ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சூரிய ஒளி... எண்ணெய்க் குளியல்!

வைட்டமின் - ஈ குறைபாடும், தைராய்டு பிரச்னையும் இன்றையச் சூழலில் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? நவீன ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்தக் குறைபாடுகளை மிகவும் பழைமை வாய்ந்த
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சூரிய ஒளி... எண்ணெய்க் குளியல்!


வைட்டமின் - ஈ குறைபாடும், தைராய்டு பிரச்னையும் இன்றையச் சூழலில் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? நவீன ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்தக் குறைபாடுகளை மிகவும் பழைமை வாய்ந்த ஆயுர்வேத  மருந்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியுமா?

-சுதீர், வளசரவாக்கம், சென்னை.

உடல் பருமன், சர்க்கரை உபாதைகளைப் போல, வைட்டமின் - ஈ3 குறைபாடும் இன்று அதிகமாகி வைட்டதற்கான காரணமே  இன்றைய வாழ்க்கை முறைதான்.  அதிலும் வைட்டமின் - இ -க்கு முக்கியமான தேவை சூரிய ஒளி. அதை நம் உடலில் படாதவாறு சன் ஸ்கிரீன் லோஷன் போட்டு மறைத்து விடுகிறோம். சூரிய ஒளி நம் மீது பட்டால், தோல் புற்றுநோய் வரும் என்று பல தவறான விஷயங்களைக் கூறுகிறோம்.

வாரம் இருமுறை, புதன் - சனிக்கிழமைகளில் ஆண்களும், செவ்வாய் - வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் நல்லெண்ணெய்யை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, சிறிது நேரம் - பத்து, பதினைந்து நிமிடங்களாவது இளம் வெயிலிலோ, அல்லது வெயிலடிக்கும் இடங்களில் ஒதுக்குப்புறமாக உள்ள நிழலிலோ, நின்று விட்டு, சீயக்காய், பயற்றம் மாவு, இவற்றைக் கலந்து பூசிக்குளித்தால் வைட்டமின் - ஈ சத்து எண்ணெய் தடவிய சருமத்தின் மேல் சூரிய வெளிச்சம் (வெப்பமல்ல) படுவதால் நம் உடலில் எளிதில் புகுந்து, நம் உடலில் இருக்கும் ஹார்மோனைச் சரியாக வேலை செய்ய உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, அதைக் குறைக்க, வைட்டமின் - ஈ3 மருந்தாகப் பயன்படுகிறது. இந்த வைட்டமின்  குறைபாடு காரணமாக சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு இந்த வைட்டமினையே சப்ளிமெண்டாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகிவிடும். அப்படியல்லாமல், ரத்த அழுத்தம் மாத்திரை மட்டுமே எடுத்துக் கொண்டால், தேவை இல்லாத பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். அதனால் நம் முன் தலைமுறையினர் வரை ஒழுங்காக வந்த எண்ணெய்க் குளியல், தற்போது சூழ்நிலை, தொழில் முறை அமைப்பு என்ற காரணங்கள் காட்டியும், வீண் செலவு என்ற ஆதாரமற்ற கருத்துகளுக்கு வசப்பட்டும் புறக்கணிக்கப்படுகின்றது. ஆயுர்வேதத்தின் சிறந்த இந்த அறிவுரையை ஒளவைப் பாட்டியும் ஆமோதிப்பதால், அவருடைய வார்த்தைக்காவாவது மதிப்பளிப்போம்.

நவீன ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி வைட்டமின்  - ஈ3 குறைபாடு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடும், நஸ்ரீப்ங்ழ்ர்ள்ண்ள் எனும் திசு தடிமனாதல் பிரச்னையும், கேன்ஸர் கூட இதனால் வரலாம் என்றும் கூறுகிறார்கள்.  

