பொருநை போற்றுதும்! 18 - டாக்டர் சுதா சேஷய்யன்

ஹயக்ரீவரும் சேர்ந்துகொள்ள, அனைவரும் மலைய மலைச் சிகரங்களுக்கிடையே இருந்த அழகானதொரு பகுதியை அடைந்தனர்.
பொருநை போற்றுதும்! 18 - டாக்டர் சுதா சேஷய்யன்

ஹயக்ரீவரும் சேர்ந்துகொள்ள, அனைவரும் மலைய மலைச் சிகரங்களுக்கிடையே இருந்த அழகானதொரு பகுதியை அடைந்தனர். "குப்தசிருங்கி' (சிகரங்களுக்கிடையே மறைந்த இடம்) என்று இப்பகுதிக்குப் பெயரிட்ட விச்வகர்மா, அகத்தியருக்காக ஆங்கொரு ஆச்ரமத்தை நிர்மாணம் செய்தார். அருகில் ஏதோ அரவம் கேட்க, அனைவரும் அங்கு நகர்ந்தனர். பார்த்தால்... அம்பாள் பராசக்தியின் ஸ்ரீபுரமே அங்கு ஆவிர்பவித்திருந்தது. வாராஹி மந்த்ரிணி மாதாக்கள், வசின்யாதி தேவதைகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சாக்ஷôத் மும்மூர்த்திகள் என்று சர்வ பிரபஞ்சமும் வடிவெடுத்து நிற்க... சமுத்திரராஜனும் அங்கு வந்துவிட்டதைக் கண்ட பார்வதி தேவி, உடனேயே தாமிராவின் திருமணத்தை நடத்தத் தீர்மானித்தாள். கடலரசனுக்கு மனைவியானால், நீர் வடிவில்தானே பாயவேண்டும்!
திருமணச் சடங்குகளைப் பார்வதியும் பரமேச்வரனும் செய்து வைக்க, நதி வடிவமெடுத்தாள் தாமிரா! திவ்விய விமானமொன்றில் அகத்தியரை முன்செல்லும்படி அம்பாள் பணிக்க, அவரும் அப்படியே செய்தார். பகீரதன் தேருக்குப் பின் சென்ற கங்கையைப் போல், அகத்திய ரதத்தை அழகாகத் தொடர்ந்தாள் தாமிரா. கடலரசனிடம் கொண்டு போய் இவளைச் சேர்ப்பிக்க, வழியில் சில இடங்களில் வேகமாகவும் சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் வளைந்தும் சில இடங்களில் அகன்றும் தாமிரா நடந்தாள்; விரைந்தாள்; பாய்ந்தாள்; பெருகினாள்; பலவிதமாக ஆட்கொண்டாள். நதிப் பெண்ணாகத் தாமிரா தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாள், பெüர்ணமித் திதியும் விசாகத் திருநட்சத்திரமும் கூடிய வைகாசி நன்னாள்.
இவ்வாறாக, சிவன் பார்வதியின் மானசப் புத்திரியாகப் பிறந்து, அகத்திய லோபாமுத்திரை மகளாக வளர்ந்து, மலையராஜன் செல்வக் குமாரத்தியாகக் குளிர்ந்து, கடலரசனின் பெருமாட்டியாகப் பேரிடம் கொண்ட தாமிரவருணித் தாயின் கதையை விவரிக்கிறார் வேதவியாசர். இவளின் பெருமைகளைப் போற்றி, இவளின் திருநாமங்களை உரைத்துத் துதிக்கிறார்.
