ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இணைய வெளியினிலே...

ஆளற்ற  தனிச்சிறு தீவினில்  மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒருவனைக் கண்டாய். 

News image
Updated On :2 ஜூன் 2020, 3:53 pm

முக நூலிலிருந்து....


ஆளற்ற  தனிச்சிறு தீவினில்  மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒருவனைக் கண்டாய். 
என்ன செய்திருக்க  வேண்டும் நீ ? 
ஒன்று கூட்டிச் செல்ல வேண்டும். 
இல்லையேல்... 
கூட  இருக்க வேண்டும். 
இரண்டுமில்லாமல்  சிரித்துக் கடந்து 
செல்வது எப்படி முறையாகும் ?

மகுடேஸ்வரன் கோவிந்தராஜன்

வாழ்க்கையில் இரண்டு காரணங்களால்
சில விஷயங்களை நாம் இழக்க நேரிடுகிறது... 
சிலவற்றை உடனே மறுத்துவிடுவதால்...
சிலவற்றைத் தாமதமாக ஏற்றுக் கொள்வதால். 

பெ. கருணாகரன்

இந்தச் சாலையில் தொலைதலும் வரமே!

ராம் தங்கம்

சில ஆயிரங்களில்  கஓஎ அட்மிஷன்...
பல ஆயிரங்களில்  சிறந்த பள்ளியில் இடம்...
சில லட்சங்களில்  பிரபல கல்லூரியில் சீட்...
இப்படி   பார்த்துப் பார்த்து படிக்க வச்சு பட்டம் வாங்கின என் மகன்...
எனக்கு கொடுத்த பட்டம்"உலகம் தெரியாத பெருசு'

துருவன் பாலா


சுட்டுரையிலிருந்து...


வெளிச்சம் தருவது என்னமோ
விளக்கின்  வேலை தான்... 
ஆனால்... 
அதன் தேவையின் இடத்தைத் 
தீர்மானிக்கும்  முழு உரிமையும் 
நம்மிடம் மட்டுமே  உள்ளது. 

ருத்ரா

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடக்குது.
மூன்றாம் உலகப்போர். கரோனா.

வெ.பெத்துசாமி


உண்மையை உளறிச் சொன்னால்...
பொய்யை பொருத்தமாய்தான் சொல்ல வேண்டி வரும்.

நாயோன்


""சார்... பேங்க்ல இருந்து பேசுறோம். 
psersonal loan
எடுக்குற ஐடியா இருக்கா?''
இயல்பு நிலைக்குத் திரும்பியது தமிழகம்.

கார்க்கிபவா

வலைதளத்திலிருந்து...


அகம்பாவத்தைக் கைவிடுதல் யாருக்கும் அத்தனை எளிதாக இருப்பதில்லை. அந்தஸ்து, பணம், திறமை, புகழ், வலிமை, வல்லமை முதலானவற்றின் மீது நாம் கட்டமைக்கிற அகம்பாவ உணர்வைக் கைவிட முயல்கிறவர்கள் முதலில் எதிர்கொள்ள நேர்வது அளவில்லா அவமானங்களையே. அந்த அவமானங்கள் மீண்டும் அகம்பாவத்தின் சட்டகங்களுக்கு பின்னால் நம்மை நெட்டித் தள்ளுவதாகவே அமையும்.

அவமானங்களின் நஞ்சு சக மனிதர்கள் மீதான நம்பிக்கையிழப்பெனவும் வெறுப்பாகவும் ரத்த நாளங்களில் படியும். ஆனால் இந்த நெருக்கடிகளை ரசித்து அவற்றோடு விளையாடத் தொடங்குகிற ஒருவன் வாழ்வின் வேறொரு பரிமாணத்தைக் காணத் தொடங்குவான். 

புத்தர் அத்தகையவர். அவர் ஆசைகளில் இருந்துமட்டுமல்ல, அகம்பாவத்திலிருந்தும் விடுபடுதலை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். அறிவு உருவாக்கும் அகம்பாவம் பெரிதினும் பெரிது. அது தன்னையும் அழித்து மனிதகுலத்தையும் அழிக்கவல்லது. தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் ஒவ்வொரு லைக்கிலும் கூட நம் அகம்பாவம் வளர்கிறது. வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி வெல்தலில் இல்லை; விளையாடுதலில் இருக்கிறது என்பதை மறந்தும்போகிறோம். நாம் போலிப் புகழின் அகம்பாவத்தில் மூழ்கித் திளைக்கிறோம். சில புத்தகங்களின் - சில திரைப்படங்களின் - சில வாழ்வனுபவங்களின் மூலம் கிடைக்கிற சிறிய அளவிலான ஞானமும் நம்மை பீடங்களில் ஏற்றிப் பார்க்கிறது. புத்தரோ தன்னுடைய அளவில்லா ஞானத்தோடுதான் ஒவ்வொரு நொடியும் போரிட்டார். அதனாலேயே வாழ்நாளெல்லாம் அவமானங்களை எதிர்கொண்டார். ஆனால் சோர்ந்துவிடாமல் அதை விளையாட்டு போல மாற்றிக் கொண்டார்.

http://www.athishaonline.com/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.