ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க!

என் வயது 39. சுமார் ஐந்து ஆண்டுகளாக சளி தண்ணீர் மாதிரி ஒழுகி கர்ச்சீப் நனைகிறது. சளி நிற்க வழி கூறவும்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க!

என் வயது 39. சுமார் ஐந்து ஆண்டுகளாக சளி தண்ணீர் மாதிரி ஒழுகி கர்ச்சீப் நனைகிறது. சளி நிற்க வழி கூறவும்.

- த. விமல் மோகன் கணேஷ் , திருப்பத்தூர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், வைரஸ் எளிதாக உடலில் புகுந்து, காய்ச்சல், இருமல், சோர்வு, உடல்வலி, தலைவலி, மணம் - சுவை அறியும் திறன் இன்மை, தொண்டைவலி, சளி போன்றவற்றை ஏற்படுத்துகின்றது.

உங்களுக்கு நீண்ட வருடங்களாக இந்த உபாதை இருப்பதால், நோய் எதிர்ப்புத்தன்மை குறைவு என்ற பிரச்னையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் ஆரோக்யம் தமிழக அரசு சிறப்புத்திட்டம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் குறிப்புகள் தங்களுக்கு உதவிடக் கூடும். அது பற்றிய விவரம்:

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் (பிரெஷ் ஜூஸ்)

நாட்டு நெல்லிக்காய் - அரைத்துண்டு ( 50மி.லி.), துளசி - 20 இலைகள் ( 50 மி.லி.), இஞ்சி - கால் துண்டு (சிறிய) 5 மி.லி. சாறு), மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி ( 1.25 கிராம்), தண்ணீர் - 150 மி.லி. அளவு. 250 மி.லி. பெரியவர்களுக்கு 100 மி.லி. சிறியவர்களுக்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து பருகவும். ஒரு நாளில் இருவேளை பருகவும்.

2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானம் ( ஹாட் டிரிங்க்)

இஞ்சி - சிறிய துண்டு ( 5 கிராம்), துளசி - 10 இலைகள், மிளகு - கால் தேக்கரண்டி, அதிமதுரம் - அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, தண்ணீர் - 250 மி.லி. அளவு - 50 மி.லி. பெரியவர்களுக்கு, 20 மி.லி. சிறியவர்களுக்கு, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகவும். ஒருநாளைக்கு இரண்டு வேளை பருகவும்.

3. உடல் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ( காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் செய்யவும்)

தினமும் யோகாசனம், பிரணாயாமம் மற்றும் தியானம் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

சிறிதளவு உப்பு கலந்த மிதமான வெந்நீரால் வாயைக் கொப்பளிக்கவும் ( காலை, மாலை)
நீராவி பிடித்தல் (Steam Inhalation)
மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.
சூரிய ஒளிக்குளியல் (Sun Bath) உங்கள் இருப்பிடத்திலேயே 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவும்
( காலை 10 மணிக்குள், மாலை 4 மணிக்கு பிறகு ) தினசரி உணவில் காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.

4. யோகா பயிற்சிகள்

1. வஜ்ராசனம், 2. பத்மாசனம், 3. சஷங்காசனம், மூச்சு பயிற்சிகள், அனுலோமா, விலோமா ( அய்ன்ப்ர்ம்ஹ, யண்ப்ர்ம்ஹ) சாதாரணமாக மூச்சை உள்ளே இழுத்து வெளியேவிடவும். 10 முறை 3 விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்து, 3 விநாடிகள் நிறுத்திய பின் வெளியே விடவும்.

பிராமரி பிராணாயாமம் ( 5 முறை) மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுமுன் காதை ஆள்காட்டி விரலால் மூடி தலையை முன்னோக்கி வளைத்து (ம்) என்ற சப்தத்துடன் மூச்சை வெளியே விடவும்.

ஆயுர்வேதம் : வில்வ இலை, துளசி இவற்றில் ஒன்றையோ, இரண்டையுமோ தனித்தனியாக இடித்துப் பிழிந்த சாற்றில் சமஅளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்சி கசண்டு மணல் பாகத்தில் வரும்போது, இறக்கி வடிகட்டி, தலைக்குத் தேய்த்து குளித்து வரவும்.

சளியால் ஏற்படும் காதடைப்பிலும், சீழிலும் இளஞ்சூடாக்கி காதில் 4-5 சொட்டுகள் விட்டு பஞ்சடைத்துக் கொள்ளலாம். தொண்டைக் கரகரப்பும், டான்ஸில் வீக்கமுள்ளவர் இதையே வாயிலிட்டுக் கொப்பளிக்கலாம் .

அஸன வில்வாதி தைலம் எனும் பெயரில் விற்பனையாகும் மருந்தையும் இதுபோலவே பயன்படுத்தி குணம் பெறலாம்.

காலை உணவாக ஒரு கப் தினைப் பொங்கல்/ கலப்பு பருப்பு அடை/ கலப்பு தினை தோசை/ கொத்துமல்லி (அ) புதினா சட்னி / இஞ்சி சட்னி / தேங்காய்ச் சட்னி என்ற வகையில் அமைத்துக் கொள்ளவும். மதியம் அரிசி வகை/ தினை - ஒரு கிண்ணம், சாம்பார், பூண்டு ரசம், நாட்டு காய்கறி கூட்டு/ பொரியல் கலப்பு, பச்சைக் காய்கறிகள், மோர் சாப்பிடவும். இரவு - இரண்டு புல்கா, தக்காளி , வெங்காயச் சட்னி/ பல தானியக் கலப்புகள் அரைத்த இட்லி என்று சாப்பிடலாம். இரவு படுக்கும் முன் ராஸ்னாதி சூரண மருந்தை உச்சந்தலையில் தேய்த்த பிறகு படுத்துறங்கவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com