ஆங்கிலம் கற்பிக்க புதிய முறை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சிவக்குமார், அரசுப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களும், ஆங்கிலத்தை விரும்பி கற்கவும், தடையின்றி சரளமாக ஆங்கிலத்தில் பேசும்
ஆங்கிலம் கற்பிக்க புதிய முறை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சிவக்குமார், அரசுப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களும், ஆங்கிலத்தை விரும்பி கற்கவும், தடையின்றி சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறமையைப் பெறவும், புதுமையான முறையைக் கண்டறிந்து பயிற்சி அளித்து வருகிறார்.

சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார், திருச்சி ஜமால் முகமது கல்லுôரியில் முதுகலை ஆங்கிலம் பட்டம் பெற்றார். பின்னர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை ஆசிரியர் பட்டம் பெற்றார். 2007 - ஆம் ஆண்டு முதல் சந்திரபிள்ளை வலசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப்பணிபுரிந்து வருகிறார்.

ஆங்கில மொழியைக் கற்பதற்கு தேவையான அடிப்படைத் திறன்களை மையமாக வைத்து, புதுமையை புகுத்தி முவ்வினை நுட்பம் (ட்ரை வெப் டெக்னிக்) புதிய முறையைக் கண்டறிந்துள்ளார்.

ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க, இந்த புதிய யுத்திகளைக் கையாண்டு, கிராமப்புற மாணவ-மாணவியர் தடையின்றி சரளமாக ஆங்கிலம் பேசும் அளவிற்கு புலமை பெறுவதற்கு பயிற்சி அளித்து வருகிறார்.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு, "கேள்வி பதில் வழி திறன் வளர்ப்பு' பயிற்சியின் மூலம் ஆங்கில மொழி பேச்சு புலமையை ஏற்படுத்தினார்.

இந்தப் புதிய முறையைப் பயன்படுத்தி, மற்ற ஆசிரியர்களும் எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

இதனையடுத்து கரோனா பொது முடக்கத்தில் கிடைத்த விடுமுறை நாள்களைப் பயன்படுத்தி, முதல் வகுப்பில் இருந்தே மாணவ-மாணவியருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க காட்சி வழிக் கல்வி-விசுவல் லேர்னிங் என்ற புதிய கற்பித்தல் முறையைக் கண்டறிந்துள்ளார்.

வகுப்பறை சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள படங்கள் (இன்டராக்டிவ் வால்) வழியாக மாணவ - மாணவியர் ஆங்கில மொழி பேச்சு பயிற்சி பெறுவதற்கு ஏற்ப புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இந்த புதிய முறையில் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள காட்சிப் படங்களைப் பார்த்து, மாணவ-மாணவியர் தங்களுக்குள் கேள்வி எழுப்பி, ஆங்கிலத்தில் பதில் சொல்லும் அளவிற்கு பேச கற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய முறை குறித்த சமூக ஊடகங்கள் வழியாக அறிந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆங்கில மொழி ஆசிரியர்களும் இவரைத் தொடர்பு கொண்டும், பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆங்கில மொழி ஆசிரியர்கள் பலர் குழுவாக நேரில் வந்து பார்த்தும் இந்த புதிய பயிற்று முறை நுட்பத்தை அறிந்து செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஆங்கில ஆசிரியர் சிவக்குமார் கூறியதாவது:

""பொதுவாக ஒரு மொழியைப் பேச கற்றுக் கொண்ட பிறகு, அந்த மொழியில் படிப்பதும், எழுதுவதும் சுலபமாகும் என்ற விதியை மையமாகக் கொண்டு, எனது ஆங்கில பேச்சுப் பயிற்சி முறையை உருவாக்கியுள்ளேன். இதில் மாணவர்கள் எளிய முறையில் ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொள்வார்கள். அதாவது கேள்வி பதில் முறையில் பயிற்சி பெற்று, பிறகு சரளமாக
பேசுவதற்கு தயாராவார்கள்.

6 முதல் 8 -ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு மட்டுமின்றி, தற்போது ஒன்றாம் வகுப்பு மாணவ-மாணவியரும் விரும்பி கற்கும் வகையில் காட்சி வழிக் கல்வி என்ற புதிய யுக்தியை உருவாக்கி பயிற்சி அளித்து வருகிறேன். இந்த புதுமையான முறை பயிற்சி மூலம், ஆரம்பக் கல்வியிலேயே, கிராமப்புற மாணவ- மாணவியரையும் எளிய முறையில்ஆங்கிலத்தில் பேச வைக்க முடியுமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com