திரைக் கதிர்

"குயின்' என்ற வெப் சீரிûஸ அடுத்து மற்றொரு வெப் சீரிûஸத் தயாரிக்கிறாராம்  கெளதம் வாசுதேவமேனன்.
திரைக் கதிர்

"குயின்' என்ற வெப் சீரிûஸ அடுத்து மற்றொரு வெப் சீரிஸைத் தயாரிக்கிறாராம் கெளதம் வாசுதேவமேனன். திருடன் போலீஸ் கதை போல இந்த சீரிஸ் இருக்குமாம். "கிடாரி' படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன் எழுதி இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். லோகேஷ் கனகராஜ் தற்போது "மாஸ்டர்' படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு திரையிடலுக்காக காத்து இருக்கிறார். அடுத்து ரஜினிக்கு கதை சொல்லியிருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் "மாஸ்டர்' படத்திற்குப் பிறகு "லோகேஷ் கைதி 2' படத்தை தான் இயக்கப் போகிறார் என பேசப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்றும் தெரிவிக்கின்றனர்.

------------------------------------------------------

அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடிக்கும் "சூர்யவன்ஷி' படத்தில், கேத்ரீனாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. இந்த படம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியாவதாக இருந்தது. பொது முடக்கம் காரணமாக தள்ளிப் போய் விட்டது. இதனால், இயல்பு நிலை எப்போது திரும்பும் என ஆவலுடன் காத்திருக்கிறார் கேத்ரீனா.

------------------------------------------------------

"சாயீஷாவுக்கு திருமணத்துக்குப் பின், அவ்வளவாகப் படங்கள் இல்லை; வாய்ப்புகளைத் தள்ளி வைத்திருக்கிறார்' என சொல்லப்பட்ட நிலையில், கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதே போல் ஆர்யாவும், அடுத்த பாய்ச்சலாக ஹிந்தி திரையுலகிற்குச் செல்கிறார். சீன சமூக வலைதளங்களான "டிக் டாக்', "ஹலோ' அவற்றைப் புறக்கணிக்கும் செயல்களை சினிமா பிரபலங்கள் தற்போது ஆரம்பித்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான், "டிக் டாக், ஹலோ' ஆகியவற்றில் என்னுடைய கணக்குகளை முடித்து விட்டேன் என சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

------------------------------------------------------

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பலருக்கு சினிமா நட்சத்திரங்கள் உதவி செய்து வருகின்றனர். மூன்று மாணவ, மாணவியருக்கு லேப்டாப்பை நன் கொடையாக வழங்கியிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

------------------------------------------------------

விஜய்சேதுபதிக்கு பெரும் ஹிட் படமாக இருந்தது, "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' இப்படத்தின் இயக்குநர் கோகுல் அடுத்து இயக்கவுள்ள படத்தின் பெயர் "கொரோனா குமார்'. இதில் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com