குழந்தைப்பேறு நல்கும் கோபாலன்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் கொப்பா தாலுகாவில் துங்கா நதிக்கரையில் உள்ள அழகிய மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷேத்ரசகடபுரம்!
குழந்தைப்பேறு நல்கும் கோபாலன்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் கொப்பா தாலுகாவில் துங்கா நதிக்கரையில் உள்ள அழகிய மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷேத்ரசகடபுரம்! ஸ்ரீசகட மஹரிஷி தவம் செய்த புண்ணிய பூமி. பத்ரியிலிருந்து இங்கு விஜயம் செய்த ஸ்ரீ சத்யதீர்த்த மஹா சுவாமிகள் ஒரு சமயம் துங்கா நதிக்கரையில் மூழ்கி எழுந்தார்கள். அப்போது அவர் கரங்களில் ஒரு கோபால விக்ரஹம் கிடைத்தது.  அதனை அங்கேயே ஸ்ரீசந்தானவேணு கோபாலராக பிரதிஷ்டை செய்து ஸ்ரீ வித்யா பீடத்தையும் நிறுவியருளினார்.  

இங்கு, தமிழக ஆலயங்களைப் போன்ற அமைப்பில் அழகான ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள ஆலயத்தில் பிரதான தெய்வங்களாக ஸ்ரீசந்தான வேணு கோபாலகிருஷ்ணன், ஸ்ரீ வித்யாம்பிகா ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ லஷ்மி நரஸிம்மர் சந்நிதி கொண்டுள்ளனர். நடுநாயமாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் குருவாயூரில் இருப்பது போன்ற அற்புதக் கோலம்! குழந்தைப் பேற்றினை நல்கும் கோபாலனாக அருள் பொழிகின்றார். கருங்கல் திருப்பணியில் கட்டப்பட்டுள்ள இவ்வாலயத்தில் தீர்த்த மண்டபம், கருட மண்டபம், கொடிமரம், கீர்த்தி மண்டபம், முக்தி மண்டபம், கல் உருண்டை தாங்கிய தூண்கள் என பல அம்சங்கள் எழிலுற உள்ளன.

ஆலயத்தின் பின்புறம் பிரம்மாண்டமான ஸ்ரீமடம், யாக சாலை மண்டபம், குரு முதல்வர்கள் அருள்புரியும் அதிஷ்டான ஆலயங்கள் அமைந்துள்ளன. தற்போது திருப்பணி வேலைகளுக்காக ஆலயத்தில் பாலாலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோபாலன் குடி கொண்டுள்ள இவ்வாலயத் திருப்பணியில் பங்கேற்று நலம் பெறலாம்.

தொடர்புக்கு: 98401 60315 /  98400 86350.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com