பேல்பூரி

'என்னடா.. உங்க தாத்தா தூக்கத்துல கண்ணாடியை கழட்டாமலே தூங்கறாரு...?''தூக்கத்துல வர்ற கனவெல்லாம் மங்கலா தெரியுதாம் அதான்'
பேல்பூரி

கண்டது


(தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர்)

'ஊர்மேல்அழகியான்கிராமம்'

-பெ.பார்வேந்தன்,
சென்னை-125.

(புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள ஊரின் பெயர்)


'மாலையிட்டான்பட்டி'

-வெ.பவானி,
மணமேல்குடி.

(ராமநாதபுரம மாவட்டம், சேதுக்கரை அருகேயுள்ள ஊரின் பெயர்)

'பஞ்சந்தாங்கி'

-கே.முத்தூர்,
தொண்டி.

கேட்டது


(பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)

'இன்வாய்ஸ்ன்னா என்னடா...?'
'உள்ளுக்குள்ளே சொல்லி புலம்புறதுதான்...'

-ஏ.நாகராஜன்,
பம்மல்.


(சென்னை வடபழனி பேருந்து நிலையம் அருகே இரு நண்பர்கள் பேசியது)

'என்னடா.. உங்க தாத்தா தூக்கத்துல கண்ணாடியை கழட்டாமலே தூங்கறாரு...?'
'தூக்கத்துல வர்ற கனவெல்லாம் மங்கலா தெரியுதாம் அதான்'

-என்.கே.பாலசுப்பிரமணியன்,
சென்னை-26.

(தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள டிபார்மென்ட் ஸ்டோர் ஒன்றில்...)


'என்ன முதலாளி.. ரூ.180 பில்லுக்கு ரூ.200 கொடுத்தா.. மீதி ரூ320 கொடுக்கறீங்க? இப்படி வியாபாரம் பண்றீங்களே...'
'அதெல்லாம் எனக்கு தெரியும். பணம் அதிகமாக கொடுத்தாலும் திரும்பக் கொடுக்கிறே ஆளைப் பார்த்துதான் தருவோம்...'

-மு.மதிவாணன், அரூர்.

யோசிக்கிறாங்கப்பா!


'பணம் நிம்மதிக்கு நிகரானதல்ல;  
நிம்மதி பணத்துக்கும் மேலானது.'

-தி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை

சாப்பாட்டு மேஜை மீது இருந்த ஒரு ஆப்பிளை உண்பதற்கு மூன்று பிள்ளைகளும் சண்டை போட்டுக் கொண்டனர். 

இதைக் கவனித்த தாய், 'உங்களில் யார் எனக்கு மதிப்பளிக்கிறீர்களோ, எனக்குக் கீழ்படிகிறீர்களோ..? எனக்கு கட்டுப்படுகிறீர்களோ அவங்களுக்குதான் ஆப்பிள்' என்றார்.

இதைக் கேட்ட மூன்று பிள்ளைகளும் அறையை விட்டு வெளியேறினர்.

'வாங்கடா போய் விளையாடலாம். அப்பாவுக்குதான் இந்த ஆப்பிள் கிடைக்கும்...' என்றான் மூத்தப் பிள்ளை.

-பா.சிதம்பரநாதன், 
கருவேலன்குளம்.

எஸ்எம்எஸ்

மிகவும் அழகாக இருக்க  செலவு செய்ய வேண்டியதில்லை. 
சிரித்தாலே போதும்.

-ஜி.அர்ஜுனன்,
செங்கல்பட்டு.

அப்படீங்களா!


வாட்ஸ் ஆஃப்பில் மேலும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக சொந்த புகைப்படத்தையே ஸ்டிக்கராக மாற்றும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதில் பகிரப்படும் தகவல்களுக்கு எழுத்து பூர்வமாகவும், பட வடிவமாகவும் பதிலளிக்கலாம். இதில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட படங்களுக்கு 'ஸ்டிக்கர்ஸ்'  எனப்படுகிறது. 
பதிலின் கருத்துக்கு ஏற்ப ஏராளமான ஸ்டிக்கர்ஸ் உள்ளன. தற்போது சொந்த புகைப்படங்களை ஸ்டிக்கர்ஸ்களாக உருவாக்கி பயன்படுத்தும் புதிய சேவை வாட்ஸ் ஆஃப்பில் அறிமுகமாகி உள்ளது. 
இதற்கான புகைப்படத்தை தேர்வு செய்து விட்டால் போதும், அந்த புகைப்படம் மட்டும் ஸ்டிக்கர்ஸாக மாறிவிடும். முன்பு இதை செய்வதற்காக தனி செயலியைப் பயன்
படுத்த வேண்டியிருந்தது. இதனால் வெளி செயலிகளில் தகவல்கள் கசியும் நிலை இருந்தது. தற்போது இந்தச் சேவையை வாட்ஸ் ஆஃப் செயலிக்குள்ளே அறிமுகமாகி உள்ளது.
இந்த சேவையைப் பெற முதலில் வாட்ஸ் ஆஃப் செயலியை அப்டேட் செய்துவிட்டு, 'ஸ்டிக்கர் டிரே'-வுக்கு சென்று 'கிரியேட் ஸ்டிக்கர்' என்பதை தேர்வு செய்து கேளரியில் இருந்து புகைப்படத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்தப் புகைப்படத்தில் தேவையான மாற்றங்களைச் செய்துவிட்டு பிறருக்கு பகிரலாம். இதுபோன்று ஒரு முறை உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்படும்.
இதுபோன்ற சேமிக்கப்படும் ஸ்டிக்கர்களை தொடர்ந்து தேர்வு செய்வதன் மூலம் அதை மீண்டும் மாற்றம் செய்யலாம்.  

-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com