நிகழ்வுகள்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஸ்ரீபூவராக பெருமாளுக்கு திருபவித்ரோத்ஸவம் நவம்பர் 10 - இல் தொடங்கி 12 வரை நடைபெறுகிறது

• திருபவித்ரோத்ஸவம்
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஸ்ரீபூவராக பெருமாளுக்கு திருபவித்ரோத்ஸவம் நவம்பர் 10 - இல் தொடங்கி 12 வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமஞ்சனம், வேத திவ்ய பிரபந்த பாராயணங்கள், சாற்றுமுறை, திருவீதிஉலா போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு: 94431 81679. 
• திருக்கல்யாண வைபவம்
குரோம்பேட்டை, கிருஷ்ணாநகர் ஸ்ரீராமபக்த சமாஜ மண்டபத்தில், ஸ்ரீமுருகன் வள்ளி- தேவசேனா திருக்கல்யாண வைபவம் முற்றிலும் பஜனை பத்ததியில் நவம்பர் 10 -ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை கோவை சுந்தரம் பாகவதர் கோஷ்டியினர் நடத்துகின்றனர். நவம்பர் 9 -ஆம் தேதி பூஜை, திவ்யநாமம், டோலோத்ஸவம் நடைபெறும்.
தொடர்புக்கு: 98412 84637 / 98409 70419.
• நூதன மூர்த்தங்கள் பிரதிஷ்டை 
திருவள்ளூர் மாவட்டம், பானம்பாக்கம் கிராமத்தில் உள்ள பழைமையான அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் சிவாலயம் உள்ளது. ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜர் மற்றும் மாணிக்கவாசகர் நூதன உற்சவ மூர்த்திகள் எழுந்தருளச் செய்யும் வைபவம் நவம்பர் 9 -ஆம் தேதி காலை 7 மணி அளவில் கலச ஹோமம் மற்றும் அபிஷேகங்களுடன் நடைபெறுகின்றது. முன்னதாக, நவம்பர் 8 -ஆம் தேதியன்று மூர்த்தங்கள் கரிக்கோலமாக பானம்பாக்கம் ஊரினைச் சுற்றி வலம் வருகின்றது. 
தொடர்புக்கு: 93828 72358 / 95972 46637. 
• ஜெயந்தி மகோத்ஸவம் 
ஸ்ரீயோகீஸ்வர யாக்ஞவல்க்ய பரமாச்சாரியாரின் ஜெயந்தி மகோத்ஸவம், சென்னை பழைய பல்லாவரம் பெருமாள்கோயில் தெருவில் உள்ள யாக்ஞவல்க்ய சபா மண்டபத்தில் நவம்பர் 7 முதல் 10 வரை நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, ஸ்ரீசுக்ல யஜூர் வேத பாராயணம், சிறப்பு அபிஷேகம், ஹோமங்கள், நாம சங்கீர்த்தனம், குத்துவிளக்கு பூஜை, வேத பண்டிதர்களை கெளரவித்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருப்பதாகவும், நவம்பர் 10 -ஆம் தேதி ஞாயிறு அன்று உற்சவத்தில் கலந்து கொள்ள ஏதுவாக பல்லாவரம் ரயில்நிலையத்திலிருந்து மண்டபம் வருவதற்கு இலவச வேன் வசதி செய்திருப்பதாகவும் யாக்ஞவல்க்ய சபா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். 
தொடர்புக்கு: 98403 16797 / 98410 22284. 
• மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் சாலையில் ஏகனாம்பேட்டைக்கு அருகில் உள்ள நவாஸ்பேட்டையில் மிகவும் சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த ஐஷ்வர்யாம்பிகை (செல்வநாயகி) சமேத நவநிதீஸ்வரர் கோயிலில் சென்னை அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் 19.02.2017 அன்று உழவாரப்பணி மேற்கொண்டனர். கிராம மக்களின் முயற்சியாலும் பக்தர்களின் பங்களிப்பாலும் கோயில் புனரமைக்கப்பட்டு, 8.11.2019 - அன்று யாக சாலை பூஜைகள் தொடங்கி, நவம்பர் 10 -ஆம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு : திரு. சுகுமார் 96773 00562.
- வி. ராமச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com