பேல் பூரி

'என்ன மேடம். இவ்வளவு கத்தியும் ஒன்றும் வாங்காம போறீங்க?''அதான் நீங்க பேசினதெல்லாம் காதில் வாங்கிட்டேனே!'
பேல் பூரி


கண்டது

(சிதம்பரத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் எழுதப்பட்டிருந்தது)

'இங்கு மட்டுமே மத நல்லிணக்கம் உண்மையில் கடைப்பிடிக்கப்படுகிறது.'

பி.பாலாஜிகணேஷ்,
சிதம்பரம்.

(புதுச்சேரியில் உள்ள இரு ஊர்களின் பெயர்கள்)

'பத்துக்கண்ணு', 'காட்டேரிகுப்பம்.'

இரா.ரமேஷ்பாபு,
புதுச்சேரி.

(பேராவூரணி அருகேயுள்ள ஒரு ஊரின் பெயர்)

'ரெட்டவயல்'

-கீதா முருகானந்தம்,
கும்பகோணம்.

கேட்டது

(தஞ்சாவூர் மேலவீதியில் இருவர் பேசியது)

'பெரிய வெங்காயத்தை ரூ.100க்கு 4 கிலோ விற்கிறானே? வாங்கலியா நீ!'
'அவன் பொறுக்கி வாங்க விடமாட்டேன்பா?'
'நீ பொறுக்கின்னு அவனுக்கு எப்படி தெரியும்!'

வி.ரேவதி,
தஞ்சாவூர்.

(சென்னை தி.நகர் காய்கனி சந்தையில் வியாபாரியும், வாடிக்கையாளரும்..)

'தக்காளி வாங்கலையா சார்!'
'இன்னும் விலை குறையுமாம். நாளைக்கு வர்றேன்!'

லெ.நா.சிவக்குமார்,
மேற்கு மாம்பலம்.


(திருச்சியில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளரும், வாடிக்கையாளரும் பேசியது)

'என்ன மேடம். இவ்வளவு கத்தியும் ஒன்றும் வாங்காம போறீங்க?'
'அதான் நீங்க பேசினதெல்லாம் காதில் வாங்கிட்டேனே!'

சம்பத்குமாரி,
பொன்மலை.

யோசிக்கிறாங்கப்பா!

தகுதி இருந்தும் வாய்ப்பு வரவில்லை என்றால் சினப்படு;
வாய்ப்பு வந்தவுடன் தகுதி வரவில்லை என்றால் பயப்படு.

ஜி.மஞ்சரி,
கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை

மில் வேலை முடிந்து கவலையுடன் வீடு திரும்பினார் சண்முகம். அவரின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிய மனைவி பிரியா ஆவலுடன், 'பணம் கிடைத்ததா?' என்று கேட்டாள்.
உடன் பணிபுரியும் ராகவன்கிட்ட மட்டும்தான், சண்முகம் கடன் வாங்கிப் பழக்கம். அவனும் சில நாள்களாகப் பணிக்கு வரவில்லை.
'என்னங்க. கேட்கிறேன்ல. நாளைக்கு மறுநாள் மகள் கவிதாவோட பிறந்த நாள். புது டிரஸ் எடுக்க வேண்டாமா?'
'என்ன செய்ய மாதம் முடிய நாலு நாள் இருக்கு. கையில் முந்நூறு ரூபாய்தான் இருக்கு. புது டிரஸ், ஸ்வீட் வாங்க ஏழுநூறு ரூபாய் வேணும். நம்ம கஷ்டத்தை குழந்தைகிட்ட காட்டக் கூடாது. வேறு எங்காவது கடன் கிடைக்குமான்னு பார்க்கிறேன்.'
இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, பிரியா பள்ளியைவிட்டு துள்ளிக் கொண்டு ஓடி வந்தாள்.
'அப்பா. எனக்கு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது' என்று கூறி சான்றிதழையும், கவரையும் சண்முகத்திடம் கவிதா அளித்தாள். அந்த கவரை பெற்றோர் பிரித்து பார்க்க, உள்ளே ஐநூறு ரூபாய் தாள்கள் இரண்டு இருந்தன. சந்தோஷத்துடன் மகளின் பிறந்த நாளைக் கொண்டாட தயாராகினர் சண்முகமும், பிரியாவும்.

இரா.சிவானந்தம், கோவில்பட்டி.

எஸ்எம்எஸ்

பணம் படைத்தவன் உணவில் ருசியைத் தேடுகிறான்.
பணமற்றவன் பசியில் உணவைத் தேடுகிறான்.

ஜி.அர்ச்சுனன், செங்கல்பட்டு.

அப்படீங்களா!

2009இல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆஃப் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டுகளில் இணையவழி எஸ்.எம்.எஸ்., புகைப்படம், விடியோ, தொலைபேசி அழைப்பு, விடியோ அழைப்பு, குழு அழைப்பு, சேனல்... என பல்வேறு புதிய சேவைகளைத் தொடங்கினர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்மார்ட்போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாட்ஸ் ஆஃப்பை உபயோகிக்க பயன்படும் செயலிக்கான அப்டேட்டைகளை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான அப்டேட்டுகளை வாட்ஸ் ஆஃப் நிறுத்தி வருகிறது. அதன்படி, அக். 24 முதல் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்
ஃஆப் செயல்படவில்லை. இதற்கு பதிலாக புதிய வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் அவர்கள் வாங்க வேண்டும்.
அந்த வரிசையில் வரும் செல்போன்கள்: சாம்சங் கேலக்ஸி எஸ்2, சாம்சங் கேலக்ஸி நெக்சஸ், சாம்சங் கேலக்ஸி எஸ், சாம்சங் கேலக்ஸி டாப் 10.1, ஐபோன் 5, ஐபோன் 5 சி, சோனி எக்ஸ்பீரியா இசட், சோனி எக்ஸ்பீரியா எஸ்2, சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க்3, ஹுவாய் அசண்ட் டி, ஹுவாய் அசண்ட் டி1, மோட்டரோலா ரேசர், மோட்டரோலா ஜூம்,ஹேச்டிசி டிசைர் 500, ஹேச்டிசி ஒன், ஹேச்டிசி சென்சேஷன், ஹேச்டிசி டிசைர் எச்டி, எல்ஜி ஆப்டி

மஸ் கி புரோ, நெக்சஸ் 7. அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com