பாசத்தை வென்ற ஆபிரகாமின் பக்தி

தந்தை தன் பிள்ளையிடம் வைக்கும் பாசம் மிகவும் வலிமையுள்ளது. வேதாகமத்தில்  பாசமா? பக்தியா? எது வலிமையுடையது என்பதை விவரிக்கும் நிகழ்ச்சி உள்ளது.
பாசத்தை வென்ற ஆபிரகாமின் பக்தி

தந்தை தன் பிள்ளையிடம் வைக்கும் பாசம் மிகவும் வலிமையுள்ளது. வேதாகமத்தில்  பாசமா? பக்தியா? எது வலிமையுடையது என்பதை விவரிக்கும் நிகழ்ச்சி உள்ளது.  ஆபிரகாம், சாரா வாழ்வில் நடந்த நிகழ்ச்சி அது.  ஆபிரகாம் நூறு வயது அடைந்தபோது தேவன் ஆசீர்வதித்தப் படி ஈசாக்கு என்கின்ற ஆண் பிள்ளையை சாராள் மூலம் கொடுத்தார். வானத்து நட்சத்திரங்களைப் போல், ஆற்றின் மணல் போல் உன் சந்ததி பலுகி பெருகும் என்பது கர்த்தரின் வாக்கு ஆபிரகாமின் நூறு வயதில் நிறைவேறியது.
ஆபிரகாம் தன் பிள்ளை ஈசாக்கின் மேல் மிக ஆழமான பாசம் வைத்தார். தனக்கு பிள்ளை வரம் அளித்து கானான் தேசத்தையும் கொடுத்திருந்த தேவனிடத்தில் மிகவும் பக்தி வைத்தார். இந்நிலையில் கர்த்தர் ஆபிரகாம் கனவில் தோன்றி "மிகவும் பாசத்துடன் வைத்திருக்கும் உன் ஒரே மகனான ஈசாக்கை நான் காண்பிக்கும் மலைக்கு அழைத்துச்சென்று அவனை தகன பலியிடுவாயாக'  என்றார். (ஆதியாகமம் 22: 2)
அதிகாலையில் எழுந்து தன் மகனை அழைத்துக்கொண்டு விறகு, கத்தி, நெருப்புடன் மூன்று நாள் பயணம். கர்த்தர் காண்பித்த மலைமேல் ஏறினான். ஈசாக்கு தம் அப்பாவைப் பார்த்து "விறகு, நெருப்பு, கத்தி உள்ளது பலியிட செல்லுகிறீரே ஆட்டுக்குட்டி எங்கே?'' எனக் கேட்டான். நீதான் அந்த பலி ஆடு! நான்தான் கர்த்தர் கேட்டபடி உன்னை தகன பலியிட போகிறேன் என்று பாசமுள்ள ஆபிரகாமினால் சொல்ல முடியவில்லை. நிச்சயம் பாசமுள்ள தந்தை இருதயம் வெடித்துப்போகும் . 
மலை உச்சியில் பலிபீடம் கட்டி விறகு அடுக்கி ஈசாக்கின் கைகால்களைக் கட்டி விறகு மீது கிடத்தி கத்தியை எடுத்து கழுத்தை அறுக்க ஓங்கின வேலையில் வானத்திலிருந்து சத்தம்  "ஆபிரகாமே' உன் மகன் மேல் கையை போடாதே. பாசத்தை தள்ளி தெய்வ பக்திக்கு கீழ்படிந்தாயே. அதோ.. புதரில் ஓர் ஆடு சிக்கியுள்ளது. அதைக் கொண்டுவந்து பலியிடு'' என்றது. ஆபிரகாமின் தந்தை பாசத்தைவிட, அவர் கர்த்தரிடத்தில் வைத்திருந்த பக்தி பெரியது.
பிதாவாகிய தேவன் அவர். பிள்ளையாகிய நம்மீது மிகப் பெரிய பாசம் வைத்துள்ளார். நாம் மீட்படைய பாவம் சாபம் நீங்க, தம் ஓரே பேரான குமரன் இயேசுவை இப்பூமிக்கு அனுப்பி நம்மை மீட்க அவரை பார சுமை சிலுவையை சுமக்க பாடுபட, காயம் அடைய  கைகளிலும் கால்களிலும் ஆணி அறைய  ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் பாவமில்லாத ரத்தம் பரிகாரமாக நமது பாவத்துக்கும் சாபத்துக்காக கொடுக்கப்பட்டது. பிதா நம்பேரில் வைத்த பாசம் தம் மகன் இயேசுவையே பலியாகத் தந்து மரித்த இயேசுவை உயிரோடு எழுப்பினார்.
உபவாச காலம், இயேசு பாடுபட்ட காலம் இது. இயேசுவின் பாடுகள் ரத்தம் சிந்தியது. சிலுவை மரணம். தேவன் அவரை உயிரோடு எழுப்பியதை தியானிப்போம். பாசத்தோடு பக்தியில் சிறந்தவர் ஆவோம். இயேசுவின் பாடுகள் துன்பத்தில் பங்கு பெறுவோம். நம் பேரில் பாசம் வைத்த பிதாவைப் போற்றுவோம்.
- தே. பால் பிரேம் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com