ப்ரஹ்மாண்டோதர ஸம்ஸ்தானி தீர்த்தானி விவிதான்யபி
தாம்ரா தீர்த்த த்ரயைகஸ்ய கலாம் நார்ஹந்தி ஷோடஸீம்
தர்மத்ரவா பகவதீ தாம்ரா மலயநந்தினீ
பராபராம்ருதஸ்யந்தா தேஜிஷ்டா கர்மநாசினீ
முக்திமுத்ரா ருத்ரகலா கலிகல்மஷநாசினீ
நாராயணீ ப்ரஹ்மநாதா மாலேயீ மங்கலாலயா
மருத்வத் யம்பரவதீ மணிமாதா மஹோதயா
தாபக்னீ நிஷ்கலாநந்தா த்ரயீ த்ரிபதகாத்மிகா
"தாமிரவருணியின் மூன்றில் ஒரு பாகமெடுத்து, அதைப் பதினாறாக வகுத்தால், அந்தவொரு பகுதிக்குக்கூட, பிரம்மாண்டத்தின் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் ஈடாகா. தாமிரவருணித் தாய் இவளே தர்மத்ரவா(அறத்தின் நாயகி), பகவதி (பெருந்தெய்வம் ஆனவள்) , தாமிரா(செந்நிறத்தாள்), மலையநந்தினி(மலையராஜனுக்கு மகிழ்ச்ச்சி தருபவள்), பராபரா, அம்ருதஸ்யந்தா (அமுதமாகப் பாய்பவள்), தேஜிஷ்டா (பிரகாசமானவள்), கர்மநாசினி(வினைகளை அழிப்பவள்), முக்திமுத்ரா (முக்தியின் விளக்கமானவள்), ருத்ரகலா (ருத்ரனுடைய அம்சமானவள்), கலிகல்மஷநாசினி(கலியின் தீமைகளைப் போக்குபவள்), நாராயணி (தேவி வடிவானவள்), பிரம்மநாதா (பிரம்ம சொரூபிணி அல்லது தெய்வத்தன்மையள்), மாலேயி (மாலையிலிருந்து தோன்றியவள்), மங்களாலயா (மங்களங்கள் தருபவள்), மருத்வதி (பிரம்மபுத்திரி அல்லது காற்றின் தாய்), அம்பரவதி (ஆகாச தேவி), மணிமாதா (ரத்தினங்களைத் தருபவள்), தாபக்னீ (உற்சாக ஆற்றல் மிக்கவள்), நிஷ்கலா(களங்கம் அற்றவள்), ஆனந்தா (களிப்பு வடிவத்தாள்), த்ரயீ (ஞானி, வேத விளக்கமானவள்), த்ரிபதகாத்மிகா (சிவனொளிர் ஜோதியானவள்) இவளின் திருநாமங்களைக் கூறி, அவை குறிப்பிடும் தன்மைகளை நெஞ்சில் நிறுத்தி, மனதார வணங்கி, வாயாரத் துதித்தால், அவ்வாறு துதிப்பவர்களின் கரதலத்திலேயே மோக்ஷபாக்கியம் வந்து நிற்குமாம்.
மன்பதைக்கெல்லாம் மகிழ்ச்சி: ஒருமுறை, குப்தசிருங்கி ஆச்ரமத்தில் வந்து, மூர்த்திகரித்துத் (வடிவமெடுத்துத்) தங்கினாள் தாமிரவருணி நல்லாள். அப்போது அவளுடைய முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றின. காரணம் புரியாமல் கவலைக்குள்ளானாள். அகத்தியர் காரணத்தைக் கண்டுகொண்டார். மாபாதகங்கள் செய்வோரும் வந்து நீராடுவதால், அவர்களின் பாவங்கள் சேர்ந்து, ஆற்றுப் பெண்ணின் அழகைக் குலைத்தன. அருகிலிருக்கும் இந்திரகிலப் பகுதியில் சிவபூஜை செய்து, மார்கழி விரதமிருந்து வழிபட்டால், பாவங்கள் தொலையும் என்று அவர்கூற, அதன்படியே இவளும் தவம் செய்தாள். சிவபெருமான் தோன்றி அனுக்ரகித்தார். தாமிராவிடம் சேரும் பாவங்கள் மட்டுமல்ல, அவளை நாடும் அனைவரின் அத்தனை பாவங்களும் தொலையும் என்று அருள்பாலித்தார்.
