திருமாலடியாருக்கு ஒரு திருக்கோயில்!

திருமாலைப் பாடிப் பரவிய ஆழ்வார்களில் திருமாலின் திருமார்பில் விளங்கும் கௌஸ்துபா அம்சமாய் கலி பிறந்த 28 ஆம் ஆண்டு, புனர்பூச நட்சத்திரத்தில் சேர நாட்டில் திருடவிருதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்தார் கு
திருமாலடியாருக்கு ஒரு திருக்கோயில்!

திருமாலைப் பாடிப் பரவிய ஆழ்வார்களில் திருமாலின் திருமார்பில் விளங்கும் கௌஸ்துபா அம்சமாய் கலி பிறந்த 28 ஆம் ஆண்டு, புனர்பூச நட்சத்திரத்தில் சேர நாட்டில் திருடவிருதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்தார் குலசேகராழ்வார்.
அரச வம்சத்தில் தோன்றி நன்கு அரசு நடத்திய குலசேகரன் சிறந்த திருமாலடியாராக விளங்கி ராம கிருஷ்ண அவதாரங்களிலும் மற்றும் திவ்ய தேச அர்ச்சா மூர்த்திகளிடத்தும் அதிகமான ஈடுபாடு கொண்டு தன் மகளை திருவரங்கனுக்கே மணம் செய்து வைத்தான். 
அரங்கனிடமும் ஸ்ரீ ராமனிடமும் அதிக ஈடுபாடு கொண்டும் அரசியலில் நாட்டமில்லாமல் திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டு அத்தல எம்பெருமான்களை புகழ்ந்து பாடி தன் காலத்தை கழித்தார்.
ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், அயோத்தி, கோகுலம் மற்றும் திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்) ஆகிய திவ்யதேசங்களைப் பாடி மகிழ்ந்த இவர் பாடலில் ராமாயணம் குறிப்பாக சொல்லப்பட்டிருக்கும் என்பதே இவர் சிறந்த ராம பக்தர் என்பதை எடுத்துக் காட்டும்.
கேரள மாநிலத்தில் திருச்சூர் அருகே திருவஞ்சைக் களம் என்ற ஊரில் அவதரித்த இவருக்கு அத்தலத்தில் தனிக்கோயிலோ அல்லது சந்நிதி மற்றும் திருமேனி இது நாள் வரை இல்லாமல் இருந்தது. சுமார் பத்தாண்டுகளில் சென்னை நம்மாழ்வார் பவுண்டேஷன் என்ற ஸ்தாபனத்தின் முயற்சியால் கேரளாவில் திருச்சூர் அருகே குலசேகராழ்வாருக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டு அதில் பிரதான பெருமானாக திருவேங்கிடமுடையான் சந்நிதியும் குலசேகராழ்வாருக்குத் தனிச் சந்நிதியும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 
இச்சந்நிதியில் நாதமுனிகள், ஆளவந்தார், பகவத் ராமானுஜர், வேதாந்தாசாரியார் மற்றும் மணவாள மாமுனிகளுக்கும் தனி தனியாக சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
குலசேகராழ்வார் கேரள தேசத்தைச் சார்ந்தவர் என்பதை பெரிய ஜீயர் மணவாள மாமுனிகள் தன் உபதேச ரத்னமாலையில் அழகாகக் குறிப்
பிட்டுள்ளார். 
""மாசிப் புனர்பூசம் காண்மினின்று மண்ணுலகீர்
தேசு இத்திவசத்துக்கே தென்னில் } பேசுகின்றேன்
கொல்லி நகர்கோள் குலசேகரன் பிறப்பால் 
நல்லவர்கள் கொண்டாடும் நாள்''
("திவசம்' என்ற மலையாளச் சொல்லுக்கு "நாள்' என்று தமிழல் சொல்) ஆழ்வாரின் அவதார நன்னாள், இவ்வருடத்தில் 26.2.2018 } அன்று அமைகிறது. இக்கோயில் கேரளாவில் அமைந்திருந்தாலும் இக்கோயிலில் தமிழக ஆகம விதிகளின்படி பூஜைகளை முறையாக கடைப்பிடித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com