அப்படீங்களா!

முகக்கவசம் அணிவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது.  எத்தனையோ புதுவிதமான முகக்கவசங்கள் கிடைக்கின்றன. புதிய வடிவங்களில், வண்ணங்களில் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அப்படீங்களா!


முகக்கவசம் அணிவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது.  எத்தனையோ புதுவிதமான முகக்கவசங்கள் கிடைக்கின்றன. புதிய வடிவங்களில், வண்ணங்களில் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. 

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த "யுனிச்சார்ம்' என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள "முகம் தெரியும் முகக்கவசம்' மிகவும் வித்தியாசமானது.  அதை அணிந்திருப்பவரின் வாய், முக உணர்ச்சிகளை வெளிக்காட்டும்விதமாக அது தயாரிக்கப்பட்டுள்ளது. 

முகக்கவசம் அணிந்து கொண்டு பேசுவது  சிரமமாக இருந்தாலும்,  நாம் அதற்குப் பழகிவிட்டோம்.  

முகக்கவசம் அணிந்து கொண்டு  பிறர் பேசுவதை நம்மால் கேட்க முடியும். 

செவித்திறன் குறைபாடு உடையவர்கள், வாய் பேசமுடியாதவர்களால் கேட்க முடியாது.  வாய் அசைவுகளில் இருந்தும், முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளைப் பார்ப்பதன் மூலமாகவும்  அவர்கள் புரிந்து கொள்வார்கள்.  

பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான சைகை மொழியை முகத்தை மறைக்கும் முகக் கவசத்தை  அணிந்து கொண்டு ஒருவர் பேச முடியாது. 

இவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த "முகம் தெரியும் முகக்கவசம்'  உருவாக்கப்பட்டுள்ளது.  

வாய், முகம் தெரிவதற்காக ஒளி ஊடுருவக் கூடிய  பிலிம், முகக்கவசத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த முகக்கவசத்தை கைகளால் தூய்மைப்படுத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com