ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொண்டை சளி, மலக்கட்டு நீங்க...!

என் வயது 76. இரவு நேரத்தில் தொண்டையில் சளி அதிகமாகி பெரிய தொல்லையாக இருக்கிறது. மலக்குடலில் மலம் தேங்கிக் கொண்டு கெட்டியாகி விடுகிறது. தொண்டை சளி, மலக்கட்டு நீங்க மருந்துள்ளதா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொண்டை சளி, மலக்கட்டு நீங்க...!

என் வயது 76. இரவு நேரத்தில் தொண்டையில் சளி அதிகமாகி பெரிய தொல்லையாக இருக்கிறது. மலக்குடலில் மலம் தேங்கிக் கொண்டு கெட்டியாகி விடுகிறது. தொண்டை சளி, மலக்கட்டு நீங்க மருந்துள்ளதா?

-ந.வைரப்பன்,
அத்திவெட்டி, பட்டுக்கோட்டை.

உடலின் மேல்புறத்தில் ஒரு பிரச்னை, கீழ்ப்புறத்தில் ஒரு பிரச்னையால் அவதியுறும் தங்களுக்கு, உணவின் செரிமானம் சரிவர வேலை செய்யவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. 

ஜீரண சக்தியின்ஆதாரத்தில்தான் மனிதர்களுடைய அடிப்படை பலத்தின் சக்தி அடங்கியுள்ளது. இவ்விரு பிரச்சனையையும் ஒருசேரத் தீர்த்துவைக்கும் ஆயுர்வேத மருந்து ஒன்று இருந்தால், உங்களுக்குச் செலவும் மிச்சம், ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறலாம். அந்த வகையில் உதவிடக் கூடியது தான் "வைச்வாநரம்' என்ற சூரணம் மருந்து.

நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி, சுத்தம் செய்து, பொடித்துப் பயன்படுத்தும் கவலையும் தங்களுக்கு இல்லை. ஏனென்றால் இது ரெடிமேடாக ஆயுர்வேத கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.

இந்துப்பு, குரோசாணி ஓமம், திப்பிலி, சுக்கு ஆகியவற்றை வரிசைக்கிரமமாக அதிக அளவில் எடுத்து, அவை அனைத்திற்கும் சமமாக கடுக்காய்த் தோலையும் சேர்த்து நன்கு பொடித்து சலித்து விற்பனை செய்யப்படும். இந்த சூரண மருந்தை, நீங்கள் சுமார் ஐந்து கிராம் எடுத்து, நூறு மில்லி லிட்டர் வென்னீரில் கரைத்து- காலை, மாலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும். 

இருபத்தியோரு நாட்கள் முதல்  நாற்பத்தித்தெட்டு நாட்கள் வரை சாப்பிடலாம். வயிற்றிலுள்ள வாயுடன் தேங்கி நிற்கும் மலத்தையும் வெளியேற்றி, பசித்தீயையும் நன்றாகத் தூண்டிவிடும். தொண்டையில் சேரும் கயத்தையும் நன்றாகக் கரைத்து வெளியேற்றிவிடவும்.

கபமும், மலமும் இறுகிய நிலையிலுள்ள தங்களுக்கு அவற்றை நெகிழச் செய்து, திரவ வடியில் வெளியேற்றும் சிகிச்சை முறையான "நெய்ப்பும் வியர்வையும்' பெருமளவில் உதவும். அதற்கு தலை முதல் கால் பாதம் வரை, நல்லெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தடவி, சுமார் முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, இளஞ்சூடான வென்னீரில் குளிப்பதால் உட்புறக் குழாய்களாகிய உணவுக் குழாய் முழுவதும் மிருதுவான தன்மையை அடைந்து, அதன்அசையும் தன்மையானது எளிதாகிவிடும். 

தன்னிச்சையாக அசையும் செயலால், குடல் மலமானது எளிதில் வெளியேறத் தொடங்கும். தொண்டையில் அடைபடும் சளியானது விரைவில் நெகிழ்ந்து வாய் வழியாக வெளிப்படும்.

கொள்ளுக் கஞ்சி, மாமிஸ ஸþப்புகள், பசு மற்றும் ஆட்டின் பால், உலர் திராட்சை, பேரீச்சம் பழம், மாதுளம் பழம், நெல்லிக்காய், நார்த்தாங்காய், மோர், விளக்கெண்ணெய், பூண்டு, முற்றாத இளம் முள்ளங்கி, முருங்கைக் கீரை, கடுக்காய், பெருங்காயம், எலுமிச்சம் பழச்சாறு, சுக்கு, மிளகு, திப்பிலி, பசுவின் சிறுநீர் போன்றவை உங்களுக்குச் சாப்பிட நல்லது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com