பேல் பூரி

""நான் அவளை காதலிக்கிறது ஊருக்கே தெரியும்!''"" அவ்ளோ வெளிப்படையானதா உங்க காதல்!''"" ஆமாம். ஆனால் அவளுக்குத் தெரியாதே?''
பேல் பூரி


கண்டது

(திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களின் பெயர்)

தமிழூர், தமிழாக்குறிச்சி

(அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)


தமிழ்பாடி


-சண்முகசுப்பிரமணியன்,
திருநெல்வேலி.

(பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)


பேய்க்காலிக்காடு


( ஆவுடையார்கோயில் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)


பேயாடிக்கோட்டை

-ப.விஜயகுமார்,
பட்டுக்கோட்டை.

கேட்டது


(திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரி அருகே இரு மாணவர்கள்)

""நான் அவளை காதலிக்கிறது ஊருக்கே தெரியும்!''
"" அவ்ளோ வெளிப்படையானதா உங்க காதல்!''
"" ஆமாம். ஆனால் அவளுக்குத் தெரியாதே?''

-எஸ்.கார்த்திக் ஆனந்த்,
காளனம்பட்டி.

(மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இரு கடைக்காரர்கள் பேசியது)

""இங்கே வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகுதான் தெரியுது உண்மை நிலவரம்?''
""என்னன்னு...''
""நாம இத்தனை நாள் தினம் வாடகை நிற்கிற இடத்துக்குதான் கொடுத்திருக்கோம். கடை போட்டது கவர்மென்ட் இடமுன்னு?''

-ச.க.சரவணன்,
மயிலாடுதுறை.

(திருநெல்வேலி ஜவுளி ஸ்டோரில் இளைஞரும், விற்பனைப் பிரதிநிதியும்..)

""எதுக்கு உங்க மனைவிக்கு சிங்கிள் கலர் புடவையை மட்டும் காண்பிக்கச் சொல்றீங்க!''
""போன தடவை 9 கலர் உள்ள புடவைக்கு 9 மேட்சிங் பிளவுஸ் எடுத்திட்டாங்க அதனால்தான்?''

-தீபா,
பாளையங்கோட்டை.

யோசிக்கிறாங்கப்பா!


காது கொடுத்து கேட்பதற்கு 
மனமும் வேண்டும்.

-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.

மைக்ரோ கதை


டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தன்னுடைய மேடைப் பேச்சை ரசித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சபேசன்.

"யாருக்குத்தான் துன்பம் இல்லை. மேடு இருந்தால் பள்ளம் இருக்கும். பகல் இருந்தால் இரவு இருக்கும். ரோஜா என்றாள் முள் இருக்கும்' என்று தத்துவரீதியாகச் சென்றது பேச்சு. திடீரென்று சாப்பாட்டின் நடுவே ஒரு பச்சை மிளகாயை நன்றாக மென்றுவிட்டார் சபேசன்.  மிளகாய் உரைக்கவே கடும் கோபத்துக்கு ஆளானார்.

""என்னடி இது சாப்பாட்டில் மிளகாய்.'' என்று எகிறினார் சபேசன்.  ஆனால், அவரது மனைவி அசரவில்லை.

""ரோஜா என்றால் முள் இருக்கும். சாம்பார் என்றால் பச்சை மிளகாய் இருக்குமுங்க..'' என்றார் சிலேடையாய். 

தன்னுடைய மனைவி தனது பாணியிலேயே மடக்கியதைக் கண்ட சபேசன் 
எதுவும் சொல்லத் தோன்றாமல், சாப்பாட்டைத் தொடர்ந்தார்.


-மா.அருள்செல்வி,
மரத்துறை.


எம்எம்எஸ்


என்னதான் கைப்பேசின்னு பேர் வைத்தாலும், 
வாய்தான் பேசணும்.

-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை.

அப்படீங்களா!

தகவல் பரிமாற்றச் செயலியான வாட்ஸ் ஆஃப்புக்குப் போட்டியாக டெலிகிராம் உள்ளது. பெரும்பாலானவர்கள் வாட்ஸ் ஆஃப்பை பயன்படுத்தி வந்தாலும், 2 ஜிபி பைல்களை பிகிரவும், எண்ணிக்கையில்லா தரவுகளை கிளவுட் சேமிப்பில் வைக்கவும் டெலிகிராம் கூடுதல் சேவைகளாக வழங்கி வருகிறது.

தற்போது மேலும் புதிய சேவைகளை டெலிகிராம் அறிமுகம் செய்துள்ளது. குழுவில் உள்ள குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு தகவல் பரிமாற்றத்தை மறைக்க  அட்மின்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

முகப்பு படத்தை (புரோபைல் பிக்சர்) குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் (பப்ளிக் புரோபைல் பிக்சர்) புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட தகவலை மறைக்கும் அதன் மீது திரையிடும் புதிய சேவை (ஸ்பாய்லர்) அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த சேவை டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது விடியோ, புகைப்படம் என அனைத்தையும் திரையிடும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதைப் பெற டெலிகிராம் செயலியை அப்டேட் செய்துவிட்டு, திரையிட வேண்டிய தகவலை தேர்வு செய்து வயது ஓரம் அமைந்துள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ( ஹைட் வித் ஸ்பாய்லர் எபெக்ட்) தேர்வு செய்து அனுப்பலாம். அந்தத் தகவல் திரையுடன் சென்றபடையும். அதைப் பெறுபவர்கள் கிளிக் தேர்வு செய்தால் திரை விலகிவிடும். 

பயனாளர்கள் வரையவும், எழுதவும், புதி எமோஜிகளை பயன்படுத்தவும் புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.

-அ.சர்ப்ஃராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com