நாசாவின் செல்லப் பொண்ணு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. ஏரோஸ்பேஸ் படித்து வரும் ஜெயஸ்ரீ ஸ்ரீதர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செல்லப் பெண். பல ஆய்வு கட் டு ரை கள் சமர்ப் பித்து நாசா வின் பாராட் டைப் பெற் றி ருப்பதுட
நாசாவின் செல்லப் பொண்ணு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. ஏரோஸ்பேஸ் படித்து வரும் ஜெயஸ்ரீ ஸ்ரீதர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செல்லப் பெண். பல ஆய்வு கட் டு ரை கள் சமர்ப் பித்து நாசா வின் பாராட் டைப் பெற் றி ருப்பதுடன், "வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள்'குறித்து மாணவ மாணவரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்

இந்தியக் குழுவின் தலைவியாகவும் நாசாவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்தித்தோம்:

விண்வெளி ஆய்வில் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் பள்ளியில் "விண்ணில் உள்ள கிரகங்களின் அமைப்பும், அதன் செயல்பாடுகளும்'எனும் தலைப்பில் ஒரு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. எட்டாம் வகுப்பில் இருந்து ப்ளஸ் டு மாணவர்கள் வரை அதில் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. என்னுடைய விருப்பத்தைப் பள்ளிக்குத் தெரிவித்து விசேஷ அனுமதி பெற்று நானும் அதில் கலந்துகொண்டேன். இந்தியாவில் முதல்பெண் வான் நிலையியல் நிபுணரான நிருபமா ராகவன் எங்களுக்கெல்லாம் புரியும்படி தெளிவாகப் பயிற்சி வகுப்பை நடத்தினார். அவர் வைத்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் வந்தேன். அவரது மனத்திலும் இடம் பிடித்தேன். அப்போதே அவர் எனது ஆர்வத்தைப் புரிந்து எனக்குப் பல கடின விஷயங்களை எளிமையாகப் புரிய வைத்து மேலும் என்னை ஊக்கப்படுத்தினார். நானும் அப்போது முதல் வான்வெளி பற்றிப் பல புத்தகங்களைப் படித்து வந்தேன். இதுதான் நாசா வரை என்னை அழைத்துச் சென்றது.

நாசாவில் ஆய்வுகள் சமர்ப்பித்தது எப்படி?

நிலவில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகளைப் பற்றிய கருத்தாய்வு ஒன்றை நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஆண்டு நடத்தியது. இதில் உலகெங்கும் உள்ள மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். நானும் இந்த கருத்தாய்வில் கலந்துகொண்டேன். இதில் நிலவில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் பற்றி மாணவர்களிடையே ஆய்வு கட்டுரை போட்டியும் நடைபெற்றது. இதில் எனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துவிட்டு முடிவிற்காகக் காத்திருந்தபோது இன்ப அதிர்ச்சி. என் கட்டுரை முதலிடம் பிடித்தது. நான் எழுதிய விதத்தை வைத்து இதனை ஓர் ஆய்வு மாணவர்தான் எழுதியிருக்கக் கூடும் என்று நினைத்து அவர்கள் என்னை தேர்வு செய்து விட்டனர். ப்ளஸ் டூ மாணவியான நான் போய் நின்றதும் அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். பல கேள்விகள் கேட்டு ஊர்ஜிதப்படுத்திய பின்னரே என்னைக் கட்டுரையை வாசிக்குமாறு பணித்தனர்.

தற்போது வேறு என்ன ஆய்வில் ஈடுபட்டு வருகிறீர்கள்?

பூமியில் இருப்பதைப்போல் செடி, கொடிகள், மரங்கள் நிலவில் வளர முடியுமா? என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். கள்ளிச் செடி ஒன்றை நிலவின் வடிவமைப்பு கொண்ட சூழலில் ஒரு கண்ணாடிக் குடுவையில் வளர்த்து அதனை நாசாவில் சமர்ப்பித்தேன். இதனைப் பாராட்டிய நாசா விஞ்ஞானிகள் இதனை இன்னும் விரிவாகச் செய்யும்படி என்னைப் பணித்திருக்கின்றனர்.

உங்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாக எதைக் கருதுகிறீர்கள்?

கல்பனா சாவ்லா விண்வெளி பயணம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் ஏஞ்சல் அபூத் மேட்ரிட் என்பவர். அவர் என்னுடைய செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு, "கல்பனா சாவ்லாவைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது'என்று பாராட்டியதுடன், சாவ்லா அணிந்திருந்த ஒரு பாட்ஜையும் என்னிடம் கொடுத்தார். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அப்துல் கலாமும் என்னைப் பாராட்டியுள்ளார். இதையும் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

நாசாவிற்கு வேறு என்ன வகையில் பங்களித்திருக்கிறீர்கள்?

நானும் என் பாட்டியும் கண்ணன் வாழ்ந்த ஊரான துவாரகை சென்றிருந்தோம். அப்போது அங்கே பாறைகள் சிலவற்றைக் கண்டேன். அந்தப் பாறைகளைப் பார்த்ததும் ஒரு வித ஆய்வு மனநிலை எனக்குத் தோன்றியது. அது வேறொன்றுமில்லை. புராணப்படி கண்ணன் வாழ்ந்த காலத்தை அந்தக் கல் சொல்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களிடம் காட்டி அறிய வேண்டும் என்று தோன்றியது. இதனால் அந்தப் பாறைகளின் சிறு பகுதிகளை வீட்டிற்கு எடுத்து வந்தேன். இதற்கிடையில் நாசாவில் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது. பழங்காலப் பாறைகளின் படிமங்கள் ஆய்விற்கு தேவை என்று. உடனே அந்தப் பாறைகளை அனுப்பி வைத்தேன். ஒவ்வொன்றும் 40 கிலோ எடை கொண்டவை. உலகம் முழுவதும் வந்த கற்களில் நான் அனுப்பிய கல்தான் தனித்துவமானதாக இருந்திருக்கிறது. இதற்கும் நாசாவிடமிருந்து எனக்குப் பரிசும் சான்றும் கிடைத்திருக்கிறது.

நாசா சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்தியக்

குழுவிற்கு நீங்கள் தலைவியாக நியமிக்கப்

பட்டுள்ளது பற்றி?

வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர் மத்திய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நான் இந்தியக் குழுவின் தலைவியாக உள்ளேன். மாணவர்களிடையே விழப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்கள் வைத்திருக்கிறேன். விரைவில் அவற்றை நடைமுறைபடுத்துவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com