சிரி... சிரி...
By DIN | Published On : 12th September 2021 10:24 PM | Last Updated : 12th September 2021 10:24 PM | அ+அ அ- |

ஓவியர் 1: ஒரு எழுத்து தவறிட்டதுக்கு அந்த ஆள் அப்படி கத்தறான்...
ஓவியர் 2: என்ன எழுதச் சொன்னாங்க? நீ என்ன எழுதின?
ஓவியர் 1: TOLETன்னு எழுதச் சொன்னாங்க... நான் TOILETன்னு
எழுதிட்டேன்
- ப நரசிம்மன்,
தருமபுரி.
"" சட்டத்தைக் கையில் எடுக்க முடியல''
""ஏன்?''
""சட்ட புக் எல்லாம் ஒரே கனம்''
""கரோனாவும், உங்க மனைவியும் ஒன்றா... எப்படி?''
""இப்போ எனக்கு உயிர் பயத்தைக் காட்டி பயமுறுத்தறதே, இந்த இரண்டு பேர்தான்!''
வெ.இராம்குமார்,
வேலூர்-1.
""மேடையில் உங்க குரல் ஏன் ஓங்கி ஒலிக்கல?''
""மைக் ஆஃப் ஆயிடுச்சு''
""தலைவர் "வாக்'கு மாறாதவரா எப்படி? ''
""எப்பவும் ஒரே சாலையில் தான் நடைப்பயிற்சி மேற்கொள்வார், அதான்.''
அப்ரோஸ் பானு,
சென்னை.
""மொபைல் வழி லவ் பண்ணுவதில் ஒரு வசதி''
""என்ன?''
""தேவை இல்லைன்னா டெலிட் பண்ணிடலாம்''
- ஏ. நாகராஜன்,
பம்மல்.