மா...ஐந்து டூ ஆறு நிச்சயதார்த்தம்மா... அந்த நினைப்பேயில்லாம நீ பாட்டுக்குத் தூங்கிக்கிட்டிருக்கே...எழுந்திரும்மா''” என்று அமுதாவும் அம்மாவை எழுப்ப முயற்சித்தாள்.
""ஏய் சனியனே... எனக்குத் தெரியாதா? பேசாமப் படுடி... ஆறு மணிக்குப் போனாப் போதும். மல்லிகாவுக்கோ மாதவனுக்கோ நாம மதிப்புக் கொடுக்க வேண்டிய அவசியமில்லே... நீ வேணும்னா ஒரு ஆட்டோ புடிச்சி முன்னாடி போயிக்க... தொண தொணன்னு நீ என்னைப் படுத்தாதே''” என்று கூச்சலிட்டாள் சகுந்தலா. அமுதா வாய் மூடி அமைதியானாள் .   அப்போது மணி மாலை 4 மணி இருக்கும்.
சகுந்தலாவுக்கு வீட்டில் எப்பொழுதும் தூக்கம்தான். காலை 10 மணிக்கு டிபன் முடித்து தூக்கம் மதியம் ஒரு மணி வரை. பிறகு ஏதோ ஒரு சமையலை உண்டு முடித்து மதியம் மூன்று மணி முதல் ஆறு மணி வரை தூக்கம். தொலைக்காட்சித் தொடர்கள் ஆரம்பமாகும் நேரமது. பிறகு இரவு பத்து மணிக்குப் படுத்தால் அடுத்த நாள் ஒன்பது மணி வரை தூக்கம் நீடிக்கும்.
தனிக்குடித்தனம் வந்த பிறகு கணவன் தனியார் நிறுவன வேலைக்குச் சென்றதும் தூங்கித் தூங்கி எழ ஆரம்பித்த சகுந்தலா அப்பழக்கத்திற்கு  அடிமையாகிப் போனாள். திடீரென்று வேலையிலிருந்து நின்று விட்ட தனது கணவனையும் படித்து முடித்து வேலைவாய்ப்பின்றிப் போன இரு மகள்களையும் அப்பழக்கத்திற்கு உட்படுத்திவிட்டாள் சகுந்தலா.  குடும்பமே கும்பகர்ணன்னின் வாரிசாகிப் போனது.
ஆட்டோக்கள் மண்டபம் முன் நின்றதும் அதிலிருந்து அவசரமாக இறங்கிய சகுந்தலா தனது மாப்பிள்ளையின் ஆன்ட்ராய்டு போன் திறந்து பட்டன்
களைத் தொட்டு நகர்த்தினாள்.
""இல்லம்மா... உடனே எல்லாம் வெளியே வர முடியாது. மேடையிலே இருக்கேன். சாமான்களை எடுத்து கொடுத்துக்கிட்டு; அதனால நகர முடியாது. யாரையாச்சும் உள்ளே அனுப்புங்க...பேசச் சொல்லுங்க... கொடுத்து விடறேன்''”என்று முடித்துவிட்டு போனை சட்டென்று சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
சகுந்தலா தனது மாப்
பிள்ளைகள் இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தாள். "தர்மர் எங்கேயிருக்கிறார்?'” என்ற கேள்விக்கு,  ""இங்கே மேடையிலே இல்லையே...“
அவரை எனக்குத் தெரியாதே...''” என்ற பதில்களே வந்தன. ஆனால் தேடப்பட்ட தர்மரோ சாப்பாட்டுக் கூடத்தில் இருந்தார், அங்குள்ள வேலைகளில் மூழ்கியவாறு.
பெண்கள் மூவரிடமும் செல்போன் இல்லை. சகுந்தலாவின் கணவரிடம் அந்த வசதி அறவே இல்லை.
அரைமணி நேரமாகியும் தங்களது கணவன்கள் திரும்பாதது கண்டு, ""நாங்க போய் பார்த்துட்டு வர்றோம்மா''” என்று கவிதா, அமுதா மண்டபம் உள் அரங்கு நோக்கி அகன்றனர்.
மகள்களும் இருபது நிமிடங்களாக திரும்பாத நிலையில் கையில் செல்போன் இல்லாத சகுந்தலாவும் அவரது கணவரும், ""என்னாச்சுன்னு தெரியலையே... வாங்க உள்ளே போய் பார்த்து அழைச்சிக்கிட்டு உடனே 
வந்துடுவோம்''” என வேண்டா வெறுப்புடன் 
சகுந்தலா கணவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.
