கல்வியில் சிறந்து விளங்க...

சிவாலயங்களில் கோஷ்ட தெய்வங்களில் ஒன்றாய், சிவஸ்வரூபமாய் விளங்குபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
கல்வியில் சிறந்து விளங்க...

சிவாலயங்களில் கோஷ்ட தெய்வங்களில் ஒன்றாய், சிவஸ்வரூபமாய் விளங்குபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இவர் தெற்கு நோக்கி வீற்றிருக்கும் காரணத்தால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. நவகிரகங்களில் ஒன்றான குரு கிரகமான குரு பகவானுக்கே குருவானவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இவர் வடிவங்களில் ஒன்றான ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, வித்தை, குரு கடாட்சம், சுபயோகம், ரோகமின்றி நல்ல உடல் ஆரோக்கியம், கிரக தோஷமின்றி மங்களகரமான வாழ்வு மற்றும் பல நல்ல பலன்களைப் பெறலாம் என்பது ஆன்றோர்கள் காட்டிய வழி.

உலக நன்மைக்காகவும், அமைதிக்காவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி ஹோமம் ஜனவரி 5ஆம் தேதி தாம்பரம் - வேளச்சேரி மெயின் சாலையில் இராஜகீழ்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி மடத்தில் (வி.எக். மஹால்) நடைபெறுகிறது.

தகவலுக்கு: 94442 00910

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com