அறிவுக்கண் திறக்கும் ஸ்ரீ காயத்ரி மந்திரம்!

காயத்ரி மந்திரம் அறிவுக்கண் திறக்கும் சக்தி கொண்டது என்று வேத நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீ காயத்ரி தேவி, காலையில் குழந்தையாகவும் மதியம் நடுத்தர வயதினளாகவும் மாலையில் முதிய தோற்றத்துடனும் காட்சி தருவாள் என
அறிவுக்கண் திறக்கும் ஸ்ரீ காயத்ரி மந்திரம்!

"ஓம் பூர் புவ  ஸூவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்!'

காயத்ரி மந்திரம் அறிவுக்கண் திறக்கும் சக்தி கொண்டது என்று வேத நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீ காயத்ரி தேவி, காலையில் குழந்தையாகவும் மதியம் நடுத்தர வயதினளாகவும் மாலையில் முதிய தோற்றத்துடனும் காட்சி தருவாள் என்று சாஸ்திரம் கூறுகிறது. மேலும் காலை பிரம்ம சொரூபிணியாகவும் மாலையில் விஷ்ணு சொரூபிணியாகவும் நடுப்பகல் ருத்ர சொரூபிணியாகவும் அருள்புரிகிறாள். இத் தேவியின் வாகனம் அன்னம்!

விஸ்வாமித்திரரின் தவத்திற்கு மகிழ்ந்த காயத்ரி தேவி, இந்த மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள் என்று புராணம் சொல்கிறது. இந்த மந்திரத்தை ஜபித்ததின் பலனாகதான் இலங்கை வேந்தன் ராவணனை ஸ்ரீ ராமபிரான் வதம் செய்தான் என்றும் புராணங்கள் விளக்குகின்றன. தகுந்த குருவிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று முறைப்படி தினமும் ஜபித்து வந்தால் முகத்தில் ஒரு தேஜஸ் ஏற்படும் என்று வேதவிற்பன்னர்கள் கூறுவர்.

ஆவணி மாத அவிட்டம் நட்சத்திரத்தன்று பூணூல் அணியும் விழாவை ஒரு சாரார் கொண்டாடுவர். அன்று குருமுகமாக பூஜை செய்தபின், தாங்கள் அணிந்திருக்கும் பழைய பூணூலை அகற்றியபின், அதற்குரிய மந்திரங்கள் சடங்குகள் நடந்தபின், அங்கு தலைமை தாங்கி நடத்தும் குருவின் ஆலோசனைப்படி மந்திரம் ஜெபித்து புது பூணூல் அணிந்து கொள்வர். அப்போது, " ஸ்ரீகாயத்ரி மந்திரம்' ஜெபிக்கப்படும். இதனைத் தொடர்ந்து தினமும் காலையும் மாலையும் இந்த வழிபாட்டினை மந்திரம் ஜெபித்து மேற்கொள்வது வழக்கம்.

பொதுவாக, கற்றுக் கொண்ட "தேவமந்திரங்களுக்கு அப்போதைக்கப்போது பழைமை தோஷம் ஏற்படுகிறதாம். அந்த தோஷத்தை அகற்றி, கற்றவற்றை தகுந்த குருவின் மூலமான மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவே, "ஆவணி அவிட்டம்' அன்று புதுப்பூணூல் அணிதல் சடங்குகள் செய்தல் என்பது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது. எனவே, ஆவணி அவிட்டம் போற்றப்படுகிறது.

பூணூல் அணியும் பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் இல்லத்தில் ஆண் குழந்தைகளுக்கு மூன்று முதல் ஏழு வயதிற்குள் பூணூல் அணியும் விழாவினை மேற்கொள்வர். இதனை, "பூணூல் கல்யாணம்' என்று போற்றுவர்.  

இறைவனுக்கும் இறைவிக்கும் மூன்றாவது கண் உண்டு! அதேபோன்று இயற்கையாக இரு கண்களுடன் இருக்கும் மனிதர்களுக்கும் மூன்றாவது கண் உண்டு. அது அகக்கண்! ஆகும். அந்த அறிவுக் கண்ணைத் திறந்து வைப்பதற்கான விழாவே,  "பூணூல் கல்யாணம்' எனப்படும்  "உபநயனம்' ஆகும். "உபநயனம்' என்றால் உப- கூடுதல், நயனம்- கண். இரு கண்களுடன் கூடுதலான அறிவுக்கண்ணைத் திறக்கும் நிகழ்ச்சிதான் உபநயனம் விழாவாகப் போற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com