திரைக் கதிர்

பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய "காந்தாரா' படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
திரைக் கதிர்

பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.  

இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ""தெரிந்ததைவிட தெரியாதது அதிகம்' என்பதைத் திரையில், "காந்தாரா' திரைப்படத்தைவிட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது. என்னை புல்லரிக்கச் செய்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. உங்கள் திரைக்கதை, இயக்கம், நடிப்புக்கு என் பாராட்டுகள். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பைச் சார்ந்த அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்....'' என்று தெரிவித்துள்ளார். 

------------------------------------------------------------

""எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சுபாஸ்கரன் அவர்களை சந்தித்து, "பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்புகிறேன்' என்று சொன்னேன்.

இரண்டே நிமிடத்தில் சரி என்று சொல்லிவிட்டார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியில் வந்து பார்க்கும்'' போதுதான் எத்தனை பேர் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிந்தது. சில தருணங்களில் இதுவே எனக்கு பயத்தையும் தந்தது. ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது, அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக் கொள்வேன்'' என ஊடகங்களுகக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். 

------------------------------------------------------------

இனிமேல் மூன்று வருடங்களுக்கு ஒரு படமாவது இயக்கலாம் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார் மோகன்லால். இப்போது "பரோஸ்: நிதி காக்கும் பூதம்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஆவதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் எடுத்து வருகிறார். உடன் நடித்தவர்கள் அவரின் இயக்கும் திறமையை வியக்கிறார்கள். 44 ஆண்டுகளாக மோகன்லால் சினிமாவில் இருந்தாலும் இப்போதுதான் டைரக்ஷன் பக்கம் வந்திருக்கிறார். இப்போது இந்தப் படத்தைப் பார்க்காமலேயே பெரும் பணம் கொடுத்து ஏரியா உரிமையை வாங்க முயற்சி நடக்கிறது.

------------------------------------------------------------

நடிகரும் இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் வழியில் செல்கிறார் சிங்கம்புலி. டி.பி.கே., வடபழனியில் லாட்ஜ் ஒன்று நடத்தி வருவது அறிந்த செய்திதான். அதை போலவே சிங்கம்புலியும் அவரது ஏரியாவான தேனி பகுதியில் ரெஸ்டாரன்ட்டுடன் கூடிய லாட்ஜ் ஒன்றையும் நடத்திவருகிறார். படப்பிடிப்பு இல்லாத நாள்களில் ஹோட்டலுக்கு விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சிங்கம் புலி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com