திரைக்கதிர்

கமலின் திரையுலக மீள் பிரவேசம் மற்றும் உரையாடல் வெளிப்பாடு
திரைக்கதிர்

கடந்த மாதம் முழுவதும் தேர்தல் களத்தில் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த கமல், தற்போது மீண்டும் தனது படங்களின் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கமல், தனது மகள் ஸ்ருதிஹாசனிடம் ஜாலியாகப் பேசும் நேர்காணல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கமல், ஸ்ருதியின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்திருந்தார். அப்போது "நிறைவேறாத ஆசைகள்' குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கமல், "நிறைவேறாத ஆசைகள் எனக்கு நிறைய இருந்தன. ஆனால், அதையெல்லாம் பட்டியல் போட்டு வைக்க எனக்குப் பிடிக்காது' என தெரிவித்துள்ளார்.

-----------------------

"விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி மும்முரமாக நடந்து வருகிறது. முதல் பாகம் வெளியாகி பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கவனம் ஈர்த்தது. ஏற்கெனவே படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாக, அதற்கேற்றவாறு இந்தப் பாகத்தைச் செதுக்கி வருகிறார் வெற்றிமாறன். தென்காசியில் தொடர்ந்து இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், இப்போது அங்கே க்ளைமாக்ஸ் ஃபைட் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சொல்கிறார்கள். இந்தப் படப்பிடிப்போடு "பாகம் 2'க்கான ஷூட்டிங் முழுமையாக நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டீ ஏஜிங் டெக்னாலஜிக்காக வெற்றிமாறன் அமெரிக்கா பறக்கிறார்.

-----------------------

வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில் தனது முன்னாள் பாய்பிரெண்ட்கள் பற்றியும், அவர்களுடன் டேட்டிங் சென்றது குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார்.அதில், "நான் முதல் முறையாகக் காதலித்த பையன் என்னை ஏமாற்றிவிட்டான். அவனுடன் பிரேக் அப் ஆன புதிதில் அவனைக் கல்லூரியில் காதலர் தினத்தன்று சந்தித்தேன். அவன் என்னிடம் அவனது முன்னாள் காதலியை டேட்டிங்கிற்காக சந்திக்கப் போகிறேன் என்று தெரிவித்தான்.அந்த நாளில் அவன் என்னை நொறுக்கிவிட்டான். ஆனால் நான் இப்போது என் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறேன்.

ஆனால் முதல் காதலன் என்னை ஏமாற்றியது எனக்குள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனது வேகத்தை நொறுக்குவதாகவும், வலி மிகுந்ததாகவும் இருந்தது.

ஆனால் அந்தப் பின்னடைவுதான் நான் முன்னேற வழிவகுத்தது. நான் அடிக்கடி டேட்டிங் செல்பவள் கிடையாது. சிலருடன் டேட்டிங் சென்றிருக்கிறேன். ஆனால் நான் சீரியஸாகவும், அதிக நாள்களும் டேட்டிங் செய்தவரையே திருமணமும் செய்து கொண்டேன்' என்றார்.

-----------------------

தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவுள்ள படம் "ராமம் ராகவம்'. அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகத் தயாராகியுள்ளது. அருண்

சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷô சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது சமுத்திரக்கனி குறித்துப் பேசிய பாலா, "சமுத்திரக்கனியோட மாபெரும் ரசிகனாக நான் இங்கு வந்திருக்கிறேன். நடிப்பிலும் தேசிய விருது வாங்கி, இயக்கத்திலும் நிறைய படங்கள் பண்ணி தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டார். அதைத் தாண்டி அவருடைய கடுமையான உழைப்புக்கு ரசிகன்.

உதவும் மனப்பான்மை இன்னும் பெரிது. இது போன்ற குணம் மட்டும் அவரிடம் தொடர்ந்து இருந்தால் அவரால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள்' என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com