சிரி... சிரி...

'டாக்டர் எனக்கு பத்து நாளா ஒரே கனவா வருது!''அதனால் என்ன?''கனவுகளுக்கு இடையில் விளம்பரம் வேற கூடுதலா வருது டாக்டர்.'
சிரி... சிரி...


ஸ்ல கொஞ்சம் குறைக்கக் கூடாதா டாக்டர்?'
'நீங்க அநாவசிய கேள்விகளைக் குறைங்க? நானும் குறைச்சுக்கிறேன்.'


'என்ன டாக்டர். இஷ்டத்துக்கு மருந்து சாப்பிட சொல்றீங்க?'
'பின்னே நீங்க அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடற
வருன்னு சொன்னீங்களே?'

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.


'டாக்டர் எனக்கு பத்து நாளா ஒரே கனவா வருது!'
'அதனால் என்ன?'
'கனவுகளுக்கு இடையில் விளம்பரம் வேற கூடுதலா வருது டாக்டர்.'

எஸ்.மாரிமுத்து, சிட்லப்பாக்கம்.



'டாக்டர் கலர், கலராய் மாத்திரை தர்றீங்களே! 
குடலுக்கு ஏதாச்சும் கெடுதல் பண்ணுமா?'
'சுத்தமான நாட்டு சர்க்கரை பாகுவில் தயாரித்த கலர் மிட்டாய் என்ன செய்யப் போகுது!'

நாஞ்சில் சு.நாகராஜன், பறக்கை.


'டாக்டர் ஆபரேஷனில் வெற்றி பெற்றதும் அழுகிறாரே?'
'ஆனந்த கண்ணீராம்..'

மஞ்சுதேவன், பெங்களூரு.

'தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு இந்த மருந்தைச் சாப்பிடுங்க?'
'இதை சாப்பிட்டா நடக்க மாட்டேனா டாக்டர்!'
'இல்லை. தூங்க  மாட்டீங்க?'


'வயிற்றுல ஆபரேஷன் பண்ணி முடிச்ச உடனே எதுக்கு தண்ணீர் குடிக்கச் சொல்றீங்க?'
'தையல் போட்டதுல  ஏதாவது லீக் இருக்கான்னு செக் பண்ணதான்!'

தீபிகா சாரதி, சென்னை.


'அந்த டாக்டர்கிட்ட போயிட்டு வந்ததிலிருந்து என் மனைவி என்னை அடிக்கறதே இல்லை..'
'எப்படி?'
'அவர் போட்ட ஊசியில் மனைவியால கையைத் தூக்க முடியாமல் போச்சு!'


'ஆஸ்பத்திரிக்கு போயிருந்தப்ப ரூ.500ஐ எங்கேயோ தொலைச்சிட்டேன்?'
'இனிமே வியாதி குணமாகிடும் விடு. ஆஸ்பத்திரிக்கு தொலைக்க வேண்டியதை தொலைச்சாச்சில்லை..'


'நர்ஸ்... ஆபரேஷன் முடிந்து தையல் போடறதுக்கு முந்தி ஒரு தடவை மானிட்டரில் பார்த்துடுவோம்..'
'எல்லாம் சரியா இருக்கான்னா டாக்டர்..'
'இல்லை. கத்தி, கத்தரி, கிளவுஸ்.. எதையாவது உள்ளே வச்சிருக்கோமான்னு?'


'முடி உதிர்வதை நினைச்சா கவலையா இருக்கு டாக்டர்..'
'எனக்குக் கூடதான் உதிருது. நான் எங்கேயாவது கவலைப்படறேனா..'
'உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சே டாக்டர்..'



'தலைவலின்னு வந்த எனக்கு இப்போ தலைசுற்றல் வந்துடிச்சி டாக்டர்?'
'தலைவலி போயிடுச்சில்லை. அதை சொல்லுங்க சார்..'


'இந்த டாக்டர் ஹோட்டல் நடத்துறாரா?'
'ஆமா சார். ஏன் கேக்கறீங்க?'
'சாதா டோக்கன் ரூ.500.
ஸ்பெஷல் டோக்கன் ரூ. ஆயிரமுன்னு சொல்றாங்களே..'


'டாக்டர்கிட்ட பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்றது சரிதாங்க?'
'எப்படி?'
'சத்தியமா இதுக்கு மேல் பணமில்லைன்னு சொன்னேன். 
அன்டர்வேர் பாக்கெட்டில் ஐநூறு இருப்பது ஸ்கேனிங்கில் தெரிஞ்சதுன்னு சொல்லிட்டாரே?'

வி.ரேவதி, தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com