கீழ்பவானித் திட்டம்

1946-ஆம் ஆண்டு ஈரோடு தொகுதியில் போட்டியின்றி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகத் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநில முதல்வராக பதவிறேற்ற டி.பிரகாசம் 23.3.1947-இல் பதவி விலக நேர்ந்தது.
கீழ்பவானித் திட்டம்


1946-ஆம் ஆண்டு ஈரோடு தொகுதியில் போட்டியின்றி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகத் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநில முதல்வராக பதவிறேற்ற டி.பிரகாசம் 23.3.1947-இல் பதவி விலக நேர்ந்தது.

பிரகாசத்திற்குப் பதிலாக முதல்வராக முயற்சி செய்த ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ஈஸ்வரனிடம் ஆதரவு கேட்டார். அப்போது ஈஸ்வரன் அணியில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

ஓ.பி. ராமசாமி ரெட்டியாரிடம் ஈஸ்வரன் ஒரு நிபந்தனை விதித்தார். உங்கள் ஆட்சியில் லோயர் பவானி திட்டம் அமல்படுத்தப்பட்டால் உங்களை ஆதரிக்க தயார் என்றார். ஓ.பி. ராமசாமி ரெட்டியார் அதற்கு ஒத்துக்கொண்டார்.


ஈஸ்வரன் ஆதரவால் 110 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ராமசாமி ரெட்டியார் முதல்வர் ஆனார். அவர் ஆட்சியில் கீழ்பவானி திட்டம் தொடங்கப்பட்டது. எனவே கீழ்பவானி திட்டம் வர ஈஸ்வரனே காரணம்.

(செ.ராசுவின் "தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்' என்ற நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com