சிரி... சிரி...(19/01/2020)

"வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க''
சிரி... சிரி...(19/01/2020)

* "வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா 
எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க''
"நீ என்ன சொன்னே?''
"ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் 
இருக்கும்ன்னு சொன்னேன்''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை. 

* "காணாமல் போன உங்க மனைவி எப்படி வீட்டுக்கு வந்தாங்க?''
"நீ காணமல் போனதிலிருந்து எங்கம்மா நல்லா சாப்பிடுறாங்க. சந்தோசமா இருக்காங்கன்னு பேப்பர்ல விளம்பரம் போட்டேன். வந்துட்டா''
டி.மோகனதாஸ், நாகர்கோவில். 

* "ஸ்லீப்பர் கோச்சில் குறட்டை விட்டு 
தூங்கினது மிஸ்டேக்''
"ஏன் எழுப்பிவிட்டுட்டாங்களா?''
"எக்ஸ்டிரா சார்ஜ் போட்டுட்டாங்க''
ஏ.நாகராஜன், பம்மல்.

* "புலவரே... இது என்ன புட்டு சுடுதல், இடியாப்பம் பிழிதல், வடை சுடல்ன்னு ஓலையில் எழுதி 
வந்துள்ளீர்?''
"தாங்கள் தானே மன்னா நேற்று அவையில் ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்
எழுப்பினீர்கள்''
ஆர்.யோகமித்ரா, சென்னை-73.

* "பீரோ கதவை ஏன் திறந்தே?''
"ஏட்டையா இதென்ன கேள்வி... சின்னப் 
புள்ளத்தனமா இருக்கு... கதவு 
பூட்டியிருந்தது... அதான் திறந்தேன்''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

* "எடுத்ததுக்கெல்லாம் நீங்க சத்தியம் 
பண்ணுவீங்களாமே?''
"சத்தியமா அப்பட்டமான பொய்யிங்க அது''
வி.ரேவதி, தஞ்சை.

* "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு 
சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
"எங்க சண்டைய யூ டியூப்ல போட்டு 
கலக்கிட்டோம்ல... ஃபேஸ்புக்ல ஏகப்பட்ட லைக் விழுந்திருக்கே''
எஸ்.வேல் அரவிந்த், காங்கேயம்.

* "என்னோட மருமகள் என் குடும்பத்தை உருப்பட விடமாட்டாள்ன்னு நெனைக்கிறேன்''
"ஏன் இப்டிச் சொல்றீங்க?''
"அப்புறம் என்ன? வெங்காய சாம்பார், வெங்காய சட்னி, வெங்காய பஜ்ஜின்னு நாள் தவறாமச் 
செஞ்சா குடும்பம் என்னத்துக்கு ஆவும்?''
ஆர்.எம்.வடுகநாதன், வேதாரண்யம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com