திரைக்கதிர்

"முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்கிற படம் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா.
திரைக்கதிர்


"முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்கிற படம் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. இவர் தற்போது "விசித்திரன்' என்கிற படத்தில் ஆர்கே சுரேஷின் மனைவியாக நடித்து வருகிறார். இன்ஸ்டா கிராமில் பூர்ணாவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.


------------------------------------------------------------------------------

"வாமனன்', "எதிர்நீச்சல்' , "வணக்கம் சென்னை' , "அரிமா நம்பி' , "வை ராஜா வை', " எல்.கே.ஜி' உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் பிரியா ஆனந்த். சூரிய உதயத்தின்போது,  கவர்ச்சியாக நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படத்தை இணைய தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.


------------------------------------------------------------------------------

ஆனந்தம்', "ரன்'," பீமா'," சண்டக்கோழி', "அஞ்சான்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இவர் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். 


------------------------------------------------------------------------------

துப்பறிவாளன்', "நம்ம வீட்டுப்பிள்ளை' படங்களில்  நடித்தவர் அனு இம்மானுவல். தற்போது சித்தார்த், சர்வானந்த் நடிப்பில்  "மகாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே இவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அனு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.


------------------------------------------------------------------------------

என்னை அறிந்தால்' படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு "உத்தம வில்லன்', "மாலை நேரத்து மயக்கம்', "கோடிட்ட இடங்களை நிரப்புக', " என்கிட்ட மோதாதே', "நிமிர்' ,  "வெள்ளராஜா', " சீதக்காதி' உள்பட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். இவர்  தற்போது நடித்து வரும் " உன் பார்வையில்' என்ற  படத்தில் தன் சகோதரியின் கொலையாளியைத் தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.


------------------------------------------------------------------------------

விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் பல படங்களில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' படமும் ஒன்று. இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களில் இதுதான் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் கொண்டதாக இருக்கும் என்கிறது கோலிவுட். 


------------------------------------------------------------------------------

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா கதா நாயகனாக நடிக்கும் படத்தில் அருண்பாண்டியன் நடிக்கவிருக்கிறார். த்ரில்லர் கதைக்களமான இப்படத்தில் அதர்வாவிற்கு அப்பா கேரக்டரில் அருண்பாண்டியன் நடிக்கவுள்ளார். 


------------------------------------------------------------------------------

ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மணிபாரதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


------------------------------------------------------------------------------

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன், ""வடசென்னை- 2 இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளது. வட சென்னையை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக போகிறது'' என தெரிவித்துள்ளார்.


------------------------------------------------------------------------------

""நான் "வலிமை' படத்தில் நடிப்பதற்காக பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன். அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக் கொடுத்தார்'' என்று பெருமையுடன் சொல்கிறார் நடிகை ஹூமா குரேஷி. 


------------------------------------------------------------------------------
 

கரோனா பிரச்னையால் தடைபட்டுள்ள "அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாம். "அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளாராம். அதனை இளம் இயக்குநர்கள் இயக்குகிறார்கள். 


------------------------------------------------------------------------------

""50 நாட்களை கடந்துவிட்டது மாஸ்டர். இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது. பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு... இனி வரும் எனது வாழ்நாள் முழுவதும் அசை போட வைக்கும் நிறைய நினைவுகள்... என இன்னும் சொல்லி கொண்டே போகலாம்'' என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். 


------------------------------------------------------------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com