சிரி...  சிரி...

டிவி சீரியல் டைரக்டர்: டிவி சீரியலில் நடிக்க சான்ஸ் வேணுமா... கொஞ்சம் அழுது காட்டும்மா!பெண்: என் தலையில நாலு குட்டு போடுங்க... அழுது காட்டுறேன்!"
சிரி...  சிரி...

டிவி சீரியல் டைரக்டர்: டிவி
சீரியலில் நடிக்க சான்ஸ் வேணுமா... கொஞ்சம் அழுது காட்டும்மா!
பெண்: என் தலையில நாலு குட்டு போடுங்க... அழுது காட்டுறேன்!"


""எந்த எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்கத் தெரியணும்''
""எதிர்ப்பே வரலைன்னா?''
""எனக்கு அஞ்சித்தான் எதிர்ப்புவரலைன்னு பேசி சமாளிக்கக்கத்துக்கணும். ''


""வீட்டுப்பாடம் செய்யலேன்னா எங்க டீச்சர் இப்ப அடிப்பதில்லை!''
""ஆமா! ஆன் லைன் கிளாஸ்ல எப்படி அடிக்க முடியும்!''

-கு.அருணாசலம்,
தென்காசி.



""கரஸ்பான்டன்ட் கோர்ஸ் படிப்பு இப்ப இருக்கா?''
""இருக்கே? ஆன் லைன் கோர்ஸா உரு மாறி இருக்கு.''

-ஏ. நாகராஜன்,
பம்மல்.

""முனியம்மா வேலைக்கு எட்டு மணிக்குவராமல் ஏன் பத்து மணிக்கு வர்றே?''
""உங்களுக்குச் சொல்லுறதுக்கு எல்லாத் தெருவிலேயிருந்தும் செய்தி சேகரிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு தாயி''

சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

""ஆன் லைன் கிளாஸூக்கு நீங்க இன்னும் பீஸ் கட்டவே இல்லை''
""இதோ உடனே இரண்டாயிரம் ரூபாயைக் ஸ்கேன் பண்ணி மெயில்ல இமேஜ் அனுப்பிடுறேன் சார்''

பி.பாலாஜி கணேஷ்,
கோவிலாம்பூண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com