சிரி... சிரி... சிரி... சிரி... 

""விசில் அடிச்சா என் மனைவிக்கு அறவே பிடிக்காது''""அதான், குக்கர்ல சமைக்காமல், பானையில சமைக்கிறீங்களா?''
சிரி... சிரி... சிரி... சிரி... 

""படவாய்ப்புகள்குறைய ஆரம்பிச்சதும், நடிகை நளினாஸ்ரீ தலைகீழா
மாறிட்டாங்க''
""கவர்ச்சியா நடிக்க ரெடின்னு சொல்லிட்டாங்களா?''
""இல்ல, அவுங்க பேரைஸ்ரீ நளினா- ன்னுமாத்திக்கிட்டாங்க!''

""என்னில் அவள் பாதின்னு மனைவியைப் பற்றி பொதுவா சொல்லுவாங்க, தெரியும்.
தலைவர் என்ன, "அவளில் நான் பாதி'ன்னு சொல்றாரு?''
""உருவத்தை வச்சு சொல்றாருங்க அவரு!''

""உங்க பையன்ரொம்ப மரியாதைதெரிந்தவன் சார்!''
""எப்படிச் சொல்றீங்க?''
""கேள்விக்கு பதில் தெரியலைன்னா கூட திரு... திரு...ன்னுமுழிக்கிறான் சார்''

""உடல் எடையைக்குறைக்க என்ன பண்ணலாம் டாக்டர்?''
""தினமும் 5, 6 கி.மீ. வாக்கிங் போங்க !''
""அட, நீங்க வேற டாக்டர்... நடக்கவேமுடியலைனு தானேவெய்ட்டைக் குறைக்கவழி கேட்டேன்''

""பரீட்சை ஹால்ல,எனக்கு முன்னாலஉட்கார்ந்திருந்த பையனைப் பார்த்துதான் நான்எழுதினேன்''
""பிறகு எப்படி அவன் மட்டும் பாஸாகி, நீ பெயில் ஆனே?''
""அவன் வேற கிளாஸ்ல படிக்கிறவன்னுபிறகு தானே தெரிஞ்சிது!'

""நான்ஆபீஸ்லேர்ந்துவர்றவரைக்கும் எங்கஅம்மா கூட சண்டை போட்டுக்கிட்டு இருன்னு உங்க மனைவிகிட்ட சொல்லிட்டு கிளம்பினீங்களே, ஏன் சார்?''
""எப்படியும் அதைத்தான்செய்யப் போறா... நாம சொல்லி செய்ததா இருக்கட்டுமேன்னுதான்!''


- வி. ரேவதி,
தஞ்சை.


எஜமானி: காப்பி, கை தவறி கொட்டிச்சா?அல்லது நல்லா இல்லைனு கொட்டினியா?
வேலைக்காரி: கை தவறிதாம்மா கொட்டுச்சு
எஜமானி: அப்ப, வேற காப்பி தர்றேன்!
வேலைக்காரி : வேண்டாம்மா, மறுபடியும் கொட்டிடப் போகுது!

""விசில் அடிச்சா என் மனைவிக்கு அறவே பிடிக்காது''
""அதான், குக்கர்ல சமைக்காமல், பானையில சமைக்கிறீங்களா?''


""தலைவர் எப்பவும் கரோனா பயத்துலேயே இருக்காரா?''
""ஆமா... மூக்கும் மாஸ்க்கும் போல இணைபிரியாம இருக்கணும்னு
மணமக்களை வாழ்த்தறாரே!''



""உங்களின் இந்த பதவி உயர்வுக்கு உதவியா இருந்தது எதுன்னு தெரிஞ்சிக்கலாமா?''
""பக்குவமான "சோப்' தான் சார்!''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com