கவிதா, அமுதா இருவரும் தங்கள் கணவர்களை கண்டுபிடித்து ஒன்று சேரவும் அடுத்த நிமிடம் சகுந்தலா தம்பதி அவர்களோடு சேர்ந்தனர். அப்போது அட்சதை அரிசித்தட்டு அவர்கள் முன் நீட்டப்பட்டது. வேறு வழியில்லை. ஆறு பேரும் கையில் கொஞ்சம் எடுத்துக் கொண்டனர். கெட்டி மேளம் கேட்க ஆரம்பித்ததும் முன்னே பின்னேயிருந்த அனைவரது கை
களிலிருந்தும் அரிசி ஆசிகளாக மேடை நோக்கி வீசப்பட்டதும் சகுந்தலா குடும்ப ஆறு கைகளும் அரிசி
களோடு மேடை நோக்கி நீண்டு அரிசிகள் முன்னேறி வாழ்த்துச் செய்தியினை அறிவித்தது.
""கவிதா! மாப்பிள்ளைக்கிட்டேயிருந்து போனை வாங்கி தர்மருக்கு மறுபடி ஒரு காலை போடு. ஏன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டாருன்னு தெரியலையே... ஒரு வேளை பேட்டரி தீர்ந்து போச்சோ? எதுக்கும் இப்ப ட்ரைப் பண்ணிப் பாரு... நல்ல ஆள்கிட்ட நம்ம மூனு போனும் மாட்டிச்சி... தவிப்பாங்களேன்னு நெனப்பு துளி கூட இல்லாத மனுசன்.. போனை போடு ... சீக்கிரம் மண்டபத்தை விட்டு வெளியே
றணும்''” என்றாள் சகுந்தலா ஒரு வித எரிச்சலுடனும், கோபத்துடனும். உறவினர்களின் பார்வையிலிருந்து தப்பிக்கத் தலைகுனிந்து கொண்டாள்.
தற்போது தர்மரிடமிருந்து பதில் கிடைத்தது. “
""ஆறு பேரும் உள்ளே தான் இருக்கீங்களா. சரிம்மா... நான் சாப்பாட்டு பந்தி மேற்பார்வையில இருக்கேன்மா... நீ மட்டும் உள்ளே வா... மூனு போனும் என் பேண்ட் பாக்கெட்லதான் இருக்கு...தந்திடறேன்''” என்றார் தர்மா. ஒரு வித நோக்கத்தோடு போன் மீண்டும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.
பழையபடி கவிதா, அமுதா உணவுக்கூடம் உள்ளே போக “தர்மர்... ""அப்புறம் மொதல்ல சாப்பிடுங்க''” என்று இலைகளில் உட்கார வைக்கப்பட்டனர்.
அடுத்து மாப்பிள்ளைகள் பந்தியில் இடம் பெற்றனர். நான்கு பேரையும் தேடி வந்த சகுந்தலா தம்பதியினரும் விருந்தில் இருந்து தப்ப முடியவில்லை. நல்ல பசி வேறு ; குறை சொல்ல முடியாத சுவை கொண்ட உணவு வகைகளுடன் கூடிய விருந்து மாதவனின் அத்தை மாமாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. 
""கவிதா! ஸாரிம்மா... பேட்டரி வீக்மா... சார்ஜ் ஏத்திட்டேன். நான் மேடை முன்னாடிதான் நிக்கிறேன்... வாங்க...போனை வாங்கிக்கிலாம்''” 
என்றார் தர்மர்.
