சிரி... சிரி... 

""குடியை நிறுத்த முடியலைடாக்டர்''""நான் நிறுத்திக் காண்பிக்கிறேன்''""உங்களுக்கும் இந்தப் பழக்கம் இருக்கா டாக்டர் ?''
சிரி... சிரி... 

""குடியை நிறுத்த முடியலைடாக்டர்''
""நான் நிறுத்திக் காண்பிக்கிறேன்''
""உங்களுக்கும் இந்தப் பழக்கம் இருக்கா டாக்டர் ?''

வந்தவர்: டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரையைச் சாப்பிட்ட உடனே உடம்பெல்லாம் ஒரே அரிப்பு
டாக்டர்: நீங்கதானே அரிப்புக்கு மருந்து கேட்டிங்க?
வந்தவர் : ???...!!!...???...!!!

-தீபிகா சாரதி,
சென்னை-5


""உனக்கு இ பாஸ் ஏன் கிடைக்கல?''
""மாமியாரோடுசண்டை போட்டுட்டு அம்மாவீடு போக எல்லாம் இ பாஸ் கொடுக்கமாட்டாங்களாம்.''

-ஏ. நாகராஜன்,
பம்மல்.


""படத்துக்குப் போனதா சொன்னீங்களே, என்ன படம் சார்?''
""சொன்னா புரியாது சார்!''
""சொன்னா புரியாத அளவுக்கு அப்படி என்ன படம் சார்?''
""அய்யோ, படத்தோட பேரே "சொன்னா புரியாது'தாங்க''


மனைவி: பிச்சைக்காரனைக் கூப்பிட்டு எதுக்கு திண்ணையில உட்கார வச்சிருக்கீங்க ?
கணவன்: சத்தமாப் பேசி மானத்தை வாங்காத... நெட் தீர்ந்து போச்சுன்னு அவனோட மொபைல்ல ஷேர் பண்ணச் சொல்லிருக்கேன்

""குழந்தையை ஆன்லைன் வகுப்புக்கு நானே தயார் பண்ணிக்கிறேன் சரசு!''
""நீங்க போட்டுக்கிற மேக்கப்பும், செய்யிற அலப்பரையுமே அதை புரிய வைக்குது !''

-வி. ரேவதி,
தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com