பேல்பூரி

உணவை மென்று மென்று விழுங்கினால்...எமனை வென்று வென்று வாழலாம்.
பேல்பூரி

கண்டது


(மதுரை விரகனூரில் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனத்தின் முகப்பில் எழுதப்பட்டுள்ள சொல்)

கை வை   

நா.ஆமினத்து ஜாக்ரினா,  கீழக்கரை.

(சின்னசேலம் தாலுகாவில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

வீர பயங்கரம்

கி.சரஸ்வதி ,  ஈரோடு.

(ஆரணியில்  ஒரு சித்தமருத்துவ மனையில் எழுதப்பட்டிருந்த  வாசகம்)

உணவை மென்று மென்று விழுங்கினால்...
எமனை வென்று வென்று வாழலாம்.

மா.வி.கோவிந்தராசன், செய்யாறு.

கேட்டது

(தஞ்சாவூர் கிருஷ்ணன் கோயில் தெருவில் கணவனும், மனைவியும்)

""என்னடீ... டென்ஷனா இருக்கே?''
""புடவைக்கு மேட்ச்சா மாஸ்க் போட்டுக்கிறதா... இல்ல மாஸ்குக்கு மேட்ச்சா புடவை கட்டறதான்னு ஒரே குழப்பமா இருக்குங்க''

 ராம்ஆதிநாராயணன்,  
தஞ்சாவூர் - 1

(சென்னை பெசன்ட் நகர் சலூன் ஒன்றில்) 

""என்ன சேர் இது தண்டபாணி, கண்ட கண்ட இடத்துல எல்லாம் குத்துது?''“
""உக்காந்தா மெத்து மெத்துன்னு இருக்குதுன்னு நீங்க சொன்ன அதே பழைய குஷன் சேர் தான்ணே இது. கடைக்கு வந்து மூணு மாசமாச்சில்ல...  அதுதான் உங்களுக்கு பழசெல்லாம் மறந்து போச்சு'' “ 

சசி பிரபு, சென்னை - 90

யோசிக்கிறாங்கப்பா!


தனிமையில் இருப்பவனை பைத்தியம் என்று சொன்ன இந்த உலகம் தான்... 
இப்போது தனிமையில் இருப்பதே வைத்தியம் என்று சொல்கிறது.

ஜ.உன்னிகிருஷ்ணன், நெல்லை.

மைக்ரோ கதை

தென்காசி கோயிலுக்கு   ஒரு சாமியார் வந்திருந்தார். பல்வேறு விஷயங்களைப் பேசிய அவர், நமக்கு ஆபத்து வரும்போது எப்படித் தப்பிப்பது 
என்பதைச் சொன்னார். 
""யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடு.  நாய் துரத்தினால் ஓடாதே ... திரும்பி முறைத்து பார் ...
பாம்பு துரத்தினால் நேராய்  ஓடு.  புலி துரத்தினால் மரத்தின் மேல் ஏறு.  சிங்கம் துரத்தினால் பிணம் போல் நடி''.
சாமியாரின் பேச்சைக் கேட்ட குமாருடைய மனதில் சந்தோஷம்.  கூடவே ஒரு சந்தேகம். சாமியாரிடம் கேட்டான்:
""சாமி ஒரு சந்தேகம். எப்படித் தப்பிப்பதுன்னு தெளிவாச் சொன்னீங்க.  ஒரு முக்கியமான ஆளுகிட்டே இருந்து தப்பிப்பதற்கு வழி சொல்லணும்'' 
""என்ன கேட்கப் போகிறாய்?  கடன் கொடுத்தவங்க கிட்ட  இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு தானே?'' என்று கேட்டார் சாமியார்.
""அதெல்லாம் நான் ஈசியா சமாளிச்சுக்குவேன் சாமி...  ஆனால்?''
""தயங்காமக் கேளு'' என்றார் சாமியார். 
குமார், ""மனைவி துரத்தினால் என்ன  சாமி செய்வது?'' என்று கேட்டதும் அதிர்ச்சியடைந்த சாமியார்,  சிறிது யோசித்துவிட்டுச் சொன்னார்.
""அப்படி துரத்தப்பட்டு  தப்பி வந்தவன் தான் நான்'' என்றார். 


எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்.எம்.எஸ்.


மரங்களை ஜன்னலாக மாற்றி... 
அதைக் காற்றுக்காக காத்துக் கிடக்க வைப்பதெல்லாம் ஆகச் சிறந்த  பாவம்.

கௌந்தி. மு,  சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com