பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

எல்லாக் கலைகளிலும் மக்கள் பெறும் திறமை, போதிய அளவுக்குத் தொடர்ந்த பயிற்சியின்மையால் ஒளி மங்கிவிடுகிறது.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* எல்லாக் கலைகளிலும் மக்கள் பெறும் திறமை, போதிய அளவுக்குத் தொடர்ந்த பயிற்சியின்மையால் ஒளி மங்கிவிடுகிறது. ஆனால் ஆத்மவித்யை என்ற சத்தியஞானமோ என்றும் சுடர்விட்டு வளர்ந்துகொண்டே போகிறது.
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
* மூங்கில்மரத்தில் அழகிய இலைகள் அதிகமாக இல்லாமல் போனால் அது வசந்தகாலத்தின் குற்றமா? ஆந்தைக்குப் பகலில் கண் தெரியாவிட்டால் அது சூரியனின் குற்றமா? சாதகப் பறவையின் வாயில் மழை நீர் விழாவிட்டால் அது மேகத்தின் குற்றமா? ஏற்கெனவே விதி தலையில் எழுதியிருப்பதை அழித்துவிட யாரால்தான் முடியும்? 
- பர்துருஹரியின் நீதி சதகம்
* "இந்த உலகத்தில் சுகம் கிடைக்கிறது' என்ற எண்ணத்தில் மக்கள் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே காலம் அவர்களை விழுங்கிவிடுகிறது. இந்த காலத்திடமிருந்து தப்பிப்பவர்கள் யாரும் இல்லை. 
- ஸ்ரீ ராமபிரான்
* உண்மையில் ஒருவருக்கு இறைவனிடம் பக்திதான் தேவைப்படுகிறது. சாதிக்க முடியாததையும் ஒருவர் பக்தியின் மூலிலம் சாதிக்க முடியும்.
- ஸ்ரீ சாரதாதேவியார்
* ஒருவனிடம் பணம் சேரச்சேர பேராசை, கோபம், ஆணவம், பொறாமை போன்ற தீய குணங்கள் எல்லாம் வளர்கின்றன. இவைகள் மனத்தூய்மைக்கு மிகப் பெரிய தடைகளாகும். 
- ஆதிசங்கரர்
* பிறப்பு இறப்பு, இந்த உலகத்தின் இன்ப துன்பங்கள் அடங்கிய பிறவிச்சுழல் போன்றவற்றை உள்ளபடியே அறிந்துகொள்ள விரும்புபவன் இவற்றை விவேகபுத்தியால் மட்டும்தான் அறிந்துகொள்ள முடியும்.
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்)
* அவமானத்தையும் துன்பத்தையும் பொறுத்தவன் சுகமாகத் தூங்குவான், சுகமாக நடமாடுவான். 
- மனுஸ்மிருதி 
* ஒரு மரத்தில் கோரமான தீப்பற்றி எரியும்போது பறவைகள் அங்கு கூடாது. அதுபோல் மனிதனிடம் உலகப்பற்றுகள் தினமும் வாழுமிடத்தில் ஞானம் வெளிப்படாது. 
- புத்தர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com