சிரி... சிரி...
By DIN | Published On : 03rd October 2021 06:00 AM | Last Updated : 03rd October 2021 06:00 AM | அ+அ அ- |

""புலவர் தனியாக வராமல் துணைக்கு இருவரை ஏன் அழைத்து வருகிறார் ?''
""இருவரும் அவருடைய உதவியாளர்களாம் மன்னா''
-வி. ரேவதி,
தஞ்சை.
""எந்த சோப்பு போட்டாலும் வெள்ளை கலர்ல தான் நுரை வருது''
"" அதனால் என்ன ?''
""அப்புறம் ஏன் சோப்பு மட்டும் கலர் கலரா இருக்கு ?''
""ஈட்டி எறிதலில் இளவரசர் முதல் பரிசு
வாங்கியும் மன்னர் சந்தோஷப்படாமல் வருத்தமாயிருக்காரே?''
""ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாராம்''
மு. மதிவாணன்,
அரூர்.
""அவனிடம் என்னடி சொன்னே...இப்படி தலை தெறிக்க ஓடுகிறானே ?''
""ஐ லவ் யூன்னு சொன்னான்டி... சரி உன்
அப்பாவிடம் வந்து முறைப்படி உன்னை மாப்பிள்ளை கேட்கவான்னு கேட்டேன்டி... அதுக்குத்தான்டி பய இந்த ஓட்டம் ஓடுறான்''
""புது மேனேஜர் கிட்ட பத்து வருஷமா இந்த ஆபீசில் குப்பை கொட்டுறேன்னு சொன்னது தப்பா போச்சு''
""ஏன் என்ன ஆச்சு?''
""சுற்றுச்சூழலைக் கெடுக்குறேன்னு சொல்லி மெமோ கொடுத்துட்டார்''
அப்ரோஸ் பானு,
சென்னை.
""ஒரே ஒரு மஞ்சப் பையுடன் சென்னைக்கு வந்தேன்... இன்னைக்கு பத்து லட்சம் இருக்குதுடா''
""அவ்வளவு மஞ்சப்பை உனக்கெதுக்குடா ?''
அமுதா அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.