பேல் பூரி

பின்னடைவு வந்தாலும் முயற்சியால் முன்னுக்கு வா! கடலின் அலைகள் சொல்கிறது.
பேல் பூரி

கண்டது


(பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஊரின் பெயர்)

'உப்பு விடுதி'

-சாந்தி,
ருவாரூர்.


(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'வில்லுக்குறி'

-அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.

(சென்னை அண்ணா நகர் மூன்றாவது நிழல் வீதி அருகேயுள்ள ஒரு புடவைக் கடையின் பெயர்)

'மனம்'

-சம்பத்குமாரி,
பொன்மலை.

கேட்டது


(பாபநாசம் சந்நிதி தெருவில் தம்பதி பேசியது)

'ரெண்டு பிளவுஸ் எடுத்தேங்க..?'
'சரி.. அதுக்கென்னா?'
'ரெண்டு சேலை எடுக்கணும்ங்க..  எனக்கு ஒண்ணுமில்லை. உங்க அண்ணன் பொண்ணு மேரேஜ் வருது.  நான் கிராண்டா நின்னாதானே உங்களுக்கு கௌரவம்..'

-கே.பிரசன்னா,  
பாபநாசம்.

(விருதுநகரில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் மேலாளரும், வாடிக்கையாளரும் பேசிக் கொண்டது)
'உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் லோன் அலாட் ஆகியிருக்கு.  இ.எம்.ஐ. எப்படி கட்டப் போறீங்க?, எவ்வளவு கட்டப் போறீங்க? ஏதேனும் சந்தேகம் இருக்கா?'
'வாங்கியதை திருப்பி உங்களுக்கு கொடுக்
கணுமா.. சார்..'
'என்னது....'

-ஏ.எஸ்.ராஜேந்திரன்,
விருதுநகர்.

(மதுரை ஜவுளிக்கடை சேலை வாங்கும் பிரிவு ஒன்றில் தம்பதி பேசியது..)

'உன் அம்மாவுக்கு உன் ரேஞ்சுக்கு சேலை எடுத்திட்டு, என் அம்மாவுக்கு மட்டும் குறைந்த விலையில் எடுக்கறீயே..?'
'என் அம்மா சில நாள் கட்டிட்டு எனக்கு கொடுப்பாங்க.. ஆனா உங்க அம்மாவோ  உங்க அக்காவுக்கு
தான் தருவாங்க..?'

-நா.குழந்தைவேலு,
மதுரை.

யோசிக்கிறாங்கப்பா!


பின்னடைவு வந்தாலும் முயற்சியால் முன்னுக்கு வா! 
கடலின் அலைகள் சொல்கிறது.

-ஜனனி ரமணன்,
ராசிபுரம்.

மைக்ரோ கதை


துறவி ஒருவர் தனக்கு தேவையான பொருள்களைத் தூக்கிக் கொண்டு மலை உச்சியை நோக்கி  ஏறிக் கொண்டிருந்தார். செங்குத்தான மலை ஏற ஏற சுமை அதிகமாகி  துறவிக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது .  சற்றுதூரம் சென்றதும், ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்றுவயது தம்பியை தூக்கிக் கொண்டு உற்சாகமாய் பாட்டு ஒன்றை பாடிக் கொண்டு  உச்சியை நோக்கி போவதை 
பார்த்தார்.

துறவிக்கோ ஆச்சரியம் தாங்காமல், 'இவ்வளவு சிறிய பையை தூக்கிக் கொண்டு என்னால் மலையில் ஏற முடியவில்லையே! உன்னால் எப்படி பெரிய பையனை தூக்கிக் கொண்டு மலை ஏற முடிகிறது' என்றார்.

அதற்கு சிறுமியோ, 'ஐயா நீங்கள் தூக்கிகொண்டிருப்பது  ஒரு சுமையை... ஆனால்நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை' என்றாள்.

அன்பு எதையும் சுமக்கும் என்பது உண்மைதான்.

-கவி-வெண்ணிலவன், 
மணமேல்குடி.

எஸ்.எம்.எஸ்.


உலகமே நினைத்தாலும் உண்மையான அன்பைத் தர முடியாது.
ஆனால் உண்மையான அன்பு நினைத்தால் உலகையே தர முடியும்.

-ஜி.மஞ்சரி,
கிருஷ்ணகிரி.


அப்படீங்களா!


வாட்ஸ் ஆஃப்பில் 2 ஜி.பி,  வரையிலான கோப்புகளை  ஷேர் செய்யும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது. ஆன்ட்ராய்டில் உள்ள நியர் பைல் ஷேர் போன்று இந்த புதிய சேவையை பயனாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.  
2 ஜி.பி. வரையில் எந்தவித சுறுக்கமும் செய்யாமல் கோப்புகளை பரிமாறலாம். வாட்ஸ் ஆஃப் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு இந்தப் புதிய பைல் ஷேர் சேவை 
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் இது அறிமுகமாக உள்ளது.
குறுகிய தொலைவில் இரு பயன்பாட்டாளர்களின் கைப்பேசிகளை வைத்து 2 ஜி.பி. வரையிலான பைல்களை அனுப்பவும், பெறவும் செய்யலாம். மற்ற நபர்களுக்கு நமது தொலைபேசி எண்ணை தெரிவிக்காமல் பைல்களை ஷேர் செய்ய இந்தச் சேவை உதவும். 
இதேபோல், வாட்ஸ் ஆஃப் சேனல்ஸிலும் பல்வேறு புதிய சேவைகள் அறிமுகமாகி உள்ளன.  வாட்ஸ் ஆஃப் சேனல்ஸின் அட்மின்கள் ஒலி வடிவிலான தகவல்களை அனுப்பலாம்.
சில தலைப்புகளில் கருத்துக் கணிப்புகளை நடத்தி பிற பயன்பாட்டாளர்களிடம் கருத்துகளைப் பெறலாம். மேலும், ஒரு சேனலுக்கு பல அட்மின்களை உருவாக்கும் புதிய சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com