சிரி...சிரி...
By DIN | Published On : 27th March 2022 09:46 PM | Last Updated : 27th March 2022 09:46 PM | அ+அ அ- |

""தலைவர் மரம் நடும்போது கூடவே ஒருத்தர் இருக்காரே, அவர் யார்?''
""அவரா... கூடவே இருந்து குழி பறிப்பவர்''
""உன் மனைவி உன்கிட்ட எப்பவும் கோபப்பட மாட்டாங்களா? எப்படிடா ?''
""ஆமா, கோபப்பட்டா, நீ வயசான மாதிரி தெரியறே"'ன்னு சொல்லி வைச்சிருக்கேன்டா !''
அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
நோயாளி: ஆபரேஷனுக்கு அப்புறம் பின்னாடி எனக்கு எந்த ப்ராப்ளமும் வராதே டாக்டர் ?
டாக்டர்: நீங்க வயித்துலதானே ஆப்ரேஷன் பண்ணிக்கப் போறீங்க? அப்புறம் எப்படி பின்னாடி ப்ராப்ளம் வரும்?
""உங்க வீட்டு டிவி ஏன் அடிக்கடி ரிப்பேர் ஆகுது ?''
""அது மேல எல்லாரும் கண்ணை வைக்கிறாங்களே, அதான்''
-தீபிகா சாரதி,
சென்னை -5
"" எங்கடா காலைல நடந்து போற ?''
"" வாக்கிங் போறேன்''
"" ஏன்டா, சொல்லி இருந்தா நான் டிராப் பண்ணி இருப்பேன்ல ?''
ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.
"" உங்க பொண்ணு ஏன் இப்படித் தாளம் போட்டு பேசறா?''
""சரியாப் போச்சு... அவ பாட்டு இல்லே பாடிட்டு இருக்கா''
- ஏ. நாகராஜன்,
பம்மல்.