பேல் பூரி

''சாப்பாட்டுல நான் சொல்றதைக் குறை.. டென்ஷன் குறைஞ்சிடும்..!''''என்னடா குறைக்கச் சொல்றே..?''''தக்காளியைத் தாண்டா சொல்றேன்..!''
பேல் பூரி

கண்டது


(தருமபுரி மாவட்டம் அரூர் மஜீத் தெருவில் உள்ள ஓர் இனிப்பகத்தின் பெயர்)

''ஜெயில் ஸ்வீட்ஸ்''

-மு.மதிவாணன்,
அரூர்.

(கிழக்குத் தாம்பரம் மாடம்பாக்கம் மெயின் ரோடில் சாந்தி நிகேதன் காலனியில் உள்ள ஒரு சைவ உணவகத்தின் பெயர்)

''சாதம் வைச்சா போதும்''

-மீ.ஜெய்,  
சென்னை.

(தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

''கொடுங்கனி''

-மா.இராமச்சந்திரன்,
உடன்குடி.

கேட்டது


(விழுப்புரத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இருவர் பேசிக் கொண்டது)

''என்னால்தான் என் மனைவிக்கும் வீட்டு வேலைக்காரிக்கும் சண்டை வருது!''
''எப்படி சார்..''
''யார் வேலைக்காரி, யார் வீட்டுக்காரின்னு நான் முடிவு செஞ்சி சொல்லணுமாம்..?''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

(திருச்சி பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள் பேசிக் கொண்டது)

''சாப்பாட்டுல நான் சொல்றதைக் குறை.. டென்ஷன் குறைஞ்சிடும்..!''
''என்னடா குறைக்கச் சொல்றே..?''
''தக்காளியைத் தாண்டா சொல்றேன்..!''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(காரைக்கால் நல்லாத்தூரில் ஒரு வீட்டின் வெளியே தம்பதி பேசிக்கொண்டது)

''என் தங்கச்சி பொண்ணு கல்யாணத்துக்கு என்ன செய்யப் போறீங்க?''
''நான் என்ன சொன்னாலும் செஞ்சாலும் நீ ஏத்துக்க மாட்டே! உன் பிளான்படியே செய். வழக்கம் போல் பின்னாடியே வர்றேன்.''

-சங்கீதசரவணன்,
மயிலாடுதுறை.

யோசிக்கிறாங்கப்பா!


நம்பி வாழ்வது  வாழ்க்கை அல்ல; 
நம்பிக்'கை'யோடு வாழ்வதே வாழ்க்கை.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.


 மைக்ரோ கதை


''ஏம்பா சேகர். என்கிட்ட ஆயிரம் ரூபாய் இல்லை.. இல்லைன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு எப்படியாவது ஆயிரம் ரூபாய் தான்னு நச்சரிக்கிறே..?''  

''சரிப்பா லோகு. ஒரு ஐநூறு ரூபாயாவது தா? ரொம்ப அவசரம். திடீர் செலவு வந்துட்டதாலே சமாளிக்க முடியலை. நீ கொடுக்கற இந்த ஐநூறு ரூபாயை வைச்சுதான் சம்பளம் வர்ற வரை ஓட்டணும்.''

''நீ எப்படி கேட்டாலும், என்ன சொன்னாலும் என்கிட்ட ஒரே பதில்தான். இப்போ என்கிட்ட  ஐந்து ரூபாய் கூட இல்லை.  போய் வேறு யாருகிட்டேயாவது கேளு. பகையை வளர்க்காதே. போய்ட்டு வா..'' என்று லோகு கறாராய் சொல்ல, மன வேதனையுடன் திரும்பினான் சேகர்.

'இந்த லோகுவுக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து ஆறு மாசமாச்சு. திரும்பி வாங்க எவ்ளோ கெஞ்சினாலும் வர்ற மாட்டேங்குதே..'' என்று சேகர் புலம்பிக் கொண்டே வீடு போய் சேர்ந்தான்.

-இரா.சிவானந்தம்,
கோவில்பட்டி.

எஸ்.எம்.எஸ்.


அதிகமாய் பேசுறவன் அடிமுட்டாள். 
மௌனமாய் இருக்கிறவன் அதிபுத்திசாலி.

-தா.முருகேசன்,
திருத்துறைப்பூண்டி.

அப்படீங்களா!

வாட்ஸ் ஆப்பில் அதிக துல்லிய தரத்துடனான (ஹெச்.டி.)  புகைப்படத்தை அனுப்பும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  
பொதுவாக,  வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் புகைப்படங்கள் சேமிப்பு இடத்தைக் குறைப்பதற்காகத் தரம் குறைக்கப்படும். இதனால் அந்தப் புகைப்படங்கள் துல்லியமாக இருப்பதில் சற்று குறைபாடு இருந்தது. 
இந்த நிலையில், புகைப்படங்களை அனுப்பும்போது துல்லிய தரத்துடன் அனுப்ப வேண்டுமா?  அல்லது சாதாரண தரத்துடன் அனுப்ப வேண்டுமா?  என தேர்வு செய்து அனுப்பலாம்.
புகைப்படத்தைத் தேர்வு செய்து அதை பிறருக்கு அனுப்பும்போது ஹெச்.டி. என தேர்வு விட்டால் போதும்.  அந்தப் புகைப்படம் துல்லிய தரத்துடன் சென்றடையும். அப்படி தேர்வு செய்யவில்லை என்றால் வழக்கமான சாதாரண தரத்துடன் சென்றடையும்.
அப்படி துல்லிய தரத்துடன் அனுப்பப்பட்ட படத்தின் இடதுஓரத்தில் ஹெச்.டி. என குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்தச் சேவையைப் பெற முதலில் வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். 
இதேபோல், வாட்ஸ் ஆப்பில் புகைப்படம், விடியோ, ஆவணங்களுக்கு கீழ் தலைப்பிட்டு அனுப்பப்பட்ட தகவலை திருத்தம் செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யத் தொடங்கி உள்ளது.  தகவல்களை அனுப்பிய 15 நிமிஷங்களில் அதில் திருத்தம் செய்யலாம். 
இதேபோன்று எழுத்து வடிவில் அனுப்பிய தகவல்களை சரி செய்யும் வசதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com