பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

சித்தம் ஓட்டம் எதுவுமின்றி வெற்றுப் பாண்டமாக ஆகிவிடும்போது, அது தன் இயல்பான தன்மையைத் துறந்து விடுகிறது. அந்த நிலையில் அது தன்னுள்ளேயே பரந்த மோட்சம் என்ற ஆத்மானுபவம் பெறுகிறது. 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• சித்தம் ஓட்டம் எதுவுமின்றி வெற்றுப் பாண்டமாக ஆகிவிடும்போது, அது தன் இயல்பான தன்மையைத் துறந்து விடுகிறது. அந்த நிலையில் அது தன்னுள்ளேயே பரந்த மோட்சம் என்ற ஆத்மானுபவம் பெறுகிறது. 
- யோக வாசிட்டம்
• சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை ஆகிய ஐந்தும் ஆத்மஞானத்தை அபகரிக்கும் ஐந்து திருடர்கள். 
- குரு நானக்
• ஒழுக்கமே உண்மையான பெருந்தன்மை; திருப்தியே உண்மையான சந்தோஷம். செய்யக்கூடாத காரியத்தைச் செய்யாமல் இருப்பதே உண்மையான புலமை.
- புத்தர்
• ஒவ்வொரு ஜீவனும் தனியாகவே பிறக்கிறது; தனியாகவே இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து செல்கிறது.
- மனு 
• கிரியா யோகத்திற்கு மூன்று சாதனைகள் அல்லது வழிகள் இருக்கின்றன. அவை தவம், சாஸ்திரங்களை ஓதுதல், ஈசுவரப்பிரணிதானம் (இறைவனை வழிபடுதல்) என்பனவாகும்.
- யோக தரிசனம் 
• ஒரு மனிதன் இறந்தபிறகு கீழான பிறப்பு எடுக்க நேர்ந்தால், மறுமுறை மனிதப்பிறவி அடைவது மிகவும் கடினமான காரியமாகும். ஆகவே, நாம் இங்கு வாழும் ஒவ்வொரு நொடியும், நேர்மையும், ஆன்மிக நாட்டமும் உள்ள வாழ்க்கையே வாழ வேண்டும்.
- மகாவீரர்
• உலகில் நிலைத்தும் சலித்துக்கொண்டும் இருப்பவை அனைத்திலும் இறைவன் வியாபித்திருக்கிறார்; அந்தர்யாமியாய் அகில உலகிலும் பரந்திருக்கிறார்.
- யஜுர் வேதம் 
• பலாத்காரத்தால் தன் காரியத்தை முடிப்பவன் நீதிமான் ஆகான். 
- புத்தர்
• இங்கே இந்த உலகத்தில், எல்லாத் துக்கங்களையும் போக்குவதற்கு ஆண்மையோடு செய்யும் தவமுயற்சி ஒன்றைத் தவிர வேறு வழியில்லை.
- யோக வாசிட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com