திரைக்கதிர்

"மாஸ்டர்' படத்தின் ஹிட் பாடல் "வாத்தி கம்மிங்...' இப்பாடலுக்கு விஜய் என்ன நடனம் ஆடினாரோ அதே பாவனையில்  பலரும்  நடனம் ஆடி வீடியோ பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
திரைக்கதிர்


"சகுந்தலம்' என்ற  புராணக் கதையில் அனுஷ்கா நடிக்க மறுத்தார். தற்போது சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் மார்ச் 20-ஆம்
தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.

"கவலை வேண்டாம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று  பிரபலமானார்.  சமீபமாக பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் அவர், பிரத்யேக புகைப்படங்களை எடுத்து இணையதளங்களில் உலவ விட்டு வருகிறார்.

"மாஸ்டர்' படத்தின் ஹிட் பாடல் "வாத்தி கம்மிங்...' இப்பாடலுக்கு விஜய் என்ன நடனம் ஆடினாரோ அதே பாவனையில்  பலரும்  நடனம் ஆடி வீடியோ பதிவேற்றம் செய்து வருகின்றனர்.  அந்த வகையில் நடிகை நஸ்ரியாவும் "வாத்தி கம்மிங்....' பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால் தனது காதலி ஜுவாலாவுடன் மாலத்தீவில் இருக்கும் புகைப்படத்தை இணையதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். "மழையில் நடனம், இந்த கணத்தைக் கொண்டாடு, வலியைப் புறம்தள்ளு' என அதில் குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

அருண் விஜய்,  அறிவழகன் கூட்டணியில் இன்னும் பெயர் வைக்காத ஒரு படம் உருவாகி வருகிறது. உளவு சம்பந்தமான த்ரில்லர் படமாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  இதில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்குப் பிறகு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஸ்டெபி பட்டேல்.

"பாம்பாட்டம்' என்ற படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்கள். வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இதில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நாகமதி இளவரசியாக நடிக்கிறார்.

"அந்தாதூன்' ஹிந்தி படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் அடுத்து பாலிவுட்டில் "மேரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தை எழுதி  இயக்கவுள்ளார்.  கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேத்ரீனா கைப் நடிக்கவுள்ளார்.

"பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமான தமன், அதன்பின் இசையமைப்பாளராக தனது பாதையை மாற்றிக் கொண்டார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் முதன்முறையாக மலையாளத்தில் "கடுவா' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகப் பயணம் தொடங்குகிறார். 

விக்ரம்  நடித்து வரும்  "கோப்ரா' படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷியா சென்றுள்ளதாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இர்பான் பதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com