வேலை கிடைப்பதும் அதைத் தக்க வைப்பதும்..!

கணினி துறையில் வேலை வாய்ப்பு என்பது இப்போது அஞ்சுகிற விஷயமாக மாறிப் போய்விட்டது. முன்பெல்லாம் சினிமாகாரனுக்கு வேலை பெண் கொடுக்க மாட்டேன் என்றது மாதிரி இப்போது கணினி துறை மாப்பிள்ளைகளின் நிலைமை. அப்படி
வேலை கிடைப்பதும் அதைத் தக்க வைப்பதும்..!

கணினி துறையில் வேலை வாய்ப்பு என்பது இப்போது அஞ்சுகிற விஷயமாக மாறிப் போய்விட்டது. முன்பெல்லாம் சினிமாகாரனுக்கு வேலை பெண் கொடுக்க மாட்டேன் என்றது மாதிரி இப்போது கணினி துறை மாப்பிள்ளைகளின் நிலைமை. அப்படி மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை என்கிறார் உமா கோபால கிருஷ்ணன். சென்னையில் ஸ்பிரிங் போர்டு என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்திவரும் அவரை சந்தித்தோம்.

உங்களைப் பற்றி?

  பி.எஸ்ஸி. ஹானர்ஸ் படித்துவிட்டு, என்.ஐ.ஐ.டி.யில் கணினித் துறை தொடர்பான படிப்பைப் படித்தேன். நீண்ட காலப் படிப்பாக அது இருந்தது. எனவே அத் துறை தொடர்பாக நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. பிறகு அங்கேயே பணி புரியும் வாய்ப்பும் கிடைத்தது.

  அங்கு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வேலை பெற்றுத்தரக்கூட பொறுப்புள்ள பதவி எனக்கு வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள எங்கள் கிளைகளில் பயிலும் பல்வேறு மாணவர்களின் திறமைகளை இனம் காணும் பேறு எனக்குக் கிடைத்தது.

  உங்களது அனுபவங்கள் வாயிலாக இளம் தலைமுறையினரைப் பற்றிய தங்கள் கணிப்பு என்ன?

  பல மாணவ மாணவிகளை நேர்காணல் செய்ததன் மூலம் அவர்களிடம் உள்ள குறைகளை இனம் காண முடிந்தது. கம்யூனிகேஷன் ஸ்கில் போதவில்லை. எப்படி பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் என்பதே தெரியாமல் பலரும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. வேலைக்கு எப்படி விண்ணப்பம் எழுதுவது, அனுப்புவது என்ற அடிப்படையும் பலருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

  நகரத்து மாணவர்களிடமுமா இந்தக் குறையைக் கண்டீர்கள்?

  ஒரு சிலரைத் தவிர அநேகம் பேரிடம் இக் குறைகளைப் பார்க்க முடிந்தது. இந்தக் குறைக்கு யார் காரணம்? என்று அலசுவது என்னைப் பொறுத்தவரை வீண் வேலை. இக் குறைகளைக் களைவது எப்படி? என்பதே மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.

  ஸ்பிரிங் போர்டு தொடங்குவதற்கு இதுதான் காரணமா?

  ஒரு மாணவனோ அல்லது மாணவியோ தனது பட்டப் படிப்பை படிக்கும் காலத்திலேயே வேலைக்குப் போவதற்குத் தன்னை ஆயப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்ற அவசியத்தைக் நான் உணர்ந்திருந்தேன். அவர்களது வாழ்க்கையில் "வேலை வாய்ப்பு' என்பது ஒரு பெரிய வரம். அந்த வரத்தை அவர்களுக்கு வழங்க நாம் ஏன் ஒரு பாலமாக இருக்கக் கூடாது என்ற வினா என்னுள் எழுந்தது. பல திறமைமிக்க நபர்களின் ஆலோசனைகள், வழிகாட்டலோடு இந்த அமைப்பு உருவானது.

  கல்லூரி மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பு முடித்த கையோடு வேலை கிடைக்க அவர்களை எல்லாவிதத்திலும் தயார்படுத்துகிறோம். கிடைத்த வேலையைத் தக்க வைப்பதன் அவசியத்தையும் அவர்கள் உணர வேண்டும் என்பதும் இவ்வமைப்பின் முக்கிய நோக்கம்.

  இப்போது கணினித் துறையில் உள்ளவர்கள் தங்கள் இன்பாக்ஸ் மெயிலைத் திறக்கவே அஞ்சுகின்றனர். காரணம் எங்கே "பணிநீக்கம்' தொடர்பான மெயில் வந்திருக்குமோ எனும் அச்ச உணர்வு அவர்களை ஆட்டிப் படைப்பதே!

  எனவே, தங்களை எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொள்வதன் அவசியத்தை உணர வைப்பது அவசியமாகிறது.

  உங்கள் கருத்துப்படி பார்த்தால் இது தொடர்பான பாடம் கல்லூரியில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் அல்லவா?

  கட்டாயப் பாடமாக்கினால் இளம் தலைமுறையினர் நிச்சயம் நல்ல முறையில் பயன் அடையலாம். கல்வியாளர்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒரு சில கல்லூரிகளில் இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டாலும் சிறந்த பயிற்சியாளர்கள் இல்லாதது மிகப் பெரிய குறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com