அப்பய்ய தீட்சிதர் ஜெயந்தி விழா

சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற பக்திக்கு அடையாளமாக மகான் அப்பய்ய தீட்சிதர் வரலாறு அமைகிறது.
அப்பய்ய தீட்சிதர் ஜெயந்தி விழா

சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற பக்திக்கு அடையாளமாக மகான் அப்பய்ய தீட்சிதர் வரலாறு அமைகிறது. வேலூர் மாவட்டம், ஆரணி அருகே அடையபலம் என்ற கிராமத்தில் அவதரித்த அவர் "சிவார்க்கமணி தீபிகை' போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சர்வ சமய ஈடுபாட்டுடன் விளங்கியவர். இவர் இயற்றிய நூல்களில் "ஆத்மார்ப்பணஸ்துதி' பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சிதம்பரம் திருக்கோயிலில் எழுந்தருளும் நடராஜப் பெருமானுடன் ஒன்று கலந்த பெருமை இவருக்கு உண்டு.

பழனி அருகே காரத்தொழுவு என்ற ஊரில் அப்பய்ய தீட்சிதரால் கட்டப்பட்ட சிவகாம சுந்தரி சமேத நடராஜர் கோயிலில் திருப்பணி முடிந்து சமீபத்தில் குடமுழுக்கு நடந்தது. அப்பய்ய தீட்சிதரின் திருவுருவச் சிலையும் அந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்நிலையில் மகான் அப்பய்ய தீட்சிதரின் ஜெயந்திவிழா வருகிற செப்: 20ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், காரத்தொழுவு கோயிலில் நடைபெற உள்ளது.

அமைவிடம்: பழனியிலிருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது காரத்தொழுவு.

தகவலுக்கு: 97910 19450.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com