த்வன் நாம கீர்த்தனாத் த்யானாத் ஸ்பர்சனாத் அபி மஜ்ஜனாத் ப்ரஹ்மஹத்யாதய: பாபா: பஸ்மீபூதா பவந்து ச
உன்னுடைய நாமத்தைக் கீர்த்தனம், தியானம் செய்தால், (உன்னை) தொட்டு, ஸ்நானம் செய்தால், பிரம்மஹத்தி முதலான தோஷங்கள்கூடப் பொசுங்கிவிடும். இதனாலேயே, இந்திரகிலப் பகுதி, பாபவிநாசம் (பாபநாசம்) என்று பெயர்பெற்றது.
வியாச மாமுனிவர் ஒருமுறை, நாதாம்புஜத் திருத்தலத்திற்குச் செல்ல ஆசைபட்டார்.
தாமிரவருணிக் கரையிலுள்ள இத்தலத்திற்கு அவர் வருகையில், வழியில், கங்கை முதலான நதி தேவதைகளும் இதே இடத்தை நோக்கிப் பயணிப்பதைக் கண்டார். அந்த நதிப் பெண்களின் உடல்களில், பற்பலவிதமான காயங்கள், ரணங்கள். என்ன என்று விசாரிக்க, "தங்களில் வந்து மூழ்குவோர் தருகின்ற பாவங்களெல்லாம் இவ்வாறு ரணங்களைத் தந்துவிட்டதாகவும், எங்கு சென்றாலும் விமோசனம் கிட்டவில்லையென்றும், நாதாம்புஜம் சென்றால் பொருநையின் புண்ணியத்தால் தங்களின் பாவங்கள் தொலையும்' என்றும் தெரிவித்தார்கள். நதிப் பெண்களோடு நாதாம்புஜம் அடைந்த வேதவியாசர், தீர்த்தமாடிப் பொருநையைத் துதித்தார்.
நமோஸ்து ஹரிபாதாப்ஜ பூதயே, த்வத் அம்பஸôஹமாத்மானம் க்ஷôலயாமி ப்ரஸீத மே
மஹாமங்கலதே மாத: மலயாத்ரி ஸமுத்பவே தாதுமர்ஹஸி மே தீர்த்த மஜ்ஜனாத் மலினாபஹம்
மாயா மலயஜா புண்யா தாம்ரா முக்தா பலப்ரஸþ: கெüரீ மருத்வ்ருதா கங்கா சிவசூடா சிவோத்பவா
ஸர்வ தீர்த்தேடிதா ஸத்யா ஸர்வபாபப்ரணாசினீ ஞானப்ரதீபிகா நந்தா ஹரிஸôயுஜ்யதாயினீ
"திருமாலின் பாத கமலங்களிலிருந்து புறப்பட்டவளே, நமஸ்காரம். உன்னுடைய தீர்த்தத்தினால், என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறேன். பெரிய மங்கலங்களைத் தருபவளே, அன்னையே, மலைய மலையிலிருந்து உருவானவளே, உன் தீர்த்த ஸ்நானம், சகல துன்பங்களையும் நீக்கவல்லது', என்று இவளின் பெருமைகளைப் போற்றிய வியாசர், இவளின் திருநாமங்களையும் வாயாரப் புகழ்ந்தார். நாதாம்புஜம் என்னும் திருத்தலமே, இப்போதைய சேரன்மாதேவி.
தாமிரவருணி தேவியின் பெருமைகள் சொல்லில் அடங்கா. ஸ்ரீ மத்வ சம்பிரதாய குருதேவரான ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர், பாரத தேசங்களிலுள்ள தீர்த்தங்களின் பெருமைகளைக் கோத்துத் "தீர்த்தப் பிரபந்தம்' என்றொரு நூல் யாத்தார். இந்நூலில், தாமிரவருணியின் பெருமையைப் புகழ்கிறார்:
தாம்ரவர்ணீஸரித்தோயம் úஸவனீயம் முமுக்ஷிபி:
முக்தி கரோதி தத்ரத்யா சுக்திஸ்ச பதிதம் ஜலம்
பரம்பொருளை நாடுவோர், தாமிரவருணியில் தீர்த்தமாடவேண்டும்; இந்த நதியிலிருக்கும் சிப்பிகூட, தனக்குள் விழும் நீர்த்துளிக்கு முக்தி தருகிறதென்றால், நதி முழுமையையும் கேட்கவா வேண்டும்?
தொடரும்


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com