திரைக் கதிர்

சாத்தான்குளம் சம்பவத்துக்கு திரையுலகினர் பலர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
திரைக் கதிர்

சாத்தான்குளம் சம்பவத்துக்கு திரையுலகினர் பலர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில், "இங்கு அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நிச்சயம் நீதி கிடைத்தே தீர வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் ஹரி உள்ளிட்டோரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 


-----------------------------------------------------------------------------------------------------------------------------

தெலுங்கில் "மிடில் கிளாஸ் அப்பாயி' என்ற படத்தில் நானியுடன் முதன்முதலாக ஜோடியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்து மிகப் பெரிய ஹிட்டானது இந்தப் படம். இந்த வெற்றிக் கூட்டணி,  மீண்டும் இப்போது இணையப் போகிறது. 

சிவகார்த்திகேயன்  தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் "கானா'. இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது. தற்போது இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளார்கள்.

​-----------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழில் "தேரோடும் வீதியிலே',  தெலுங்கில் "ஓசரவல்லி' ,இந்தியில்  "படேல் கி பஞ்சாபி ஜதி' படத்திலும் நடித்துள்ளவர் பாயல் கோஷ்.  இவர்,  "தமிழ், தெலுங்கு நடிகைகளை ஹிந்திப் பட உலகினர் தவறான கண்ணோட்டத்துடன்  பார்ப்பதை நிறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார். 


​-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஹரி இயக்கத்தில் சூர்யா ஆறாவது முறையாக நடிக்கவிருக்கும் படம் "அருவா'. சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருந்தது. தீபாவளிக்கு "அருவா' படம் வெளிவரும் என கூறியிருந்த நிலையில், கரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
 

​-----------------------------------------------------------------------------------------------------------------------------

விஜய்யின் 65-ஆவது படமாக உருவாகவுள்ள படத்தில் அவரின் ஜோடியாக நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முருகதாஸ் இயக்கவுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தன்னா, காஜல் அகர்வால் ஆகியோரில் ஒருவர்தான் என்பது முடிவாகி விட்டது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் அசின் என்கிறது பட வட்டாரம். 9 வருடங்கள் கழித்து அசின் நடிக்கப் போகிறார் என சில தகவல்களின் மூலம்  தெரிய வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com