மனித உடலில் தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் வழியாக மூச்சுவிடுவது, உணவை ஜீரணம் செய்வது, இதயத்துடிப்பு சீராக இருப்பது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. நாம் கீழே விழுந்து அடிபட்டால் ஏற்படும் வலி, நச்சுத் தன்மை கொண்ட புகை, விஷம் பாதித்தாலோ, மனதில் ஏற்படும் கவலை, குடும்ப - அலுவலகப் பிரச்னை, வியாபார நஷ்டம் போன்றவற்றின் மூலம் ஏற்படும் மன உளைச்சல் ஆகிய பதட்ட நிலைகளில் சிம்பதட்டிக் எனும் நரம்பு மண்டலம் அட்ரீனல் சுரப்பியைத் தூண்டி ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உயர்ரத்த அழுத்தத்தை மூளைக்குப் பாயச் செய்து, அந்த தற்காலிக ஆபத்திலிருந்து காக்க வைக்கிறது. 

தூக்கம் அல்லது ஓய்வின் போது ரத்த ஓட்டத்தை பாராசிம்பதட்டிக் எனும் நரம்பு மண்டலம் தைராய்டு சுரப்பி வழியாக, ஹார்மோன்களை உற்பத்தி செய்து மூளைக்கு அனுப்பாமல் செரிமானத்திற்கும், அணுக்களை சரி செய்யவும் அனுப்புகிறது. அதனால் உடலில் ஒரே நேரத்தில் ஒரு சுரப்பிதான் வேலை செய்யும். தொடர்ந்து ஒருவருக்கு மன அழுத்தமிருந்தால், தைராய்டு சுரப்பி வேலையே செய்யாமல் மக்கர் செய்யும்.

தைராய்டு ஹார்மோனிலுள்ள ப4 மற்றும் ப3 சமநிலையற்ற தன்மையை அயோடின் மாதிரியாகவே இருக்கக் கூடிய புரோனமன் (பிரட், பன்ஆகியவை பள பள வென்று பிரவுன் கலராக இருப்பதற்கு இதுவே காரணம்), பற்பசையிலுள்ள ஃபுளோரின் மற்றும் தண்ணீரை சுத்தப்படுத்தும் குளோரின் போன்றவற்றை அயோடின் என்று நினைத்து உடல் உள்ளே அனுப்பி விடுவதால் தான் நிகழ்கிறது. இதனால் தைராய்டு செயல்பாடு குறைந்து நமக்குப் பல உபாதைகள் தோன்றுகின்றன. அதிக மாவுச் சத்து கொண்ட உணவால் கல்லீரலில் அது கொழுப்பாக மாறி தங்கிவிடுவதாலும், ப4 மற்றும் ப3 எனும் தைராய்டு ஹார்மோன்களில் மாற்றம் சரியாக நடைபெறாமல் போவதாலும் தைராய்டு பிரச்னைக்குக் காரணமாகிறது என்று நவீன ஆராய்ச்சிகளின் கூற்றை நாம் கவனிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

கபம் தன்குணங்களுடன் ரஸதாது எனும் உணவின் சாரத்துடன் உடல் முழுவதும் பரவிச் சென்று தாதுக்கள், உபதாதுக்கள் போன்றவற்றிற்கு புஷ்டி அளிக்கின்றது. தாதுக்களில் அடங்கியுள்ள நெருப்பிற்கு சக்திக் குறைவு ஏற்பட்டால், கபத்தின் தாது புஷ்டி எனும் தொழிலைச் செய்யாமல் மந்தமாகி அவ்விடத்தில் தங்கி விடுகிறது. இதனால் கலகண்டம் எனும் தைராய்டு வீக்கம் ஏற்பட்டு, இயற்கை காரியங்களுக்குத் தடை செய்கிறது என்ற ஆயுர்வேதத்தின் கூற்றையும் ஏற்க வேண்டியுள்ளது. தாதுக்களின் நெருப்பைத் தூண்டி, மந்தமான கபதோஷத்தின் செயலை துரிதப்படுத்தி, உடலில் ஓரிடத்தில் ஏற்படும் வீக்கத்தை மட்டுப்படுத்தும் காஞ்சநாரகுக்குலு எனும் மாத்திரை, சிலாசத்து பற்பம், குக்குலுதிக்தகம் எனும் கஷாயம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கக் கூடியவை.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com