ஆறு பேரும் மேடை முன் முதுகை காட்டிக் கொண்டு நிற்கவும் தர்மர் அடையாளம் கண்டு அவர்களை நெருங்கினார். “
""போன் தர்றேன்மா... மாதவன் வளர்த்த புள்ளை... அவனை வாழ்த்தாம நீங்க போகலாமா நீங்க?  அத்தை குடும்பம் வேணும்னுதானே உங்க வீட்டுக்கு வந்தான். ஆனா நீங்க இப்படி நடந்துக்கலாமா? உங்க ஆறு பேருக்கும் ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கான்... அந்தப் பைகளை மட்டும் வாங்கிக்கிட்டு உங்க பயணத்தைத் தொடருங்க''” என்று மாப்பிள்ளைகளின் கைகளைப் பற்றவும், “""சின்ன வயசுல நாங்க அவனோடு தான் சேர்ந்து விளையாடினோம். தாய்மாமா பையன் ; சொந்தம் விட்டுப் போகுமா? எங்க காலத்துக்கும் அது வேண்டாமா. வாங்க சார் மேடைக்குப் போகலாம்''” என்று அமுதா மூன்றடி முன்னே வைக்க பின்னால் அவளது கணவன் முன்னேற பிறகு கவிதா அவளது கணவன் என நடக்க சகுந்தலா தம்பதியினரும் வேறு வழியின்றி மேடையேற வேண்டிய நிர்பந்தம் தானாக உருவானது.
மேடையில் மணமக்களைச் சுற்றிலும் ஐம்பது பேருக்கு மேல் கூட்டம் நின்றாலும் சகுந்தலா குடும்பத்தினைப் பார்த்து விட்ட மல்லிகா விரைந்து வந்து ஆறு பேரையும் இன் முகத்துடன் வரவேற்றாள். “
""வாங்கண்ணா...  வா சகுந்தலா... வா கவிதா... வா அமுதா...புள்ளைங்கல்லாம் வாங்க...''”என்று சகுந்தலாவின் மாப்பிள்ளைகளையும் தனித்தனியே வரவேற்றாள் மல்லிகா.
புது இளம் மனைவியுடன் மணக்கோலத்தில் நின்று உறவினர்கள், நண்பர்களுடன் வீடியோ - காமிராவுக்கு போஸ் கொடுத்து மனம்  உடல் சோர்வாகியிருந்த மாதவன் சிறுவயதில் தனக்கு சோறூட்டிய அத்தையைப் பார்த்துவிட்ட ஆனந்தத்தில் புது மனைவி இளம்பிறையின் கைப்பற்றி கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு மனத்துள்ளலுடன் விரைந்தான் மாதவன்.
""அத்தே...லேட்டாகியிடுச்சே... அத்தையை இன்னும் காணோமேன்னு கலங்கிப் போயிட்டேன் அத்தே...''” என்று கழுத்தில் நீண்ட மாலையுடன் சகுந்தலா காலில் நெடுஞ்சாண்கிடையாக விழவும் இளம்பிறையும் சளைக்காமல் கணவனுடன் 
பங்கேற்றாள்.
சகுந்தலா கண்களில் குப்பென்று நீர் பெருக்கெடுத்தோட “""மாதவா... உன் நல்ல மனசைப் புரிஞ்சுக்காம நான் தப்பு பண்ண இருந்தேன்டா... என் கூட வந்தவங்களையும் தப்பா வழி நடத்த இருந்தேன்டா... எங்களை மன்னிச்சுருடா... மல்லிகா! எங்களை மன்னிச்சுடு மல்லிகா! இளம்பிறை! என் மகளே... மாதவனும் நீயும் நீண்ட ஆயுளோட செல்வத்தோட, உடம்பு சுகத்தோட நல்லாருக்கணும்... நல்லாருக்கணும்... நம்மளை சேர்த்து வைச்ச செல்போனுக்கு நன்றி சொல்லணும் ; தர்மருக்கு என் ஆயுள் பூரா நன்றி சொல்லணும். நல்ல ஒரு திட்டம் போட்டு பிரியப் போன ரெண்டு குடும்பங்களையும் தர்மர் மகராசன் சேர்த்து வச்சிட்டார்''” என்றாள் சகுந்தலா மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவளாய் குரலில் ஆழமான பாசத்துடன்.
குழப்பங்கள் தோன்றலாம் ; எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகலாம். வசதிகள் கூடலாம் ;  குறையலாம்; குடும்பங்களிடையே பழக்கம் வளர்ச்சியடையலாம்; நலிந்து போகலாம். மன வளர்ச்சி குணக் குறைபாடு தோன்றலாம். ஆனால் குடும்பங்கள் பிரியலாமா? தர்மருக்கும் தனது சாதனை தெரியவில்லை. அமைதி காத்தார். செல்போன்களும் தங்களது சாதனையை அறியவில்லை. ஆனால்  மாதவன் மனதில் மகிழ்ச்சி விதைகளாக அவை மாறியிருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com