சேர்ந்திசையில் சாதனை!

1991-இல் வங்கி ஊழியர்களால் தொடங்கப்பட்டதுதான் இந்த "பீட் காயர்' என்கிற சேர்ந்திசை குழு. இதன் தலைமை பொறுப்பை வகித்து வருபவர் ராஜராஜேஸ்வரி. இவர் எம்.பி.ஸ்ரீனிவாசனின் சிஷ்யை. இவர் அமைப்பைப் பற்றிச் சொல்கிறார்:
சேர்ந்திசையில் சாதனை!

1991-இல் வங்கி ஊழியர்களால் தொடங்கப்பட்டதுதான் இந்த "பீட் காயர்' (beat choir) என்கிற சேர்ந்திசை குழு. இதன் தலைமை பொறுப்பை  வகித்து வருபவர் ராஜராஜேஸ்வரி. இவர் எம்.பி.ஸ்ரீனிவாசனின் சிஷ்யை. இவர் அமைப்பைப் பற்றிச் சொல்கிறார்:

""இத்தனை ஆண்டுகளாக பல்வேறு ஊர்களுக்குச் சென்று சேர்ந்திசையைக் கற்று கொடுத்து வருகிறோம். சமீபத்தில் ஒரு நண்பரின் மூலம் ஐரோப்பாவில் (interkulture management GMBH )என்ற அமைப்பு மாதம்தோறும் வேவ்வேறு நாடுகளுக்குச் சென்று சேர்ந்திசைக்கான மாபெரும் போட்டிகள் நடத்தி வருவதை அறிந்தோம்.

இதற்கு முன்பு 2011-இல் மும்பை சேர்ந்த சேர்ந்திசை குழு அதில் கலந்து கொண்டதையும், அதன்பிறகு இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிந்தோம். இதனால் அதில் எப்படியாவது பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதற்காக முறையாக இணையத்தில் பதிவு செய்தோம்.   அதன்பிறகு இணையத்தின் மூலமே ஒவ்வொரு படியாக ஏழுகட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் எல்லாம் தேர்ந்து எடுக்கப்பட்டு, இறுதி போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 2ஆம் தேதிவரை இந்த போட்டி நடத்தப்பட்டது. அதில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, இலங்கை, ஹாங்காங், பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற 15 நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர்.

அதில் இந்தியா சார்பில் நாங்கள் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டோம். ஒன்று ஈஐச்ச்ண்ஸ்ரீன்ப்ற்ஹ் கங்ஸ்ங்ப் ஐஐ , மற்றொன்று ஊர்ப்ந்ர்ழ்ங்.  இதற்கு ஜுரியாக வேவ்வேறு 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றிருந்தார்கள். இன்னொரு மகிழ்ச்சி என்னவென்றால் துவக்கவிழாவில் பாடுவதற்காக  நான்கு நாடுகளைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அதில் எங்களையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.

"டிபிகல்டி லெவல்'-2வில் நாங்கள் கலந்து கொண்டதில் கிளாசிக்கல், ஹிந்துஸ்தானியில்  5 திருக்குறளை வைத்து நானே கம்போஸ் செய்திருந்தேன். அதைத்தான் பாடினோம். அதற்கு  ஒரு வெள்ளி பதக்கமும், நாட்டுப்புற மெட்டில் பாடிய பாடல்களுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் பரிசாக கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எங்கள் குழுவிற்காக மொத்தம் 22 பேர் சென்றிருந்தோம். நமது இந்தியப் பாடல்களையும், தமிழ் காலசார பாடல்களையும் அங்கு வந்திருந்த அத்தனை நாட்டு மக்களும் விரும்பி ரசித்தது பெருமைக்குரியதாக இருந்தது. நமது குழுவில் இருந்த பெண்கள் எல்லாரும் சேலைக் கட்டி சென்றிருந்ததை வித்தியாசமாக பார்த்த அந்தநாட்டு மக்கள். சேலைக்கு நல்ல மதிப்பளித்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அந்த நாட்டின் முக்கிய நகரமான மார்க்கெட் பகுதியில்  திறந்தவெளியில் பாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே தமிழ், ஹிந்தி, மராட்டி, பெங்காலி ஆகிய நான்கு மொழிப் பாடல்களைப் பாடினோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவை எல்லாம் மறக்க முடியாத தருணங்கள். முதல் போட்டியிலேயே எங்களுக்கு வெற்றி கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com