பேல்பூரி 

நூறு ரூபாய்க்கு மேல் சாப்பிடுகிறவர்களுக்கு முகக் கவசம் இலவசம்
பேல்பூரி 

கண்டது

(தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

சென்ட்ரல் ஸ்டேஷன்

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

(தஞ்சை - திருச்சி பிரதான சாலையில் உள்ள ஒரு சிற்றுண்டிச் சாலையின் பெயர்)

நெல் சோறு உணவகம்

-வி. ரேவதி, தஞ்சை

(தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் உள்ள ஓர் ஓட்டலில் இருந்த வாசகம்)

நூறு ரூபாய்க்கு மேல்சாப்பிடுகிறவர்களுக்கு முகக் கவசம் இலவசம்

சி.சுரேஷ், தர்மபுரி.

(பவானி அம்மாபேட்டையில் ஒரு தேநீர் கடையில் காணப்பட்ட வாசகம்.)

மெல்ல அவசரப்படு

- க. ரவீந்திரன், ஈரோடு-2

கேட்டது


(கோவை அன்னபூர்ணா ஹோட்டல் அருகே இருவர்)

"" நாமெல்லாருமே கிட்டத்தட்ட ஸ்பைடர் மேன்கள் தான்''
"" சாகசம் பண்ண ஆசை உள்ளவங்களா?''
"" அதில்லை. சிலந்திகள் எல்லாம் எங்கே இருக்கும்?''
""வலை பின்னி கூட்டில் இருக்கும்''
"" அதாவது நெட்ல குடி இருக்கும். நாம ஆண்ட்ராய்டு ஃபோன் வந்த பின் பெரும்பாலும் நெட்லதானே குடி இருக்கோம்?''
"" நீ சிட்டிசன் இல்லை. நெட்டிசன்''

சி.பி. செந்தில்குமார்,
சென்னிமலை-638051

(கோவை அவிநாசி சாலையில் உள்ள கோயில் ஒன்றில் பெரியவரும் இளைஞரும்)

""தம்பி செருப்பைக் கழற்றிப் போடவே பயமாஇருக்குதுப்பா''
""உங்க செருப்பை எல்லாம் எந்த நாயும்கண்டுக்காது... தைரியமா கழற்றிப் போடுங்க''
""அப்படி சொல்லாதேப்பா... ஒரு வேளை இந்த செருப்பை வாங்கின நாய், அதைகண்டுகிடுச்சுனா?''
"".......''

இலக்கியா மகேஷ்,
கோயமுத்தூர்

யோசிக்கிறாங்கப்பா!

ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்,
எல்லாப்பக்கமும் ஷார்ப்பா இருந்தா வைஃப்
இதைப் புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும் லைஃப்.

க.அருச்சுனன்,
செங்கல்பட்டு.

மைக்ரோ கதை


முனியாண்டி ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தான்.
பூத் ஏஜெண்டிடம் அவனுடைய மனைவியின் பெயரைச் சொல்லி, ""என் மனைவி ஓட்டுப் போட்டுட்டுப் போய்ட்டாளா?'' என்று கேட்டான்.
ஏஜெண்ட் ஓட்டு லிஸ்டைப் புரட்டிப் பார்த்துவிட்டு, "" ஆமாம்... ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க''
என்றார்.
முனியாண்டி வருத்தத்துடன் சொன்னான்: ""கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவளப் பார்த்திருக்கலாம்''
பூத் ஏஜெண்ட், "" ஏம்பா உன் பொண்டாட்டி உங்கூட இல்லியா?''
முனியாண்டி சொன்னான்: ""இல்லைங்க ஐயா... அவ செத்து 10 வருஷம் ஆச்சி... ஆனா எப்படியோ ஒட்டு போட மட்டும் வந்துட்டு போறா''

அமுதா அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்.எம்.எஸ்.


மலரின் மணத்தை காற்று அறிவிக்கிறது,
மனதின் மணத்தை சொல் அறிவிக்கிறது.

பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.

அப்படீங்களா!


கோடைக்காலம் வந்துவிட்டால்போதும் எல்லா வீடுகளிலும் ஏர்கண்டிஷன் இயங்கத் தொடங்கிவிடும். மின்கட்டணமும் கன்னாபின்னாவென்று அதிகமாகிவிடும். வீட்டில் இருக்கும்போது, வெப்பத்திலிருந்து தப்பித்து
விடலாம். ஆனால் வெளியில் செல்லும்போது?
வெளியில் செல்லும்போதும் ஏசியின் குளிர்ச்சியை ஒருவர் உணர உதவுகிறது ரியான் பாக்கெட் என்ற மிகச் சிறிய கருவி. ஜப்பான் நாட்டின் சோனி நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்துள்ளது.
இந்தக் கருவியை நாம் முதுகுப் பக்கத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இதற்கென வடிவமைக்கப்பட்ட டி ஷர்ட்டின் கழுத்துப் பகுதியில் இந்தக் கருவியை வைத்துவிட்டு, டி ஷர்ட்டை அணிந்து கொள்ள வேண்டும். இந்தக் கருவியின் பின்புறத்தில் உள்ள சிலிக்கான் பட்டை உங்களுடைய முதுகில் படும். அது உங்களுடைய உடலின் வெப்பநிலையைக் கணக்கிட்டு அதைவிட குறைந்த வெப்பநிலை உள்ள காற்றை உங்களுடைய உடலில் வீசச் செய்யும். உதாரணமாக 96 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை உங்களுடைய உடலில் இருந்தால் அதை 73.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைக்க இந்தக் கருவி உதவும்.
இந்தக் கருவி 80 கிராம் எடை உள்ளது. உங்களிடம் உள்ள செல்பேசியுடன் இந்தக் கருவியை புளுடூத்தின் வாயிலாக இணைத்துக் கொள்ள முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 2- 3 மணி நேரங்கள் வரை இந்தக் கருவி இயங்கி உங்களுடைய உடலின் வெப்ப
நிலையைக் குறைத்துவிடும். குளிர்காலத்தில் இதை அணிந்து கொண்டால் உடலின் வெப்பநிலையை இந்தக் கருவி அதிகரித்துவிடும். வெப்பநிலையை அதிகரிப்பது அல்லது குறைப்பது ஆகியவற்றைத் தானாகவே செய்யும்படி இந்தக் கருவிக்கு நீங்கள் கட்டளை இட முடியும்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com