சிரி... சிரி...

""மாதம் டாக்டருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் செலவாகுது''""டாக்டருக்கு செலவானா உனக்கென்ன...  நீ ஏன் ஃபீல் பண்றே?''
சிரி... சிரி...

""யோகாசனம் செய்ய உட்கார்ந்தவர் இடையில எழுந்திருச்சி துணிக்கு சோப் போடப் போறாரே !''
""யூ  ட்யூப்ல கத்துக்கிட்டவர், இடையில வந்த சோப் விளம்பரத்தையும் யோகா பயிற்சின்னு நினைச்சுட்டார்''

பா.சக்திவேல், 
கோயம்புத்தூர்.


""நல்லா ருசியா சமைத்தாலும் சரி,  சொதப்பலா சமைத்துப் போட்டாலும் சரி, என் மனைவியோட ரியாக்ஷன்  ஒண்ணுதான்''
"" எப்படி?''
""ருசியா இருந்தா சாப் பாட்டை ஒரு பிடி பிடிப்பா;  ருசியா இல்லாட்டி, என்னை ஒரு பிடி பிடிச்சிடுவா''

""மாதம் டாக்டருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் செலவாகுது''
""டாக்டருக்கு செலவானா உனக்கென்ன...  நீ ஏன் ஃபீல் பண்றே?''

""வழக்குல வாய்தா வாங்கிக்கிட்டே இருந்ததுல நீதிபதி கடுப்பாயிட்டார் போல''
""என்னாச்சு ?''
""வக்கீல், இன்னைக்கும் வாய்தா கேட்டதும்,  அடுத்த நூற்றாண்டுக்கு ஒத்தி வச்சிடலாமா' ன்னு கேட்டுட்டாரே!''

""அரிவாளைக் கையில் எடுத்துட்டு, "தொலைச்சிடுவேன்'னு  சொல்லிக்கிட்டிருந்த ஆளு சொன்னபடியே...''            
கொன்னுட்டானா?''
""அரிவாளைத் தொலைச்சிட்டான் !''

எம் அசோக்ராஜா,  
அரவக்குறிச்சிப்பட்டி.

""என்னைப் பொண்ணு பார்க்க வந்தப்ப, எந்த  கெட்ட பழக்கமும் கிடையாதுன்னு சொன்னீங்க. இப்ப சிகரெட் பிடிக்கிறீங்களே ?''
""பொண்ணு பார்த்து , கல்யாணமும் நிச்சயமான பிறகுதான் இந்த பழக்கம் சரசு''

- வி. ரேவதி, 
தஞ்சை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com